இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

என் வாழ்வின் மோட்சம் நீயடி கதை திரி

Swarnika

Moderator
" எல்லை இல்லா காதல்
எல்லை தாண்டா மோகம்
நில்லாமல் செல்லும் சோகம்
அவளே அவனின் உயிரின் தாகம் "

என் மேல நம்பிக்கை வச்சு இருந்தா போதும் பேபி என்றவன் அவன் நெற்றியில் தன் இதழைப் பதிக்க அவளோ கண்களை மூடிக் கொண்டாள் .

பேபி கண்ணைத் திறடி என்று அவள் கண்களில் முத்தமிட ம்ஹூம் என்று சொல்ல

கண்ணைத் திறந்து பாருடி என சொல்ல கண்களை திறந்து அவனைப் பார்த்தாள் . ஏனோ அவனைப் பார்க்கவும் மனதில் நாணம் வந்து ஒட்டிக் கொண்டது . அவள் கண்களை பார்த்துக் கொண்டே அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட அவளோ அவன் கண்களைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் .

அவள் கண்களில் தோன்றும் உரிமை உணர்வு அவள் மேல் கொண்ட மோகம் வெளிப்படையாக தெரிய பாவை அவளுக்கு அச்சம் தான் வந்தது .

பேபி பயப்படாதடி என்றவன் கண்கள் ஒரு மாதிரி மிளிர அவன் கண்களைப் பார்த்தகளின் கையோ அவன் கருவிழிகளை ஆராய அவன் முகத்தை தாங்கப் போக சட்டென்று குனிந்து அவள் இதழ்களை தன் இதழ்களுக்குள் அடைத்தவன் கண்களை மூடிக் கொண்டான் .

அவன் முத்தத்தில் மயங்கியவளுக்கு வேறு எண்ணம் எதுவும் தோன்றவில்லை . அவனுக்குள் அடங்கித் தான் போனாள் . நேரம் செல்ல செல்ல அவன் கரங்களோ அழுத்தமாக அவள் மேனியில் இடம் மாற பெண்ணவளோ வெக்கமும் தயக்கமும் கொண்டாள் .

இதுவரையில் அவன் தொட்டாலே கோபத்தில் அடங்காமல் எதிர்ப்பவளை அவன் வலிமை கொண்டு தான் அவளை வளைத்துக் கொள்வானே தவிர அவளும் வேறு வழி இல்லாமல் அவனுக்கு அடங்குவாலே தவிர இப்படி தன் மேல் நம்பிக்கை கொண்டு முழுதாய் கொடுத்து விட்டு அவனுக்கு இணங்குவது மேலும் அவன் உணர்வுகளைத் தூண்டியது . அவளிடம் சிறிது எதிர்ப்பும் இல்லை . அவன் கண்களில் தோன்றிய புது உணர்வில் அவளை அவனிடம் முழுதாய் ஒப்புவித்தவளிடம் சின்ன சின்ன மறுப்புகள் மட்டுமே இருக்க அதனை எளிதாக முறியடித்து அவளை தனக்குள் புதைத்துக் கொண்டான் கந்தர்வன் .

பேபி என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவனின் கரங்கள் அவள் சேலை களைத்தது . அவளுக்கு அவனே உடையாகிப் போக அவனுக்குள் முழுதாய் மூழ்கி முத்தெடுக்கப் போகும் வேளையில் அறைக்கதவு தட்டப்பட்டது . அதில் நிவியின் மயக்கம் கலைய தான் இருக்கும் நிலை உணர்ந்து அவனை அணைத்துக்கொண்டாள் . அதில் சிரித்தவன்

சாரி பேபி என்றான் . கதவு தட்டும் ஓசை மட்டும் கேட்கவில்லை என்றாள் இந்நேரம் தான் எல்லையை கடந்து இருப்போம் என நினைத்தவன் மீண்டும் சாரி பேபி என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளை விட்டு விலகி தள்ளிப் படுக்கவும் அவள் போர்வையோடு தன்னை சுற்றிக் கொண்டு அவனை பயத்துடன் பார்க்க

ஏண்டி இந்த பயம் என்றான் அவள் கண்களில் தெரிந்த அச்சத்தில் அவளை தன்னை நோக்கி இழுத்து

கதவு தட்டுராங்க என சொல்ல

ஆமா அதுக்கு என்ன என்றவனைக் கண்டு அவள் என்ன சொல்வது என தெரியாமல் விழிக்க

சரி போ என அவளை விட

கண்ணை மூடுங்க பிளீஸ் என கெஞ்ச அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கண்ணை மூடி மறு பக்கம் திரும்பிக் கொண்டான் . அவள் வேகவகமாய் தன்னை சரிப்படுத்தி விட்டு முகம் கழுவி வரவும் இவனும் டிராக் பேண்ட் டிஷர்ட் போட்டு இருந்தான் .

நீங்க எப்போ டிரஸ் சேஞ்ச் பன்னீங்க

இப்போ தான் என்றவனின் பார்வை அவளை வருடியது . அவன் பார்வையில் நெளிந்தவளை தன்னை நோக்கி இழுத்து அணைத்தான் . அவன் அணைப்புக்குள் அடங்கியவள் அவன் நெஞ்சில் தலை சாய்க்க அவளை மென்மையாக அணைத்தவன்

தாங்க்ஸ் பேபி என்றான். அவள் எதற்கு என்று கேட்க வில்லை . அவனும் எதற்கு என்று சொல்லவில்லை .

இருந்தாலும் உன் நலன்விரும்பிகள் உன்னை நல்லாவே ப்ரொடெக்ட் பண்றாங்கடி என அவன் சொல்ல அவன் நெஞ்சில் இருந்து தலையை நிமிர்த்தியவள்

பிளீஸ்ங்க பாவம் அவங்க ரொம்ப நேரமா தட்டுறாங்க என அவனை விட்டு விலக அவளை விடாமல் பிடித்தவன் தன்னோடு இருக்கிக் கொண்டு

கதவை மட்டும் தட்டல பேபி போனையும் தட்டி கிட்டே இருப்பானுங்க போல என சொல்ல அவள் நிமிர்ந்து பார்க்க தன் போனை அவனிடம் காட்டினான் .

அதில் நால்வரிடம் இருந்தும் நானூறுக்கு மேற்பட்ட மிஸ்டு கால்ஸ் வந்து இருந்தது .

அய்யோ அவங்க பயந்துட்டு இருப்பாங்க என அவன் பிடியில் இருந்து விலக எத்தனிக்க

கொஞ்ச நேரம் தவிக்கட்டும்டி என்னை பார்த்தா அவங்களுக்கு என்னன்னு தெரியுது என அவளை அணைக்க

விடுங்க பாவம் அவங்க நீங்க என் கிட்ட எப்போ நல்லமுறையா நடந்து இருக்கீங்க . அப்போ அவங்க உங்களை என்ன நினைப்பாங்க எனக் கேட்க

ராட்சசன் என்றான் அவன் புன்னகையுடன் . அவன் புன்னகை கண்டு மயங்கித் தான் போனாள் நிவி . அவள் பார்வையை அறிந்தவன் மனமோ மகிழ்ச்சி கொண்டது . தன்னை அவள் ரசிக்கிறாள் என நினைக்கையில் ஏனோ இன்னும் அழகாய் உணர ஆனவனுக்கும் வெட்கம் வந்ததுவோ .

நிவியோ அவன் முகத்தையே கூர்ந்து கவனித்தவள் அவன் முகம் சிவக்க துவங்கவும்

என்ன ஆச்சு ஏன் உங்க முகம் சிவக்குது என சிரிப்புடன் கேட்க அதில் மேலும் சிவந்தவன் அவளைக் கட்டிக் கொண்டு

பேபி பேபி உன்னால தான் எனக்குள்ள என்னன்னவோ மாயம்லாம் நடக்குதுடி என்றவன் மனதோ உள்ளுக்குள் ஐ லவ் யு டி வேதா பேபி எனக் கத்தி சொல்லியது .

என்னங்க என்று நிவி அழைக்க

என்னங்க என்றான் அவனும் அவளை போல

பிளீஸ்ங்க அவங்க ரொம்பவும் தவிச்சு போய் இருப்பாங்க என சொல்ல

அதுக்கு நான் என்னங்க பண்றது என அவன் கேலியுடன் கேட்க அவன் நெஞ்சில் குற்றினாள் வஞ்சி

பேபி போன் வாங்கி தரவாடா என அவள் கண்களைப் பார்த்துக் கேட்க பின் அவனே வேண்டாம் இப்போ வேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நானே சர்பிரைசா வாங்கித் தரேன் என்றவன் ஆர் யு ஓகே பேபி எனக் கேட்க அவன் தனக்காகத் தான் தன்னை சமநிலைப்படுத்து வதற்காக தான் இதுவரையில் பேசிக் கொண்டு இருக்கிறான் என்றவளின் பார்வை அவன் முகத்தையே பார்த்தது .

என்னடி என்ன வேணும் என் பேபிக்கு எனக் கேட்க

ம்ஹூம் என்று தலை ஆட்டினாள் அவள் .

அவளை ஆழ்ந்து பார்த்தவன் தன் உயரத்திற்கு தூக்கி கிஸ் மீ பேபி என சொல்ல அவள் கண்களோ அகல விரிந்தது . அவளோ அதைத்தான் நினைத்து இருந்தாள் . ஏனோ அவனை முத்தமிட வேண்டும் என்ற ஆசை துளிர்க்க அவன் என்ன நினைப்பானோ என்று நினைத்து தான் தயக்கம் கொண்டாள் . சிவா அதை புரிந்து கொண்டு அவனை முத்தமிட சொல்லவும் கண்கள் மலர்ந்தது அவளுக்கு .

கிஸ் மி பேபி இன்னும் கொஞ்ச நேரம் விட்டா கூட உன் அண்ணங்க கதவை உடச்சிட்டு வந்திடுவானுங்கடி என சொல்ல நிவியோ தயங்கிக் கொண்டே அவளாய் ஆசைப்பட்டு அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள் .

அவ்வளவு தானா பேபி என சிவா கேட்க

அவனை நிமிர்ந்து பார்க்கவும் கூச்சம் கொண்டு ம் என ததலை ஆட்டினாள் .

வேதா எனக்கு உன் கிட்ட என்ன வேணும் தோணுதோ அதே மாதிரி தான் உனக்கும் தோணும் . எனக்கு இருக்கிற மாதிரி தான் உனக்கும் பீலிங்க்ஸ் இருக்கும் . சரியா . உனக்கு என்னை கிஸ் பண்ணனும் ஹக் பண்ணனும் அதுக்கு மேல உனக்கு நான் வேணும் தோனிச்சு அப்படின்னா நீ தயங்க கூடாது . நான் முழுசாவே உனக்கு சொந்தம் . உனக்கு மட்டுமே சொந்தம் . நீ என் கிட்ட தயங்கவோ பர்மிஷன் கேட்டு நிக்கவோ கூடாது ஓகே பேபி என சொல்ல ம் என்று தலை ஆட்டினாள் .

பேபி உனக்காக நெத்தில குடுத்த எனக்காக என்று அவன் இதழை காட்டியவன் இங்கே குடுப்பியா எனக் கேட்க அவன் கொடு என்று கேட்காமல் கொடுப்பியா எனக் கேட்கவும் அவன் கண்களைப் பார்த்தவள் பின் அவன் இதழ் நோக்கி குனிந்து முத்தம் பதிக்க அதை தனதாக்கி கொண்டான் மாயக் கண்ணன் . (அடேய் உங்க ரொமான்ஸ அப்புறம் வச்சுக்கங்கடா வெளில கதவ உடைக்கவே போறானுங்கடா அடேய் எம்மா சோ ஆண்டவா சண்டைன்னாலும் ஓவர் ஃப்ளோ தான் ரொமான்ஸ்னாலும் ஓவர் பிலோ தான் இதை வச்சுக்கிட்டு நான் என்ன தான் பண்ணட்டும் )

சற்று நேரத்தில் இருவரும் விலக பேபி நான் முதல் கதவை திறக்கிறேன் நீ ரிலாக்ஸாவா ஓகே என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு கதவை திறக்க அங்கு நிவியின் நலன் விரும்பும் அத்தனை ஜீவன்களும் அங்கு தான் இருந்தது . ரிதன்யாவும் அங்கு தான் நின்று இருந்தாள் . மனதிற்குள் நிவியை சிவா வறுத்து எடுத்து இருப்பான் என சந்தோஷம் கொண்டாலும் இவ்வளவு நேரம் ஒரே அறையில் அதுவும் தன்னை கூட அனுமதிக்காத அவன் அறைக்குள் அவளுடன் ஒன்றாக இத்தனை மணிநேரம் இருந்தது சந்தேகத்தை கொடுத்தது .

அவர்கள் முகத்தில் இருந்த கோபத்தையும் அதை விட அதிகமாக இருந்த கவலையையும் பார்த்தவன்

எதுக்கு இப்போ என் ரூம் முன்னாடி செக்யுரிட்டி வேலை பார்க்கிறீங்க எனக் கேட்க அவர்களோ அவன் பேச்சை கவனிக்காமல் அவன் பின்னால் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர் .

உங்களைத் தான் என்றான் சற்று குரல் உயர்த்தி

ஏண்டா ஃபோன் எடுக்கலை , கதவை எம்புட்டு நேரமா தட்டுறோம் ஏன் திறக்கலை என்னடா பண்ண நிவிய என கேட்க

கதவை யார்டா ரொம்ப ஃபோர்ஸ்ஸா தட்டுனது எனக் கேட்க

நான் தான் அதுக்கு என்ன இப்போ என்றான் ஷியாம்

தாங்க்ஸ் என்றான் சிவா

எதுக்கு என அவன் கேட்க

கொஞ்ச நேரம் மிஸ் ஆகி இருந்தாலும் நான் என் வேதாவோட நம்பிக்கை இழந்து இருப்பேன் என நினைத்தவன்

ஏன் சொன்னா கேட்டுக்க மாட்டியா என எதிர் கேள்வி கேட்க அப்போது தான் அவன் கையில் இருந்த கட்டை பார்த்தனர் .

டேய் என்னடா கைல கட்டு என கார்த்திக் கேட்க

ரிதனியாவோ பதறி அய்யோ சிவு என்ன ஆச்சு என அவன் அருகில் வரப்பார்க்க அவனோ அவளை பார்வையாலே எட்டி நிறுத்தினான் . அவளும் அவன் பார்வையை உணர்ந்து நின்று கொண்டாள் . இருந்தாலும் அவள் மனம் உள்ளே என்ன நடந்து இருக்கும் என நினைக்காமல் இல்லை ,.

டேய் என்னடா பண்ண நிவிய அடிச்சே கொன்னுட்டயா என ஷியாம் கேட்க சிவா அமைதியாக இருக்கவும் எல்லோருக்கும் இதயத் துடிப்பு ஏகத்துக்கும் கூடியது .

சொல்லுடா என கார்த்திக் கேட்க

அண்ணா சொல்லுங்க அண்ணா என காவ்யா , ராதிகா இருவரும் கெஞ்ச நிவியோ
அவன் பின்னே இருந்து எட்டிப் பார்த்தாள் .

"பாவையின் நம்பிக்கை
பகலவனுக்கும் குளிர்ச்சியை
பரிசளித்ததோ "
 

Swarnika

Moderator
" பக்கம் வர துடிக்கும் ஆணவன்
வெட்கம் கொண்டு நிற்கும்
பெண்மையைக் கண்டு
மயங்கி போனதால் தானோ
என்னவோ விலகிச் செல்ல துணிந்தானோ "

சிவாவின் பின்னே இருந்து எட்டிப்பார்த்த நிவியைக் கண்டவர்களுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது . நிவியோ தரையில் தலையை புதைத்துக் கொண்டாள் . யாரையும் நிமிர்ந்து பார்க்கவும் துணிவில்லை . வெட்கம் வேகமாக வந்து ஒட்டிக் கொண்டு சேவகம் செய்தது அவளுக்கு . அவள் நிலையை நன்கு அறிந்த சிவா அவளை சகஜமாக்கும் பொருட்டு மற்றவர்களிடம் பேச்சு கொடுத்தான் .

இந்தா உன் தங்கச்சி உயிரோட தானே இருக்கா இல்லை மோகினியா மாறிட்டாளா எனக் கேட்க

ஷியாம் கார்த்திக் இருவரும் பல்லைக் கடித்தனர் . நிவியை மறைத்துக் கொண்டு தான் சிவா நின்று இருந்தான் .

நீ தள்ளுடா நாங்க என் தங்கச்சிக் கிட்ட பேசிக்கிறோம் என சொல்ல அவனோ விலக எத்தனிக்க நிவியோ யாரும் அறியா வண்ணம் அவன் பின்னால் அவன் டிஷர்ட்டை இறுக்கிப் பிடித்தாள் .

பேபி என மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் வெளியே அவர்களிடம்

தள்ள முடியாது என்னடா பண்ணுவீங்க என விதண்டாவாதம் செய்ய

வேண்டாம் சிவா வம்பு பண்ணாத . நீ எதுக்கு நிவிய ரூம்க்கு கூப்பிட்ட அப்படின்னு எங்களுக்கு நல்லா தெரியும் என சொல்ல பின்னால் நின்று சிவாவின் டிஷர்ட்டை பிடித்து இருந்த கைகளில் நடுக்கம் பரவ அவன் முதுகில் முகம் புதைத்து இருந்தாள் நிவி .

வேண்டாம் பேபி இப்படி எல்லாம் பண்ணாதடி யு ஆர் கில்லிங் மீ பேபி என மனதிற்குள் நினைத்தவன் தன் தலையை அழுந்தக் கோத அவனை விசித்திரமாக பார்த்த ஷியாம்

என்னடா எனக் கேட்க

இவன் வேற என நினைத்தவனுக்கு பெண்ணவளின் செய்கையில் கண்கள் மின்னியது . தன்னைக் கண்டு விலகி ஒடுபவள் இன்று தன்னிடமே அடைக்கலம் ஆகி இருப்பது அவன் மனதில் எல்லை இல்லா சந்தோஷத்தை அளித்த வேலையில் அவள் நம்பிக்கையை காப்பாற்றுவோமா என்ற கவலையும் சேர்ந்தே பிறந்தது .

என்னடா பண்ண நிவிய காலை ஒடிச்சிவிட்டுட்டயா என கார்த்திக் கேட்க

ஏய் என்ன பார்த்தா உங்களுக்கு எப்படிடா தெரியிது ரவுடி மாதிரி தெரியுதா என சிவா வார்த்தை வளர்க்க

நீ அந்த பிள்ளை கையையே காயப் படுத்துனவன் காலை ஓடிச்சு விட்டு இருக்க மாட்ட அப்படின்னு என்ன நிச்சயம் என ஷியாம் கேட்க

சிவாவின் பின் இருந்தவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பின்னர் அவன் டிஷர்ட்டை விட அவள் இயல்பாகிவிட்டாள் என அறிந்தவன்

ஓ அப்படியா என கேட்க

அப்படித்தான் என ஷியாம் சொல்ல காவ்யா , ராதிகா இருவரும் அமைதியாகத் தான் இருந்தனர் . மனதிற்குள் நிவிக்கு என்ன ஆனதோ என்ற கவலையும் இருந்தது . அதனால் ஆண்கள் வாயாடிக் கொண்டு இருப்பதைக் கண்டு எரிச்சல் கொண்டு அவர்களை முறைத்தனர் .

சரி பார்த்துக்கோங்க என்று நிவியை முன்னால் இழுத்து விட்டவன் நல்லா பார்த்துக்கங்க இவ உயிரோட தான் இருக்கா நம்பலைன்னா வேதா உன் காலை காட்டுடி அப்படியே கேட் வாக் பண்ணு என்றவன் வேண்டாம் வேண்டாம் நீ நர்மலாவே நடந்துக் காட்டு அப்போதான் உன் பாசமலர்கள் நம்புவானுங்க என சொல்ல ஷியாம் கார்த்திக் இருவரும் அவனை முறைக்க

நிவியை தங்களிடம் இழுத்துக் கொண்டனர் காவ்யா , ராதிகா இருவரும் .

பாருடா என மனதில் நினைத்த சிவா அவர்களைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் .

ராதிகா , காவ்யா இருவரும் அவளை தலை முதல் கால் வரை பார்க்க அவளோ நெளிந்தாள் . அவள் கண்ணத்தைப் பார்க்க அதிலே சிவாவின் கை தடம் இருக்க

ஏன் அண்ணா அடிச்சீங்க எனக் கேட்க நிவி , ரிதியைத் தவிர எல்லோரும் அவனை முறைத்தனர் . சிவா அமைதியாக நின்று இருந்தான் . பார்வை முழுதும் அவனின் பேபி இடத்திலேயே இருந்தது .

உன்னைத் தாண்டா ஏண்டா இப்படி இருக்க எதுக்குடா அடிச்ச நிவிய . கண்ணத்துல கை தடம் எப்படி இருக்கு கொஞ்சமாவது மனசாட்சிக்கு நியாயமா நடந்துக்கோடா என ஷியாம் கவலையுடன் கேட்க

ஏண்டா நான் அவ கண்ணத்துல அடிச்சது மட்டும் தான் உனக்கு தெரியுதா வேற எங்கேயும் மார்க் தெரியலையா என நிவியை கூர்ந்து பார்க்க அவளோ அவனை முறைத்தாள் . அவள் முறைப்பதை கண்டு சிரிப்பு வர அதை அடக்கியவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் .

என்ன சொல்ற என்றான் கார்த்திக் புரியாமல்

தாடை ஓரத்துல மார்க் இருக்கே என சொல்ல நிவியோ தலை கவிழ்ந்து கொண்டாள் .

நிவி எங்கே நிமிரு என காவ்யா ராதிகா இருவரும் அவள் முகத்தைப் பார்க்க எத்தனிக்க

இல்லை பிளீஸ் வேண்டாம் என அவள் கெஞ்ச

நிமிர்ந்து பாரு நிவி எங்கே காட்டு என ராதி அவள் முகத்தைப் பார்க்க நிவியோ கண்ணை மூடிக் கொண்டாள் .

ஆமா இங்கே பாருங்க மார்க் இருக்கு என அவன் தாடையை இறுகப் பற்றியதில் உண்டான தடத்தை காட்ட நிவிக்கோ அப்பொழுதுதான் மூச்சு விட முடிந்தது . கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தவள் பொறுக்கி என முணுமுணுக்க அவனோ சிரித்துக் கொண்டான் .

நீ எல்லாம் மனுசனே இல்லடா என கார்த்திக் சொல்ல

உன்னை நான் என்னடா பண்னேன் என்றான் சிவா . அவன் பேச்சு சரி இல்லை ஏதாவது ஏடாகூடமாகத் தான் பேசப் போகிறான் என அறிந்த ஷியாம்

போங்க நிவிக்கு சாப்பாடு கொடுங்க எல்லாரும் கீழே போங்க என சொல்ல பெண்களும் கீழே சென்றனர் . ரிதி அவன் நிவியை அடித்து துன்புறுத்தி தான் உள்ளான் என நினைத்து சந்தோஷம் கொண்டு கீழே சாப்பிட சென்றாள் .

ஏண்டா அவங்களை எல்லாம் அனுப்பி வச்ச என்றான் கார்த்திக்

டேய் என காத்திக்கை சிவா அழைக்க

என்னடா என்றான் அவன்

யப்பா சாமி எதையும் சொல்லி தொலைச்சுடாதடா நீ பாட்டுக்கு சொல்லிட்டு போயிடுவ கேட்கிறது எங்க காது தானே வேணாம்டா என ஷியாம் சொல்ல

சரி உனக்காக விடுறேன் என்றான் சிவா .

பிளீஸ் டா நிவி ரொம்ப பாவம் . ரொம்ப கஷ்டப்படுத்திட்ட . இதுக்கு மேலயும் வேணாம் டா என சொல்ல ம் என்றான் சிவா .

சரி வா சாப்பிடப் போகலாம்

இந்நேரத்திற்கேவா என சிவா சொல்ல

மணி பத்து ஆகப் போகுது என்றான் கார்த்திக் சிவாவை முறைத்துக் கொண்டே

ஓ பத்து தான் ஆகுதா சரி வாங்க டின்னர் சாப்பிடலாம் என கதவை அடைத்து விட்டு அவர்கள் தோள் மேல் கைப் போட்டு அழைத்து செல்ல அனைவரும் சாப்பிட்டு முடித்தனர் .

கொஞ்ச நேரம் பேசிவிட்டு தூங்க சென்றனர் . சிவா நிவியிடம் தலை அசைத்து விட்டு தூங்க செல்ல இவளும் தன் அறைக்கு சென்றாள் .

பாயை விரித்து படுத்த நிவிக்கோ உறக்கம் வர மறுத்தது . சிந்தனையில் சிவாவே வலம் வந்தான் . அவன் அவளிடத்தில் மட்டும் தான் இவ்வாறாக நடந்து கொள்கிறான் என்பதில் அவளுக்கும் சிறிதும் சந்தேகம் இல்லை . ஏனென்றால் அவளே கண் கொண்டு பார்த்து இருக்கிறாள் தான் . ரிதன்யா அவன் அருகில் வந்து அமர்ந்தாளே ஒன்று விலகி அமர்வான் இல்லை என்றால் பார்வையாலயே எட்டி நிற்க வைத்து விடுவான் .

இப்போது நிவி தன்னை பற்றி சுய அலசலில் இறங்கினாள் . முதலில் சிவாவிடம் பயம் இருந்தது . அடுத்து வெறுப்பு வந்தது . இப்போ அவனிடம் அவளுக்கு பயமும் இல்லை வெறுப்பும் இல்லை . ஆனால் ஏதோ ஒரு புதுவித உணர்வு . (யம்மா இப்போ தான் உன் வீட்டுக் காரனுக்கு மண்டையில பல்ப் எரிய வச்சேன் . அதுக்கே நாக்கு தள்ளிடுச்சு இதுல உனக்கு நான் எப்போ புரியவச்சு ஹூம் அட போங்கய்யா )

அது என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டு இருந்தவள் ஒருவேளை இதைத்தான் மஞ்சள் கயிறு மாயம் சொல்வாங்களோ (அப்போ உனக்கு அவன் மேல காதல் இல்லை )

ஒருவேளை நான் அவர என் புருஷனா பார்க்க ஆரம்பிச்சுட்டேனா (ஆரம்பத்தில இருந்தே அவன் உன் புருஷன் தான் நிவி )

அதனால் தான் அவர் தொட்டா என்னால மறுப்பு சொல்ல முடியலையா நானும் மயங்கிடுறேன் (நான் வேணா முகத்துல தண்ணி தெளிச்சு விடுறேன் எழுந்துக்குறியா )

நான் என்ன பண்றது . ஒருவேளை அவர எனக்குப் பிடிச்சு இருக்கோ (அப்பாடா லைட் லைட்டா எரியுது )

அது எப்படி பிடிக்கும் ரிதிய தானே அவர் லவ் பண்ராறு என யோசித்தவளுக்கு தலை வழிப்பது போல இருந்தது . (உன்னை எல்லாம் ஹீரோயினா போட்ட பாவத்துக்கு எனக்கு தான் தலை வலிக்கணும் )

ஆனா அவர் என்கிட்ட சொன்னாரே அவர் எனக்கு தான் சொந்தம் அப்படின்னு . அப்போ ரிதன்யா என தன்னை தானே குழப்பிக் கொள்ள இறுதியில் அவள் மனசாட்சி அவளுக்கு உதவியது .

நிவேதா

என்ன

உனக்கு மூளை இருக்கா

என்ன

இல்லை உனக்கு மெமரில எதுவும் பிரச்சனையா

ஏய் என்ன இப்படி எல்லாம் பேசுற

அவன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே

அதெல்லாம் நிறையாவே இருக்கு

அப்போ என்ன பண்ற

உன் புத்தி கெட்ட மூளைய ஆஃப் பண்ணி வச்சுட்டு தூங்குற வழியப் பாரு . வந்துட்டா அவளையும் குழப்பி எல்லோரையும் குழப்ப எனக் காரித் துப்ப

என்ன நீ ரொம்ப ஓவரா போற

சரி நீ போய் சிவா கிட்ட கேளு இந்த மாதிரி எனக்கு குழப்பமா இருக்குன்னு சொல்லு அவன் நல்லா தீர்த்து வைப்பான் என சொல்ல

இல்லை இல்லை நான் மாட்டேன்

அப்போ அமைதியா தூங்கு என கோபம் கொள்ள

தூங்கறேன் தூங்கறேன் நீயும் போய் தூங்கு

எங்களுக்கு தெரியும் என்ற மனசாட்சி அவள் தூங்கவும் ஆனாலும் இவளுக்கும் அவ மேல அடி ஆழத்துல லவ் இருக்கு ஒத்துக்கமாட்டேங்றா சரி தெரியும் போது தெரியட்டும் என முணுமுணுத்த மனசாட்சி தூக்கத்தை தழுவியது .


இங்கு சிவாவோ தன் படுக்கையில் சாய்ந்தவனுக்கு அவள் வாசம் தான் வந்து நாசியைத் துளைத்தது . இப்போவே அவள் வேண்டும் அவளை சும்மாவேனும் கட்டிக் கொண்டாவது தூங்க வேண்டும் என ஆசை கொண்டது மனது . ஆனால் அதே சமயம் அப்படி கட்டிக் கொண்டால் உன்னால் அமைதியாக தூங்கிவிட முடியுமா என கேள்வி கேட்க சத்தியமாக முடியாது என அவன் உதடுகளோ வார்த்தைகளை வெளியிட்டது .

பேபி என்னால நம்பவே முடியலடி . நான் இப்படி உனக்கு அடங்கி போவேன் அப்படின்னு சத்தியமா கனவில கூட நினைச்சு பார்க்கலடி பேபி . உண்மைய சொல்லப் போனா யாருக்குமே நான் அடங்குனது இல்லை . ஆனா இப்படி உன்னை நினைச்சு புலம்புவேன்னு சத்தியமா எதிர்பார்க்கவே இல்லடி பேபி .

எஸ் ஐ லவ் யு பேபி பட் அட் தி சேம் டைம் ஐ நீட் யு மேட்லி பேபி . என்று பெருமூச்சு விட்டான் .

நான் இங்கே இருந்தா சரி வராது பேபி . உன்கிட்ட தெளிவா நான் காதலை உணர்ந்து சொல்றதுக்குள்ள உன்னை என்னவளா ஆக்கிடுவேனோ அப்படின்னு பயமா இருக்குடி . எனக்கு தெரியும் நான் உன்னை மட்டும் தான் லவ் பண்றேன் அப்படின்னு . ஆனா நீ . எனக்கு தெரியும் பேபி நீயும் உன் ஆழ்மனசில என்னை புதைச்சு வச்சு இருக்க .அதை நீ உணரனும் அப்படின்னா நான் உன்னை விட்டு சில காலத்துக்கு பிரிஞ்சு இருக்கணும் பேபி . பிரிவு தான் பேபி உணக்குள்ள என் மேல இருக்கிற காதலை வெளில கொண்டு வரும் .அதோட நான் உன்மேல வச்சு இருக்கிற காதல்இன்னும் ஆழமாகும் .

நீ என் கிட்டத்துல இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்டி . நீ என்னை எதிர்த்தா கூட பரவாயில்லை ஆனா என் மேல முழுசா நம்பிக்கை வச்சு என் ஆசைக்கு உன்னை முழுசா ஒப்புக் கொடுக்கிறது சத்தியமா முடியலடி . பயம்மா இருக்குடி எங்கே உன் நம்பிக்கைய குலைச்சுடுவேனோ அப்படின்னு . ஐ லவ் யு டி பேபி .

நான் உன்னை விட்டு சில காலம் பிரிஞ்சு இருக்கப் போறேன் பேபி . உன் கூட எந்த கான்டாக்ட்டும் நான் வச்சுக்க மாட்டேன் . அதனால் தான் போன் கூட கொஞ்ச நாள் கழிச்சு வாங்கி தரேன் சொன்னேன் . கண்டிப்பா உன் அண்ணன்கள் உன்னை நல்லா பார்த்துப்பாங்க . அதோட ராதிகா , காவ்யா ரெண்டு பேரும் உனக்கு எப்பவுமே சப்போர்ட் தான் . பட் ஐ ம் ரியல்லி மிஸ் யு பேபி எனறு தனக்குள்ளயே சொல்லிக் கொண்டவன் தூங்கிப் போனான் .

அடுத்த நாளே அவன் ஆபீஸ்ல இருந்து சிவாவுக்கு மும்பை செல்லுமாறு ஆர்டர் வந்தது . அவனும் எல்லோரிடமும் சொல்லிவிட்டு நிவியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அழுத்தமாகவும் அதே சமயம் ஏக்கமாகவும் பார்த்து விட்டு மும்பைக்கு சென்று விட்டான் .

"பிரிந்து செல்ல நினைத்தானோ தலைவன்
புதிரான காதலை
புரிந்து கொள்ளவே அவன்
திரும்பி வருகையில் காதல்
அன்போடு வருவானா இல்லை
அவள் அகத்தினைக்
குத்திக் கிழித்து
குருதியை ருசி பார்க்கும்
அம்போடு வருவானா "
 
Top