" காதல் ஒன்று கொண்டான்
காதலியின் மீதா அல்ல
மனைவியின் மீதா "
அதிகாலை யாருக்கு அழகாக புலர்ந்ததோ இல்லையோ ரிதன்யாவுக்கு ஆனந்தமாக புலர்ந்தது . எல்லோரும் வெளியே கிளம்ப தயாராகி சோபாவில் வீற்றிருக்க சிவாவை மட்டும் காணவில்லை .
நிவி பாத்து பத்திரமா இருக்கணும் என்றான் கார்த்திக் .
மதியம் சாப்பிட்டு இருக்கணும் என்றாள் காவ்யா .
தேவையில்லாத எதையும் மனசில போட்டு வைக்காத என்றாள் ராதி . இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ரிதன்யாவுக்கு கோபம் கோபமாக வந்தது .
நிவி நீயும் எங்க கூட வரியாமா என ஷியாம் கேட்க ரிதன்யாவின் முகம் மாறியது . அதை சிரமப்பட்டு இயல்பாக்கி கொண்டாள் . ஏனென்றால் சிவா அப்பொழுதுதான் மாடியில் இருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தான் . அவன் பார்வை முழுமையும் அவனவளிடத்திலே .
சொல்லும்மா வர்றியா என ஷியாம் மீண்டும் கேட்க
இல்லை அண்ணா பரவாயில்லை எதுக்கு நான் இடஞ்சலா நீங்க சந்தோஷமா போயிட்டு வாங்க என சொல்ல
இல்லைமா நீயா தனியா இருப்ப என்றான் ஷியாம்
இருக்கட்டும் அண்ணா எனக்கு இது பழக்கம் தானே என்றாள் நிவி
நிவி என கார்த்திக் ஏதோ சொல்லவர
இப்போ எதுக்கு ரெண்டு பேரும் அவளை தாங்கு தாங்குன்னு தாங்கிகிட்டு இருக்கீங்க ஏன் அவ இதுவரைக்கும் தனியா இருந்ததே இல்லையா என்றான் கோபம் கொப்பளிக்க
இல்லடா அது என கார்த்திக் இழுக்க
என்ன என்றான் குரல் கடுமையாய் ஒலித்தது .
அவனைப் பார்த்த ஷியாம் சிவா நேத்து தான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்து இருக்கா . அதுவும் மனசு வெறுத்து போய் சூசைட் அட்டென்ட் பண்ணி . சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் சொல்வாங்க
சோ
நிவி இதுவரைக்கும் எங்கேயுமே சுத்தி பார்த்தது இல்லை . வீட்டுக்குள்ளேயே தான் அடஞ்சு இருக்கா . தனியா இருந்தா ஏதேதோ நினைச்சு என ஷியாம் இழுக்க
என்ன ஆகும் என்றான் ஷியாமை உறுத்து விழித்து இவனிடம் பேசுவதே வேஸ்ட் என நினைத்த ஷியாம் அமைதியாக
மறுபடியும் செத்துப் போக ட்ரை பண்ணுவாளா . செத்தா செத்துட்டு போட்டுமே . இருக்குறவன் நிம்மதியையும் கெடுத்துக்கிட்டு இம்சை என்றவன் சொடுக்கிட்டு நிவியை அழைக்க அவளோ அவன் பேச்சில் கண்ணீர் கன்னம் தாண்ட நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் . அவள் கண்ணீரைக் கண்டு கோபம் தான் வந்தது சிவாவுக்கு .
இங்கே பாரு அப்படி சூசைட் பண்ணனும் நினைச்சா கை எல்லாம் கட் பண்ணிக்காத . நான் வேணா பாய்சன் எதுவும் வாங்கி கொடுத்துட்டு போவா எனக் கேட்க
அண்ணா , சிவா என மற்றவர்கள் ஆட்சேபிக்க ரிதிக்கு கொண்டாட்டம் தான் . ஆனால் அவன் பார்வையோ நிவியிடம் அனல் கக்கியது . இனிமேல் அப்படி பன்னிக்க நினைப்பியா என சவால் விட்டது .
ஆனா ஒண்ணு அப்படி சூசைட் பன்னிக்கும் போது எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படின்னு எழுதி வச்சுட்டு செத்துப் போ கோர்ட் கேஸ்னு அழைய முடியாது பாரு என்றான் சிவா . அவளோ அவனை முறைத்து பார்த்தாள் . நேற்று காலையில் இருந்து அவள் குற்ற உணர்ச்சியில் இருக்க இவனோ ஒன்றும் பண்ணாதவன் போல எப்படி பேசுகிறான் என நினைத்தவள்
நான் எதுக்கு சூசைட் பண்ணனும் . பொறுக்கி , ராஸ்கல், மனசாட்சி இல்லாத மண்ணாங்கட்டி எல்லாம் உயிரோடு இருக்கும் போது நான் எதுக்கு சூசைட் பண்ணனும் . எங்க அம்மா என்னை இடையிலேயே சாகுறதுக்காக ஒண்ணும் பெத்துப் போடலை என சிவாவை பார்த்து சொல்ல அங்கு இருந்த அனைவரும் அதிர்ந்து தான் போயினர் .
அவள் தன்னை தான் சொல்கிறாள் என அறிந்தவன் கண்கள் மின்ன ஓ அப்போ எதுக்குடி கையை கிழிச்சுக் கிட்ட என சட்டையை மடக்கிக் கொண்டு அவள் அருகில் சண்டைக்கு வர
சிவா டேய் இப்போ எதுக்குடா அந்த பிள்ளை கிட்ட சண்டைக்கு நிக்கிற என்றான் ஷியாம் இருவரின் இடையில் புகுந்து
விலகுடா என்றான் சிவா . நிவியோ கண்ணில் சிறிதும் அச்சமின்றி அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் .
சிவா நேரம் ஆகுது வா கிளம்பலாம் என கார்த்திக் அவன் கை பிடித்து இழுக்க
விடுடா என்றான் அவனை
டேய் பாவம் டா ஏதோ தெரியாமல் சொல்லிட்டா நீ கேட்டதுக்கு தானே சொல்லுச்சுஎன்றான் ஷியாம்
ஓ அப்போ இவ சிவுவ பொறுக்கி , ராஸ்கல் அப்புறம் மனசாட்சி இல்லாத மண்ணாங்கட்டி இந்த மாதிரி எல்லாம் பேசலாமா என ரிதி சிவாவுக்கு ஏத்தி விடுவதாய் நினைத்துக் கூற அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் .
கரெக்ட் ரிதி இவ என்னை தான் அப்படி சொன்னாளா என ஒன்றும் தெரியாதவன் போல கேட்க (அட ஆஸ்கார் அவார்டுக்கு பொறந்தவனே )
ஆமா சிவு இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி பேசி இருப்பா . உங்க மேல துளி கூட அவளுக்கு பயம் இல்லை . எல்லாம் இவங்க கொடுக்கிற இடம் என்றாள் ரிதன்யா .மற்றவர்களைப் பார்த்து . (அது அவங்க குடுக்கிற இடம் இல்லம்மா அது நீ காதலிக்கிறதா சொல்லிக்கிறயே உன்னை லவ்வு பண்றதா நினைச்சுகிட்டு இருக்கானே அவன் கொடுத்த இடம் )
சிவா சிவா அவ ஏதோ உன்னை நினைச்சு சொல்லலடா சும்மா பொதுவா சொல்லி இருப்பா என ஷியாம் சமாளிக்க
நான் ஒண்ணும் பொதுவா சொல்லல என்றாள் நிவி (சரித்தான் )
எல்லோரும் அவளைத் தான் அதிர்ந்து பார்த்தனர் .
நிவிமா அமைதியா இருடா என்றான் ஷியாம் .
ஏய் என்ன என் சிவுவ பார்த்தா உனக்கு எப்படி தெரியுது என ரிதி கேட்க
பொறுக்கியாட்டம் தெரியுது என மனதில் நினைத்தவள் வெளியே சொல்லாமல் அமைதியை கடை பிடிக்க அவள் மனதை நன்கு அறிந்தவன் அவளை கூர்ந்து பார்த்தான் .
என்ன நான் பாட்டுக்கு பேசிக் கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு அழுத்தமா நின்னா என்ன அர்த்தம் என்ன சிவு மேல இருக்க பயம் விட்டுப் போச்சா என ரிதி கோபத்துடன் கேட்க
உங்க சிவு என்ன சிங்கமா புலியா பயப்படுறதுக்கு மனுஷன் தானே என நக்கலுடன் கேட்டவள் சிவாவைப் பார்த்து மனுஷன் தான எனக் கேட்க ஷியாமை விலக்கி விட்டு அவள் முன் நின்றான் சிவா .
டேய் டேய் பிளீஸ் டா எதுவும் தப்பா பேசி அடிச்சுடாத டா ஏற்கெனவே ரொம்ப வீக்கா இருக்கா நிவி என ஷியாம் சொல்ல
ஷியாம் மற்றும் கார்த்திக்கைப் பார்த்தவன் நீங்க என்ன பண்றீங்க ஒரு நல்ல ஹோட்டல் போய் வைட் பண்ணுங்க நான் பின்னாடியே வந்துடுறேன் என அழுத்தமாக சொல்ல
சிவா பிளீஸ் என கார்த்திக் கேட்க
சொன்னதை செய்யப்போறீங்களா இல்லையா எனக் கேட்க
அண்ணா அண்ணா அவ பேசுனதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன் பிளீஸ்ணா வாங்க நம்ம எல்லோரும் ஒண்ணாவே போலாம் என ராதிகா வேண்ட
சிஸ்டர் நான் சொன்னதை செஞ்சேங்க அப்படின்னா சேதாரம் கம்மியா இருக்கும் இல்லையா சத்தியமா உன் ஃப்ரெண்ட் என் கிட்ட காயப்படுவா என நிவியைப் பார்த்துக் கொண்டே சொல்ல
ராதி நீ எதுக்கு கெஞ்சிகிட்டு இருக்க விடு மிஞ்சி மிஞ்சி போனா ரொம்ப நல்ல நல்ல வார்த்தையா பேசுவாரு இல்லைன்னா அடிச்சு கொடுமைப்படுத்துவாரு இதுதானே விடு என்னை பத்தி கவலைப்படாதீங்க நீங்க போங்க போய் என்ஜாய் பண்ணுங்க என நிவி சொன்னாள் .
அதான் அவளே சொல்லிட்டாளே பின்ன என்ன போங்க என்றான் சிவா .
சரி வாங்க என ஷியாம் சொல்ல நிவியின் நலன் விரும்பிகள் அவனை பாவமாய் பார்க்க வாங்க போலாம் என சர்வேஷை தூக்கியவன் முன்னே செல்ல எல்லோரும் அவன் பின்னே சென்றனர் .
அனைவரும் கிளம்பிய பிறகு அங்கு சிவா , நிவி , ரிதி மட்டுமே இருந்தனர் .
ரிதன்யா கொஞ்சம் இங்கே வெயிட் பண்ணு நான் இப்போ வந்துடுறேன் என்றவன் நிவியை இழுத்துக் கொண்டு அவள் அறைக்கு செல்ல அவளோ அவள் பிடியை உதறினாள் .
சிவாவிடம் தனியாய் சிக்கினாலே நாம் அவ்வளவு தான் என அறிந்தவள்
ரிதன்யா மேடம் ஹெல்ப் பண்ணுங்க எனக் கத்த சிவா ஒரு நிமிடம் நின்று அவளைப் பார்த்து ரிதன்யாவைப் பார்க்க அவனின் ரிதியோ
என் சிவுவ தப்பா பேசிட்டு என்னையவே ஹெல்ப்புக்கு கூப்பிடுறியா நான் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன் என சோபாவில் அமர்ந்து மொபைலை பார்க்க தொடங்கி விட்டாள் . (அட லூசு உன்னை வில்லியா காட்ட நினைச்சா அவன் உன்னை காமெடி பீஸ்சா மாத்திட்டு போறான் நீயும் அது தெரியாம அவனுக்கு ஹெல்ப் பண்ணுற ஹய்யோ ஆண்டவா )
சிவா இழுத்து வந்து அவள் அறையின் உள்ளே தள்ளி தானும் நுழைந்து கதவை அடைத்தவன் அவளைத் தான் இன்ச் பை இன்ச்சாக பார்வையால் அளந்து கொண்டு இருந்தான் .
மரியாதையா வெளில போங்க என நிவி பின்னால் சென்று கொண்டே கத்த சிவாவோ தன் சட்டைப் பட்டனை ஒவ்வொன்றாக கழத்திக் கொண்டே அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான் .
கிட்டே கிட்டே வ வராதீங்க என அவள் சொல்ல
வந்தா என்னடி பண்ணுவ என்றவன் அவளை நோக்கி முன்னேற சுவர் தட்டி நின்றாள் .
சீ நீ எல்லாம் மனுசனா வெளில காதலிய வச்சுக்கிட்டே என் கிட்ட இப்படி தப்பா நடந்துக்க ட்ரை பண்ற பொறுக்கி எனத் திட்ட அவள் அருகில் வந்தவன் அவளை தன் உயரத்திற்கு தூக்கி சுவற்றில் சாய்க்க
என்னை விடுடா பொறுக்கி விடு என அவனை திட்டி அடிக்க
கை வலிக்கப் போதுடி என்றவன் அவள் கைகளை தன் ஒற்றைக் கைக்குள் அடக்கி அப்படியே மேலே சிறை செய்தவன்
இங்கே பாருடி
என்னை விடு டா ராஸ்கல் என்னை விடு சத்தியமா அவ ஒரு லூசு முட்டாள் உனக்கு ஏத்த ஆளு தான் அவ . என்னை விடு அவ இப்படி இருந்தா நீ எப்படி இருப்ப என்னை விடுடா எருமை மாடு எனக் கத்த அவன் ஒன்றுமே பேசவும் இல்லை எதுவுமே பண்ணவும் இல்லை . இவள் தான் கண்ணை மூடிக் கத்திக் கொண்டு இருந்தாள் .
எதுவுமே நிகழாமல் இருக்க கண்களை திறந்து பார்த்தாள் . அவன் அவளுக்கு மிக மிக நெருக்கத்தில் அவளைத் தான் கண்களில் குறும்பு மின்ன பார்த்துக் கொண்டு இருந்தான் . அவனை அவள் புரியாமல் பார்க்க
சிவாவோ தோளைக் காட்டி ஆறிடுச்சான்ணு பாரு என சொல்ல
ஹான் என்றாள் ஒன்றும் புரியாமல் (ஆர்வக் கோளாறு )
கடிச்சு வச்சயே ஆறிடுச்சான்னு பாருன்னு சொன்னேன் என்றான் மீண்டும் . அவளோ அசடு வழிந்தவள்
கை கைய விடு விடுங்க என சொல்ல
டா எங்கடி போச்சு என்றான் மிரட்டலாய் ஆனால் அது மிரட்டலாய் வராமல் போனது தான் ஆச்சரியம் .
சாரி என அவள் சொல்ல அவள் கைகளை விட்டவன் இடையை இறுகப் பற்றி பாரு என்றான் . நிவியோ அவன் கைகளை தட்டி விடப் பார்க்க இன்னும் அவன் அழுத்திப் பிடிக்க
வலிக்குது என்றாள் பாவமாய்
இடுப்புதானே வலிச்சா வலிச்சுட்டு போது நீ பாரு என சொல்ல அவளும் அவள் கடித்த இடத்தை பார்த்தவள் பின் மென்மையாய் வருடி விட்டு
காயம் சரி ஆயிடுச்சு என சொல்ல
சரி நான் உன்னை உள்ளே இழுத்துட்டு வரவும் நீ என்னடி நினைச்ச எனக் கேட்க அவளோ தலை குனிய
சொல்லுடி பேபி என அவன் சொல்ல
பேபியா என அதிர்ந்தவள் என்னை விடு என சொல்ல
சொல்லுடி பேபி என மறுபடியும் கேட்க அவள் அமைதியாக இருக்க
சரி நீ சொல்ல வேண்டாம் . அதை விடு அதை அப்புறம் பார்த்துக்கலாம் . வெளில என்ன சொன்ன பொறுக்கி , ராஸ்கல் , மனசாட்சி இல்லாத மண்ணாங்கட்டி என இழுக்க
அது அது நான் சொல்லணும் சொல்லல ஒரு வேகத்துல நாக்கு ஸ்லிப் ஆகிடுச்சு பிளீஸ் என்னை விடுங்க எனக் கெஞ்ச
ஓ ஓகே நெக்ஸ்ட் மனுஷன் தான அப்படின்னு கேட்ட தானே என்றவன் கரமோ மென்மையாய் அவள் இடையை வருட
பிளீஸ் வேண்டாம் என கெஞ்சியவள் அவன் கரங்களை தடுக்க
என்ன என்ன பேசுன அந்த வாய்க்கு பனிஷ்மெண்ட் வேண்டாமா என்றவன் அவள் முகம் நோக்கி குனிய அவளோ திரும்ப அவள் கன்னத்தில் இதழ் பதித்தான் .
வேண்டாம் என்னை விடுங்க பிளீஸ் என சொல்ல
நான் ராட்சசன்டி லூசு பேபி என்றவன் அவள் இதழை வன்மையாக சிறைபிடித்து தேனேடுக்க அவளோ அவனை அடிக்க அவள் இதழை விட்டவன்
இங்கே பாரு என்னை அடிச்ச அப்படின்னா நான் உன்னை கடிப்பேன் . அப்புறம் நீ உன் முகத்தை மூணு நாளைக்கு யார் கிட்டயும் காட்ட முடியாது என மிரட்ட
பொறுக்கி வெளில உன் ரிதி இருக்கா இல்லை அவ கிட்ட போ என அவள் தள்ள
அவ என்னை இப்படி எல்லாம் பேச மாட்டா . (நீ பேசவும் விட மாட்ட இவளுக்கு மட்டும் தான் அந்த சலுகை அதையும் சொல்லேன் )
என்னை விடு என அவள் சொல்ல வெளியே ரிதி கதவை தட்டினாள் .
சிவு சிவு என்ன பண்றீங்க என தட்ட
சிவாவோ நிவியின் பின்னந்தலையில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் அவஇதழில் தன் இதழை புதைக்க அவளோ அவனைத் தடுக்க அவனோ பல் கொண்டு காயப் படுத்த அமைதியாக அடங்கினாள் நிவி .
ரிதன்யா வெளியே கதவைத் தட்டிக் கொண்டே இருக்க சிவாவின் முத்தத்தின் வேகம் அதிகரிக்க மூச்சுக்கு திணறியவள் அவனை அடிக்க அவளை விடவும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு மூச்சு வாங்கினாள் . கண்களில் கண்ணீரோ வழிந்தது .
அவள் முதுகை ஆறுதலாக வருட அழுகாதடி என சொல்ல அவள் அழுகை மேலும் கூட
ம்ப்ச் என அவள் முகத்தை நிமிர்த்தியவன் அழாதடி என் ஷர்ட் தான் வீணாகுது . அவுட்டிங் போகணும்ல நானு எனக் கூற அவளோ அவன் நெஞ்சில் கை கொண்டு அடிக்க
பேபி என்றவன் அவள் நெற்றியில் முகம் புதைத்து அவளை விடுவிக்க விலகிச் சென்றவளை இழுத்துப் பிடித்து நிறுத்தியவன் கண்ணாடியில் தன்னை சரி செய்து கொண்டே பட்டன மாட்டி விடு என சொல்ல அவனை முறைத்தாள் மங்கை .
என்னடி
முடியாது போடா என சொல்ல
அப்போ இன்னொரு கிஸ் என இழுக்க அவனை வாய்க்குள் திட்டிக் கொண்டே பட்டனைப் போட்டு விட்டாள் .
நிவியை இழுத்து அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்தவன் பை பேபி . மனசப் போட்டு குழப்பிக்காத . நான் தான் உன்னை தேடி வந்து உன்னை டிஸ்டர்ப் பண்றேனே தவிர நீ இல்லை . சோ தப்பு முழுசும் என் மேல தான் . உனக்கு கில்டி பீல் எல்லாம் தேவையே இல்லை புரிஞ்சுதா என அவள் கண்களைப் பார்த்துக் கூற
இல்லை நீ தொடுறதுக்கு நான் இடம் கொடுக்க கூடாது தானே அப்போ நான் தான் தப்பு
நீ கொடுக்களை டி நான் தான் கொடுக்க வைச்சேன் . தப்பு எல்லாமே என் மேல தான் . ஓகே நீ பார்த்து பத்திரமா இரு என்றவன் மறுபடியும் அவளை இழுத்து அணைத்து இதழில் இதழ் பதித்து கதவை திறக்க அங்கு ரிதி நின்று இருந்தாள் .
சிவா வெளியே வந்தவன் கதவை அடைக்க
என்ன சிவு பன்னீங்க அடிச்சுட்டீங்களா என கேட்க
ம் என்றான் உருமலாய் . அவன் கோபத்தில் உள்ளான என நினைத்தவள்
சிவு போலாமா என சொல்ல அதற்கும் ம் சொல்லியவன் வெளியே செல்ல ரிதன்யாவும் அவனைப் பின் தொடர்ந்தாள் .
" மங்கையின் மனம் வாடக் கூடாது என
ஆறுதல் படுத்திய மன்னவனுக்கு
இது காதல் என்று உணர
இன்னும் எத்தனை காலம் ஆகுமோ "