இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

என் வாழ்வின் மோட்சம் நீயடி கதை திரி

Swarnika

Moderator
பாகம் 1

அந்த அதிகாலைப் பொழுதில் கதிரவன் மெல்ல உலகுக்கு ஒளி பரப்பு தன் போனில் நிதானமாகவும் அழுத்தமாகவும் அதே சமயம் எதிரில் கேட்பவர் எழுந்து ஓடச் செய்யும் வலிமையுடன் வாதிட்டுக் கொண்டிருந்தான் அவன் . அப்படி இருந்தும் இறுதியில் எதிர்தரப்பே வென்று கோபத்தில் போனைத் தூக்கி எறிந்தான் . நல்ல வேளை அது மெத்தையில் சென்று விழுந்தது. இல்லையேல் அது இந்நேரம் சுக்கல் சுக்கலாக நொறுங்கி இருக்கும் . மொபைலுக்கு ஆயுள் கெட்டி போலும் .

நல்ல சிவந்த நிறம் உடையவனின் கோபத்தில் மேலும் சிவந்து காணப்பட ஆறடிக்கும் மிகாமல் இருப்பவனின் கண்கள் இரண்டும் எரிமலையின் ஜுவாலையை குத்தகைக்கு எடுத்து இருக்க , கழுத்து நரம்புகள் புடைக்க , தினமும் உடற்பயிற்சி செய்யும் போது சிக்ஸ் பேக் வைத்து உடல் மேல் இறுக பால்கனியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கோபம் அடையாமல் பெரிய எரிய மூச்சுக் காற்றை விட்டுக் கொண்டு இருந்தான் .

அவன் நம் கதையின் நாயகன் சிவவீரராகவன். குடும்பம் திருச்சியில் வாசிக்க இவன் சென்னையில் உள்ள உலகம் முழுக்க தன் கிளைகளைப் பரப்பி இருந்த எஸ்ஆர் குரூப் ஆஃப் கம்பெனி'ஸ்க்கு சொந்தமான ஓர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறான் . அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சிம்ம சொப்பணமாகத் திகழ்பவன் , முன் கோபி , சிரித்தால் மாயக் கண்ணன் , ஆனால் சிரிக்கத் தெரியாதோ என அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கி வைக்கும் மாயவன் . இவன் சிரிப்பை பார்த்தவர்களும் உண்டு . அவர்கள் இவனின் நண்பர்கள் மற்றும் இவனின் ஆருயிர் காதலி ரிதன்யா மட்டுமே .

சிவாவுக்கு மட்டும் ரிதி , இவர்கள் இருவரும் காதலிப்பது அவன் நண்பர்களான ஷியாம் , கார்த்திக் இருவருக்கும் மட்டுமே தெரியும் . அவர்களின் மனைவிகளுக்கு கூடத் தெரியாது . ரிதி வேறொரு நிறுவனத்தில் பணிபுரிகிறாள் . அவள் பெற்றோர் மதுரையில் வசிக்கின்றனர் . இவள் மட்டும் வேளை நிமித்தமாக சென்னையில் இருக்கிறாள் . ஷியாம் , கார்த்திக் , இருவரும் சிவா பணிபுரியும் நிறுவனத்திலேயே வேலை பார்க்கின்றனர் .

சிவா , ரிதி மற்றும் அவனின் நண்பர்கள் அனைவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மொத்தமாக கூட்டுக் குடும்பம் போல வசித்து வருகின்றனர் .

அவர்கள் வசிக்கும் வீடு விலாசமான ஹால் , கீழ் தளத்தில் சிவாவின் நண்பர்களான ஷியாம் மற்றும் கார்த்திக் தத்தமது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர் . ஒவ்வொரு அறையும் அட்டாச்சு பாத்ரூம் வசதி கொண்டது . அறைகளின் எதிர் பக்கத்தில் சமையலறை , அதை ஒட்டி சற்று தள்ளி பத்து பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் டைனிங் டேபிள் , சமையலறை பக்கத்திலேயே மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் இருந்தது .மொட்டை மாடியில் ஒரு பெரிய ஜிம் அறை இருந்தது . கீழ்தளத்திலேயே பூஜை அறையும் , விருந்தினர்களுக்கான தங்கும் அறையும் , ஸ்டோர் ரூம் மற்றும் அதன் அருகில் ஒரு சின்ன அறையும் இருந்தது .

சிவா சற்று வசதியானவன் என்பதால் மேல் தளத்தில் பால்கனியுடன் கூடிய அறை அவனது . அவனுக்கு அடுத்த அறையில் தான் ரிதன்யா இருந்தாள் . சமையல் பொதுவானதாக இருந்தது . ஷியாமின் மனைவி ராதிகா , கார்த்திக் மனைவி காவ்யாஸ்ரீ , மற்றும் ரிதன்யா மூவரும் சமைப்பார்கள் . இதில் ரிதன்யா சமையலுக்கு உதவி மட்டும் செய்வாள் . ஏனெனில் சமைக்கத் தெரியாது .

ஒரு வழியாக தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பி கீழே வந்தான் சிவா . அங்கு ஷியாமின் புதல்வன் சர்வேஷ் மற்றும் கார்த்திக்கின் புதல்வி கயல்விழி இருவரும் மழலை மொழியில் பேசி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை ஒரு சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே வரவும் ஷியாம் ,கார்த்திக் , ரிதன்யா மூவரும் அடுத்தடுத்து வந்து அமர்ந்தனர் . தாங்களே பரிமாறிக் கொல்லும் பழக்கம் உள்ளதால் ராதிகா மற்றும் காவ்யாவும் இணைந்து நடித்தனர் .

இது அங்கே எழுதப்படாத விதி . காலையிலும் இரவிலும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவர் . ஞாயிற்று கிழமை மட்டும் அவரவர் நினைத்த நேரம் சாப்பிட்டுக் கொள்வர் . மாதத்தில் இரு ஞாயிற்று கிழமை மட்டும் மால் , பீச் , என சுற்றி விட்டு இரவில் ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டு வருவார்கள் .

நால்வரும் சாப்பிட்டுவிட்டு ஆண்கள் மூவரும் பைக்கிலும் , ரிதன்யா தன் ஸ்கூட்டியிலும் என தங்களது அலுவலகம் நோக்கி பறந்தனர் .

சிவாவோ காலையில் போனில் தன்னிடம் சொன்ன விஷயத்தை எப்படி தன் ரிதியிடம் சொல்வது என எண்ணியவாறு சென்றான் .

இங்கு நம் நாயகியின் வீட்டில் ஒரு உரத்தக் குரல் உயர்ந்து ஒலித்துக் கொண்டு இருந்தது . வாங்க நாமும் கேட்போம் .

என்னடி இன்னும் அங்கே செஞ்சுகிட்டு இருக்க ?புள்ள காலேஜ் போக ரெடியா நிக்கிறது தெரியல , ஒரு டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா ?என்னடி செய்ற உள்ள இந்த காதுல விழுகுதா இல்லையா ? என ஒரு நிமிடத்தில் பல கேள்விகள் கேட்டு கத்தி கொண்டு இருந்தாள் ராஜேஸ்வரி .

இ இ இதோ வந்துட்டேன் சித்தி என அவள் கேள்விகளுக்கு பதிலளித்தவாரே டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு வந்தாள் அவள் . நம் நாயகி நிவேதா . .

டிபன் பாக்ஸை அவள் கைகளில் இருந்து வெடுக்கென்று பிடுங்கி தன் மகள் சந்தியாவின் பேக்கில் வைத்து விட்டார் . சந்தியா தன் அம்மாவிடம் தனக்கு வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்கூட்டி சாவியை விரலில் சுற்றிக் கொண்டே நிவேதாவிடம்

ஏய் இங்கே பாரு நான் காலேஜ் விட்டு வர்றதுக்குள்ள என்னோட ரூமை நல்லா கிளீன் பண்ணி வை . என்ன புரிஞ்சுதா என மிரட்ட அதற்கு ராஜேஸ்வரி

நீ பத்திரமா போய்ட்டு வா அம்மு இவளுக்கு அதை விட வேற என்ன வேலை இருக்கு . திங்குகிறது , தூங்குறது ஒரு வேலை சொன்னா ஒரு மணி நேரம் செய்றது அப்பத் தானே வேற வேலை எதுவும் சீக்கிரம் சொல்ல மாட்டாங்கன்ற நினைப்பு என நிவேதாவை முறைத்து

கொஞ்சமும் சுறுசுறுப்பு இல்லாம மசமசண்ணு நின்னுக்கிட்டு ச்சை காலங்காத்தால இவ மூஞ்சில முழிச்சிட்டு போனாலே போற காரியம் வெளங்குமா ?என தன் வெண்கல குரலில் வசை பாட , அது அத்தனைக்கும் தலை குனிந்தே இருந்தவள் சமையல் கட்டினில் புகுந்து கொண்டாள் .

அவள் சென்றதும் ராஜேஸ்வரி தன் மகளிடம் சரிடா அம்மு பார்த்து போ என மகளை செல்லம் கொஞ்சி வழியனுப்பி வைத்தார் .

சமையல் அறைக்கு சென்ற நிவி பாத்திரங்களை கழுவி உரிய இடத்தில் வைத்து விட்டு இரு இட்லிகளை பிட்டு தன் வாயில் இட்டு காலை உணவை முடித்தவள் சந்தியாவின் அறையை சுத்தம் செய்தாள் .

வாங்க அவள் வருவதற்குள் அவளைப் பற்றி பார்த்து விட்டு வந்துவிடலாம் .

நம் நாயகி நிவேதா . மாநிறம் ஐந்தடி உயரம் , மாநிறம் , நீள் விழிகள் , கூரான நாசி , சிவந்த இதழ்கள் , அடர்ந்து நீண்ட கார்கூந்தல் ,என பார்ப்பவரை மீண்டும் பார்க்க வைக்கும் அழகுடையவள் . அன்பான குணம் உடையவள் , அமைதியானவள் .

தந்தை ராஜசேகருக்கும் , தாய் குணவதிக்கும் மாகளாய் பிறந்தவள் . ராஜசேகர் தனியார் வங்கியில் மேனேஜர் ஆகப் பணிபுரிகிறார் . குணவதி பிரசவத்திலேயே இறந்து விட பச்சைக் குழந்தையை வளர்க்கும் பொருட்டு அவர் தாய் அழகம்மாள் ராஜேஸ்வரியை அவருக்கு இரண்டாவதாக மணமுடித்து வைத்தார் , ஆரம்பத்தில் நன்றாகப் பார்த்துக் கொண்டவர் அழகம்மாள் இறக்கவும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தார் .

ராஜசேகர் குணவதி இறந்ததற்கு காரணம் நிவேதா தான் என நினைத்து அவளைப் பார்க்க கூட பிடிக்காமல் ஒதுக்கி வைத்ததும் ராஜேஸ்வரிக்கு வசதியாக போய் விட்டது .

சந்தியா பிறந்ததும் ராஜேஷ்வரியும் ராஜசேகரனும் அவளைக் கொஞ்சும் போதும் , ராஜாசேகர் அவளைத் தூக்கிச் சுற்றி சிரிப்பூட்டும் போதும் , உப்புக்கரணம் தூக்கி விளையாடும் போதும் , தன் மோட்டார் பைக்கில் சந்தியாவை முன்னே வைத்து அவர் சென்றால் போதும் அவரையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பாள் நிவி .

இத்தனைக்கும் சந்தியாவிற்கும் நிவிக்கும் ஒரு வயது தான் வித்தியாசம் . இருந்தாலும் சந்தியா பெற்றோர்களின் கண்ணின் மணியாக வளர நிவியோ அவர்கள் கண் பார்வை படாத தூரத்தில் வைக்கப்பட்டாள்

பத்து வயதில் இருந்தே சமையல் கற்றுக் கொண்டு காலையில் எழுந்ததும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அந்த பிறகே பள்ளி செல்வாள் . மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் சித்தி சொல்லும் வேலைகள் அனைத்தையும் செய்து விட்டு இரவு அவர்கள் சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவி தானும் உண்டுவிட்டு அதன் பிறகே தன் பள்ளிப் புத்தகத்தை எடுத்து படிக்காமல் துவங்குவாள் .

பத்தாம் வகுப்பிலேயே ராஜேஸ்வரி இவளின் படிப்பிற்கு முத்துக் கட்டைப் போட நினைக்கிறாள் , தன் முகத்தைப் பார்த்து பேசக் கூட செய்யாமல் எப்போதும் விலகியே செல்லும் தந்தையிடம் கெஞ்சி கூத்தாடி படிப்பதற்கு சம்மதம் வாங்கி பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றாள் . ஆனால் அந்த பிறகு கல்லூரிப் போக அனுமதி வேண்டி நிற்க சித்தியும் சம்மதிக்க மறுக்க பெற்ற தந்தையோ எவ்வளவு கெஞ்சியும் கண்டுக்காமல் செல்ல அவளின் படிப்பு பள்ளியோடவே நின்று கொண்டது . அதன் பிறகு சம்பளம் இல்ல வேலைக்காரியாக சொந்த வீட்டிலேயே சொந்தம் இல்லாமல் வளைய வந்தாள் .

அன்புக்கும் , அரவணைப்புக்கும் ஏங்குபவளுக்கு எல்லாமுமாக ஓர் அற்புதன் வருவானா இல்லை அரக்கனாகி கொல்லாமல் கொல்வானா ?
 
இந்த தளத்தில் இது என்னுடைய முதல் கதை. உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
 
அத்தியாயம் 2

அன்று ஞாயிற்றுக் கிழமை அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு எங்கு செல்லலாம் என கலந்தாலோசிக்க சிவா மட்டும் அமைதியாக இருந்தான் . அவன் அப்படி இருப்பதைப் பார்த்த கார்த்திக்

என்னடா இவன பார்த்தா கோவமா இருக்கிற மாதிரி இருக்கு என்றான் ஷியாமிடம்

மாதிரி எல்லாம் இல்லை அப்படித்தான் இருக்கான்

ஏண்டா

உன் எதிர்ல தானே இருக்கான் போய் கேட்கவேண்டியது தான

கார்த்திக் அவனை முறைத்துப் பார்த்து ஏண்டா என் ஒருபக்க காதும் என் பட்டு போன்ற கன்னமும் நல்லா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா ?உனக்கு ரொம்ப தான் நல்ல மனசுடா இவன் எப்போ அன்பா பேசுவான் வம்பா பேசுவான்னே தெரியாதேடா

தெரியுது இல்ல அப்போ shut your mouth

அப்படியே ஆகட்டும் மகாராஜா

டேய் உன்னை

இவர்கள் இருவரும் தங்களுக்குள் வழக்காடி கொண்டு இருக்க அதை கவனித்த காவ்யாவோ ,

இந்த நாங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கோம் நீங்க மட்டும் அப்படி என்ன அங்கே தனியா டிஸ்கஷன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?

ஷியாம் அதற்கு அது இல்ல காவ்யா உன் அன்பு கணவனுக்கு அது தான் mr . karthik அவர்களுக்கு முக்கியமான ஒரு சந்தேகம்

என்னது அண்ணா அப்படி முக்கியமான சந்தேகம் என காவ்யா கேட்க

நான் என்னடா கேட்டேன் என புரியாமல் கார்த்திக் பார்க்க அவனைப் பார்த்துக் கொண்டே அது ஒண்ணும் இல்லமா சாருக்கு இன்னிக்கு நைட் நல்ல தண்ணீர் பார்ட்டி இருக்கான்னு கேட்கிறான்மா நான் என்னம்மா சொல்லட்டும் என்றான் அப்பாவியாய்

அடப் பாவி கிராதகா என அவனை மனதிற்குள் பல நல்ல வார்த்தைகள் போட்டு திட்டி விட்டு தன்னை முறை முறை என்று முறைத்துக் கொண்டு இருக்கும் தன் மனைவியிடம்

அய்யோ ஸ்ரீமா நான் அப்படி கேட்கவே இல்லம்மா பொய் சொல்றான் பிலிவ் மீ ராசாத்தி என்றான் அவள் நம்பாமல் அவனைப் பார்த்தாள் .

ராதிகா கார்த்திக்கிடம் அண்ணா இந்த முக்கியமான சந்தேகம் உங்களுக்கு இல்லை உங்க பக்கத்தில அமர்ந்து இருக்குறவருக்கு தானே என்றாள் ஷியாமைப் பார்த்துக் கொண்டே

அதே அதே தங்கச்சிமா நீ என்னைக்கும் என் கட்சிமா

பின்ன இத்தனை வருஷம் கூட இருக்கேன் எந்த பூனை பால் குடிக்கும் எந்த பூனை பீர் குடிக்கும்னு தெரியாது என சொல்ல

யு ஆர் ப்ரில்லியன்ட் மை சிஸ்டர் என ராதிகாவைப் பார்த்துக் கூறியவன் தன் மனைவியைப் பார்த்து நீயும் தான் இருக்கியே என சொல்ல

என் தங்கச்சிக்கு என்னடா குறைச்சல் என ஷியாம் கேட்க

அப்பா சாமி நீ இடையில வராத உன் தங்கச்சிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை அவ சிக்ஸ்டி kg pure கோல்டுடா என ஐஸ் வைக்க காவ்யா வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள் .

எப்புடி என கார்த்திக் காலரைத் தூக்க அவன் தோள் மேல் கை போட்டு சரி சரி நான் தான் கேட்டேன் பர்மிஷன் என்று இழுத்தான் ஷியாம் ராதிகாவைப் பார்த்துக் கொண்டே

பாருமா தங்கச்சி நான் தான் சொன்னேன்ல நான் சொல்லவே இல்லைன்னு இத உன் ஃப்ரெண்டுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுமா என கார்த்திக் கூற

டேய் அது தான் நான் தான் கேட்டேன்னு என் வாயாலயே சொல்லிட்டேன்ல அப்புறம் என்னடா உனக்கு ஏன் உனக்கு பார்ட்டி வேணாமா

வேணும் தான்

பின்ன என்னடா பெரிய நல்லவன் மாதிரி பில்டப் கொடுக்கிற என ஷியாம் கேட்க

சரி சரி ஏம்மா இங்க பாருங்க எங்களுக்கு எங்களுக்கேன்னு பார்ட்டி இருக்கா இல்லையா என்றான் கார்த்திக்

சொன்னாலும் திருந்தவா போறீங்க என்னவோ பண்ணுங்க என்றாள் காவ்யா

என்னவோ பண்ணவா என்ன ரொம்ப சலிப்பா சொல்ற நாங்க என்ன டெய்லியுமா குடிச்சுட்டு வறோம் மன்த்லி ட்வைஸ் அதுவும் லிமிட்டோட இதுக்கே நீங்க எங்களுக்கு கோவில் கட்டி கும்பிடனும் என கார்த்திக் சொல்ல

அப்படி சொல்லுடா இப்போ தாண்டா நீ என் மச்சான் என்றான் ஷியாம்

என்ன நீங்க இப்படி போர்கொடி தூக்குறீங்க என்றாள் காவ்யா

பின்ன குடிச்சுட்டு வந்து தினமும் உங்களைப் போட்டு அடிக்கிற மாதிரி அவ்வளவு சலிப்பு என்றான் கார்த்திக்

ஓ அப்படி உங்களால செய்யமுடியலன்னு வருத்தமோ அப்படி மட்டும் நீங்க வரணும் அம்மி கல்லு இருக்குல்ல அம்மி கல்லு அதை எடுத்து தூங்கும் போது அப்படியே உங்க தலையில நறுக்குன்னு போட்டேனா சுருக்குன்னு பரலோகம் போக வேண்டி வரும் எப்படி வசதி என்றாள் காவ்யா

வை திஸ் கொல வெறி கொல வெறி டி என்று ராகம
இழுத்தான் கார்த்திக் .

இல்லங்க நீங்க அப்படி பண்ணா மட்டும் தான் நான் என்னோட ஆக்ஷன் எப்படி இருக்கும்னு சொன்னேன் . நீங்க அப்படி எல்லாம் எனக்கு சான்ஸ் கொடுக்கமாட்டீங்கன்னு தெரியும் என்றாள் சிரித்துக் கொண்டு

சரித்தான் உனக்குள்ள இப்படி ஒரு சைத்தான் இருக்குன்னு தெரியாம போச்சே என முணங்கினான் கார்த்திக்

என்னடா ஏதோ முணங்குற மாதிரி இருக்கே என்றான் ஷியாம்

ஒண்ணும் இல்ல ஒண்ணுமே இல்லடா ராசா என கார்த்திக் சொல்லி விட்டு அவனைப் பார்க்க ஷியாம் சிரிப்பை அடக்கி கொண்டு இருந்தான் .

என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கு இருடா என நினைத்துக் கொண்ட கார்த்திக் ராதிகாவிடம்

ஏம்மா தங்கச்சி

சொல்லுங்க அண்ணா

அது வந்து நான் என் வொய்ஃப்க்கு அந்த சான்ஸ் கொடுக்க மாட்டேன் . ஒருவேளை ஷியாம் அப்படி வந்தா நீ என்னம்மா செய்வ என்றான்

அண்ணா காவ்யானாலும் சொன்னா ஆனா நான் சொல்லாமவே செய்வேன் ஆமா

சபாஷ் சபாஷ் சூப்பர் மா என்றான் காரத்திக்

ஓ அவ இப்போ என்ன சொன்னா அப்படின்னு நீங்க சூப்பர்னு சொல்றீங்களாம் என்றான் ஷியாம்

அடேய் நான் உன்கிட்ட பேசவே இல்லை நான் என் தங்கச்சிகிட்ட பேசுறேன் நீ ஊடே வராத

ஓ அப்படியா சரி பேசுங்கப்பா பாசமலர்களா பேசி பாசப் பயிர வளருங்க நாங்க வந்து அறுவடை பண்ணிக்கிறோம் .என்றான் ஷியாம்

டேய் உன்னை

அய்யோ நிறுத்துங்க ரெண்டு பேரும் பேசி பேசியே நேரத்தைக் கடத்திருவீங்க போல என்றாள் காவ்யா

இப்போ என்ன உங்களுக்கு பார்ட்டிதானே பேஷ்ஷா
பண்ணிக்கலாம் அதுக்கென்ன என்றாள் ராதிகா

ஹேய் நீ பேசுறதே சரி இல்லையே இதுல ஏதும் உள்குத்து வச்சு இருக்கியா என்றான் ஷியாம் .

உள்குத்தும் இல்லை வெளிகுத்தும் இல்லை இன்னைக்கு அவுட்டிங் போறோமா இல்லையா

போறோம் அதில என்ன டவுட் என்றான் ஷியாம்

அப்ப உங்க நைட் பார்ட்டியும் கண்டிப்பா நடக்கும் ஓகே

ஓகே சரி ரெடி ஆகுங்க ஃபர்ஸ்ட் தியேட்டர் போலாம் அப்புறம் மால் , பீச் போலாம் சரியா போங்க போய் ரெடி ஆகுங்க என ஷியாம் சொல்ல கார்த்திக் அவனை கையில் சுரண்டினான் .

என்னடா

அங்கே பாருடா என சிவாவையும் ரிதியையும் காண்பித்தான் . சிவாவோ சோபாவில் அமர்ந்து அதன் மேல் புறத்தில் கைகளை விரித்து தலை சாய்த்து கண்களை மூடி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க ரிதன்யாவோ சிவாவைப் பார்ப்பதும் தன் மொபைலைப் பார்ப்பதுமாக இருந்தாள் .

ராதிகா , காவ்யா நீங்க ரெண்டு பேரும் ரெடி ஆகிட்டு அப்படியே குழந்தைகளையும் ரெடி பண்ணிட்டு கூட்டி வாங்க என்றான் .

நீங்க கெளம்பளையா என ராதிகா கேட்க

எங்களுக்கு என்ன பத்து நிமிஷம் தான் பட்டு பட்டுன்னு ரெடி ஆகிருவோம் . நீங்க அப்படியா கிளம்பி வரவே ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் ஆகும் என்றான் கார்த்திக்

காவ்யா அவனை முறைக்க நான் என்ன பொய்யா சொன்னேன் உண்மையத் தானே சொன்னேன் என்றான் கார்த்திக்

நீ உள்ள வா உனக்கு இருக்கு என சொல்லி விட்டு காவ்யா செல்ல ராதிகாவும் அவள் அறைக்கு சென்றாள் .

நான் இப்போ என்னடா சொன்னேன் உண்மைய தான சொன்னேன் அதுக்கு எதுக்கு இப்படி மொரச்சுட்டு போறா என ஷியாமிடம் கார்த்திக் கேட்க

சில விஷயத்தை எல்லாம் வெளிய சொல்லக் கூடாதுடா மச்சான் அப்படி சொன்னா நமக்கு தான் டேன்ஜர் என சொல்ல

சரித்தான் மச்சான் உண்மைய சொன்னா உலகம் நம்ம கிட்ட கலகம் பண்ணுது . அதுவே பொய்ய சொல்லு அப்படியாண்ணு கண்ண விரிச்சு வச்சுக்கிட்டு இன்னும் சொல்லு அப்படின்னு கை கோர்த்து நம்ம கூட உட்காந்துக்கும் .

அடேய் கருத்து கந்தசாமி கொஞ்ச நேரம் உன் கருத்த ஓரம் கட்டி வை என்றவன் சிவாவைப் பார்த்து அவனை அழைத்தான் .

சிவா

ம்

சிவா

என்னடா என்றான் அழுத்தமாய் கண்களைத் திறவாமல்

ஏதாவது பிரச்சனையா என கார்த்திக் கேட்க

இல்லை

பின்ன ஏன் இப்படி இருக்க என ஷியாம் கேட்க

எப்படி

இல்லை ரொம்ப அமைதியா இருக்கியே அதுதான்என கார்த்திக் இழுக்க

ஏதுதான்

பிரச்சனையா என ஷியாம் கேட்க சிவா கண்களைத் திறந்து அவர்கள் இருவரையும் உறுத்து விழிக்க

இதுக்கு நீ கண்ண மூடிட்டே இருந்து இருக்கலாம் என இருவரையும் இருக்கவா இல்லை எழுந்து ஓடவா என நினைக்க வைத்தான் .

கிளம்பளையா என சிவா நிதானமாய் கேட்க

இதோ கிளம்ப போறோம் என இருவரும் சிட்டாகப் பறந்தனர் . அவர்கள் இருவரும் செல்லவும் ரிதன்யா சிவாவிடம்

ஏதாவது பிராப்லமா சிவு எனக் கேட்க

நத்திங் ரிதி பெருசா எதுவும் இல்லை உன்கிட்ட கொஞ்சம் பேசணும். சோ , அவங்க போகட்டும் பின்னாடி நம்ம ஜாயின் பண்ணிக்கலாம் என சொன்னவன் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டான் . அவளும் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மொபைலில் குடி புகுந்து கொண்டாள் .

கார்த்திக் , ஷியாம் இரவரும் தங்கள் குடும்பம் சகிதமாக கிளம்பி வந்தனர் . இன்னும் சோபாவில் அதே நிலையில் அமர்ந்து இருந்த இருவரையும் பார்த்த ராதிகா

என்ன நீங்க ரெண்டு பேரும் வரலையா எனக் கேட்க ரிதன்யா அமைதியாக சிவாவைப் பார்த்தாள் .

என்னாச்சு எனக் காவ்யா கேட்க

கண்களைத் திறந்து அவர்களைப் பார்த்தவன் நீங்க முன்னாடி போங்க நான் கூட்டிட்டு வரேன் என சொல்ல அவனிடம் ஏன் எதற்கு என கேள்வி கேட்டாலும் பதில் வராது என தெரியும் . ஆதலால் ஆண்கள் இருவரும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு முன்னே செல்ல பெண்கள் மனதில் இருவரும் லவ் பண்ணுறாங்களோ என சந்தேகம் எழுந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு தானே வரணும் அப்போ பார்த்துக்கலாம் என நினைத்துக் கொண்டு அவர்கள் பின்னே சென்றனர் .

ஷியாம் , கார்த்திக் இருவரும் பைக்கை ஸ்டார்ட் செய்து குழந்தைகளை முன்னால் வைத்து அமர்ந்து இருக்க பெண்கள் இருவரும் ஏறாமல் அவர்களைப் பார்த்தபடி நின்றனர் .

என்னாச்சு என கார்த்திக் பொதுவாக கேட்க

அவங்க ரெண்டு பேரும் லவ்தான பண்ணுறாங்க சொல்லுங்க என காவ்யா கார்த்திக்கிடம் கேட்க அவளை மேலும் கீழும் பார்த்தவனோ

நோ ஐடியா என்றான் தோள்களை குலுக்கி கொண்டு

நோ ஐடியாவா நீங்க ரெண்டு பேரும் தான அவர் கூட சுத்துறிங்க உங்களுக்கு எப்படி தெரியாம இருக்கும் என ஷியாமிடம் ராதிகா கேட்க

அவங்க லவ் பண்றதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கா என ஷியாம் கேட்க

இல்லை என்றனர் ஒன்றாக

சரி அவங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ஃபிரண்ட்ஸா இருக்குறதுல உங்களுக்கு வருத்தம் ஏதும் இருக்கா என கார்த்திக் கேட்க

இல்லை என தலையாட்டினர் இருவரும்

இல்லை தானே அப்போ வாங்க நம்ம போலாம் என ஷியாம் சொல்ல

இல்லை நீங்க குழப்புறீங்க என காவ்யா சொல்ல

என்னதாண்டி உன் பிரச்சனை என்றான் கார்த்திக்

அவங்க லவ் பண்றாங்களா இல்லையான்னு தானே கேட்டோம் அதுக்கு ஆமா இல்லை அப்படின்னு பதில் சொல்லாம ஏதேதோ சொல்லி குழப்புறீங்க என காவ்யா கேட்க

நாங்க சொல்றதை சொல்லிட்டோம் அவ்வளவு தான். நீங்க வேணும்னா கண்டுபிடிச்சுக்கோங்க என ஷியாம் சொல்ல

என்ன வேணும்னா அப்போ எங்களால கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்லுறீங்களா என ராதிகா சொல்ல

இந்த லொள்ளு தானே வேணாம்ங்கிறது நான் எப்போ அப்படி சொன்னேன் என ஷியாம் கேட்க

இதோ இப்போ சொன்னீங்கள்ல என போர் கொடி தூக்க

அதைப் பார்த்த கார்த்திக் ஷியாம் இவங்க ரெண்டு பேரும் நம்மள இன்னைக்கு கேள்வி கேட்டு துளைக்கப் போறாங்களே தவிர வெளிய கிளம்புர மூட் இல்ல போல சரி வாங்க வீட்டுக்குள்ள போலாம் என சொல்ல

ஏன் ஏன் வாங்க அவுட்டிங் போலாம் என காவ்யா சொல்ல

அவுட்டிங்கு அப்படியே விட்டேனா கிளம்பி ரெடியா பைக் முதல் கொண்டு ஸ்டார்ட் பண்ணி நின்னா இவங்க நீயா நானான்னு போட்டி போட்டுக்கிட்டு நேரம் போறது கேள்வி மேல கேள்வி கேட்பாங்களாம் என கார்த்திக் சொல்ல

நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம் நாங்களே பார்த்துகிக்கிறோம் என சொன்ன ராதிகா ஷியாமின் பின்னால் அமர காவ்யாவும் கார்த்திக் பின்னால் அமர்ந்து கொல்ல அவர்கள் பைக் புறப்பட்டது .

அவர்கள் செல்லவும் சிவாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ரிதன்யா . அவன் கண் திறக்கும் வழி புலப்படாததால் அவனை அழைத்தாள் .

சிவு

ம்

என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க ?எனக் கேட்க கண்களைத் திறந்தவன் அவள் கேள்விக்கு பதில் மொழிய அதிர்ச்சியுட
ன் அவனைப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் பிறப்பெடுத்தது .

அப்படி என்ன சிவா சொல்லி இருப்பான் ?தன் ஆருயிர் காதலியான ரிதியின் கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு ?எனி ஐடியா ? வாங்க அடுத்த பாகத்தில் பார்க்கலாம் .
 
அத்தியாயம் 3

சிவா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாள் ரிதன்யா .

சிவு நீங்க என்ன சொன்னீங்க பிளீஸ் திருப்பி சொல்றீங்களா என காதுல சரியா கேட்கலை என்றவளைத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு அவள் கைகளைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்ட சிவா அவளைப் பார்த்து

எனக்கு வீட்டுல மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்காங்க ரிதி

விளையாடுறீங்க தானே சிவு என்றாள் நம்ப மாட்டாமல்

ஐ 'ம் சீரியஸ் ரிதி

ஏன் சிவு அப்ப நம்ம லவ் , சொல்லுங்க சிவு ,நீங்க என்னை டைம் பாஸ்க்கு தான் லவ் பண்ணிங்களா எனக் கேட்க

சொல்வதை முழுதாக கேட்காமல் பேசுபவளைக் கண்டு கோபம் வர இருந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உளராத ரிதன்யா என்றான் .

நான் உளறுறேனா நான் பேசுறது உங்களுக்கு உளறல் மாதிரி தெரியுதா சொல்லுங்க நீங்க என்னை கை கழுவப் பார்க்கிறீங்களா என அவன் நெஞ்சில் அழுகையுடன் சாய்ந்து கேட்க

அவள் அழுகையை சகிக்கமாட்டாதவன் அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்து விட்டு இல்லடா இங்க பாரு என்னைப் பாருன்னு சொல்றேன்ல என அதட்ட அவள் அவனைப் பார்க்க அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன்

ரிதிமா நான் சொல்றதை நல்லா இங்க இந்த குட்டித் தலையில ஏத்திக்கோ என அவள் தலையில் முத்தமிட்டு , இந்தக் கல்யாணம் என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு டிராமா தான் என்றவனை அவள் புரியாமல் பார்க்க

என்ன புரியலையா என அவன் கேட்க

இல்லை என்று தலையாட்டினாள் .

நல்லா கேட்டுக்கோ ரிதிமா வீட்டுல சொல்றபடி எனக்கு அந்த சோ கால்ட் பொண்ணு கூட மேரேஜ் நடக்கும் . பட் சிம்பிள்லா யாருக்கும் தெரியாம அண்ட் ரெஜிஸ்டர் பண்ணாம என்று சொன்னவனை அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து அவனைப் பார்த்து

இதுக்கு உங்க வீட்டுல எப்படி ஒத்துப்பாங்க அண்ட் அந்த பொண்ணு வீட்டுல எப்படி ஒத்துப்பாங்க

எங்க வீட்டுல நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம் சோ அவங்களுக்கு கல்யாணம் நடந்தா போதும் . தென் அந்த பொண்ணு வீட்டுல எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டேன் . நோ ப்ராப்ளம் . (ஏண்டா பொண்ணு வீட்டுல பேசின பொண்ணுகிட்ட பேசுனியா ?)

அப்போ அப்போ என சந்தோஷித்தவளை

எல்லா விஷயத்தையும் கிளியரா முடிச்சுட்டேன் என தன் திட்டங்கள் அனைத்தையும் சொல்லியவன் இப்போ ஹாப்பியா என கேட்க

ம் ம் வெரி வெரி ஹாப்பி சிவு லவ் யு சோ மச் என முகம் மலர சொல்ல

ஐ டூ ரிதி சரி கிளம்பி சீக்கிரம் வா போகலாம் . அவங்க நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க என சிவா சொல்ல

சிவு நான் ஒண்ணு கேட்பேன் கோவப்படக் கூடாது சரியா எனக் கேட்க

அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான் . அவன் அமைதியாக இருக்கவும் சிவு என்றாள் மறுபடியும்

கோ அஹெட்

அது வந்து என்னன்னா நம்ம லவ் உங்க வீட்டுல தெரியுமா ?

எஸ் என்றான் அழத்தத்துடன்

பின்ன எதுக்கு வேற பொண்ண உங்களுக்கு கட்டி வைக்குறாங்க

என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா என அவன் நிதானமாக கேட்க

இருக்கு சிவு உங்களை நான் நம்புறேன்

என்னை நீ நம்புறேன்னா இந்த மாதிரி அன்நெஷஷரி க்வஸ்டின்ஸ் வராது என்றான் அழுத்தத்துடன்

சாரி சிவு என்றாள் அவனைப் பற்றி தெரிந்தவளாய் . அவன் நிதானம் தான் ஆபத்தே . அதனால் தான் தன் மனதிற்குள் கேள்விகள் வண்டாய் குடைந்தாலும் மூச்சு விடாமல் அவனிடம் சரணடைந்தாள் .

ஓகே சிவு நான் போய் ரெடி ஆகிட்டு வரேன் என்று தன் அறைக்கு சென்று விட்டாள் . அவனும் தன் அறைக்கு சென்று ரெடி ஆகி அவள் கீழே வருவதற்கு முன் வந்து ஹாலில் தன் மொபைலை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் .

மேலே சென்ற ரிதன்யாவோ , ச்சே கொஞ்ச நேரத்தில நம்ம தலையில் பெரிய கல்லைத் தூக்கிப் போடப் பார்த்தான் . நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கல என்று தன் முதலைக் கண்ணீரை சுண்டி விட்டு சிரித்துக் கொண்டாள் . அதன் பின் கீழே அவள் கிளம்பி வர தங்களின் நண்பர்களின் கூட்டத்தில் சேர்ந்து கொண்டனர் .

ரிதன்யா ஒன்றும் சிவாவை உண்மையாக விரும்பவில்லை . அவனிடம் உள்ள பணத்திற்காகவும் , ஆண்மையின் இலக்கணமாகத் திகழும் அவனை வளைத்துக் காட்டுகிறேன் என தோழிகளிடம் போட்ட சவாலுக்காகவுமே அவனை காதலிப்பது போல் நடிக்கிறாள் .அவள் கேட்பது எல்லாம் வாங்கி கொடுத்து ஒரு பூவைப் போல் பார்த்துக் கொள்பவன் அவள் உண்மை முகம் அறிந்தால் நடப்பதென்னவோ ?

இவளின் உண்மை முகம் அறியா அவனும் இவளுக்காக உருகிக் கொண்டு இருந்தாலும் அதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டே . இரு வருடங்களாக காதலித்த போதிலும் பார்வையில் கூட அவளிடம் சிவா அத்துமீறியதில்லை . அவன் எப்போவாவது கொடுக்கும் முத்தமும் அணைப்பும் கூட காமத்தில் சேர்ந்தவையாக இருக்காது . சரி காதலாக இருக்குமா என்று கேட்டாலும் அவன் வாய்தான் ஆமென்று சொல்லுமே தவிர மனம் சொல்வதை என்னவென்று கூட கேட்க மாட்டான் . (மனம் சொல்றதை கேட்டா தான் நீ மனுஷனா ஆகிருவியே )

தன் கர்வத்தை அவளுக்காக விட்டுக் கொடுக்க மாட்டான் . இருவருக்கும் இடையில் சண்டை வந்தாலும் தானாய் இறங்கிச் சென்று அவளிடம் பேசமாட்டான் . அவளாய் இறங்கி வந்து கெஞ்சினால் தான் உண்டு . தன் அழகும் வசீகரமும் அவனுக்குத் தனி ஆணவத்தைக் கொடுத்து இருந்தது . ஆண் என்ற அகங்காரம் நிறையவே இருந்தது . ரிதி மேல் அவன் வைத்திருப்பதற்கு பெயர் காதலென்று நினைத்துக் கொண்டு இருக்கிறான் . உண்மையான காதல் எப்படி இருக்கும் என இவன் மூன்று முடிச்சிடப் போகும் காரிகை அவள் கற்றுக் கொடுப்பாளா ? சரி யார் அந்த பெண் ?

இங்கு சந்தியாவோ அவள் அறையில் தன் கையில் இருக்கும் அந்த போட்டோவைப் பார்த்துக் கொண்டே தன் அம்மாவிடம்

ம்மா இவன் போட்டோவிலேயே இவ்வளவு ஹாண்ட்ஸம்மா இருக்கான் . அப்போ நேர்ல எவ்வளவு அழகா இருப்பான் . ஹைய்யோ இவளுக்குப் போய் இப்படி ஒருத்தனா

அம்மு அழகா இருந்தா மட்டும் போதுமா ?

வேற என்னம்மா வேணும்

அம்மு நீ இவ்வளவு வடிக்கட்டுன முட்டாளா இருக்க வேணாம் .

ம்மா என அவள் கத்த

கத்தாத

பின்ன என்னம்மா நான் என்ன சொல்லிட்டேன்னு என்னை இப்போ திட்டுற

நீ சொன்னதுக்கு திட்டாம வேற என்ன செய்வாங்களாம்

பின் யோசித்து விட்டு ஓ குணம் வேணும்னு சொல்றியா ?

இல்லை மக்கு மக்கு பணம் வேணும்னு சொல்றேன் . பணம் இல்லாம அந்த இடத்துல குணம் இருந்தா அது குப்பைக்கு தான் போகணும் .

என்னம்மா சொல்ற

மாப்பிள்ளைகாரன் சென்னையில ஏதோ ஒரு கம்பனில வேலை செய்றானாம் . அப்பா இல்லையாம் . அம்மா , ஒரு அக்கா , ஒரு தங்கச்சியாம் . அக்கா ,தங்கச்சி ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஆளுக்கு ஒரு குழந்தை இருக்காம் . இவன் ஒருத்தன் சம்பாதிச்சு தான் போனது வந்ததுன்னு எல்லாம் செய்யணுமாம் . பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் வாங்குன கல்யாணக் கடன் கூட இன்னும் அடைக்கலையாம் என ராஜேஸ்வரி அம்மாள் அத்தனை ஆம் போட்டு வைக்க அவர் மகள் அவர் சொன்ன கதையை கேட்டு விட்டு அப்படியாம்மா எனக் கேட்டு வைக்க அதில் ஆர்வமுற்று

ஆமாம் அம்மு அது மட்டுமில்லை சென்னையில இவனுக்கு ஒரு காதலியும் இருக்காளாம் . அவனும் அவளும் ஒரே வீட்டுல தான் தங்கி இருக்காங்கலாம் .

என்னம்மா சொல்ற நான் கூட ஆள் அழகா இருக்கான் நெனைச்சேன் இதுல இவ்வளவு இருக்கா .

ஆமாண்டா தங்கம் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்

என்னது ம்மா

அவன் இவளை ஒருவருஷம் ஒப்பந்தம் போட்டு தான் கல்யாணம் பண்ணுவானாம் . அதுக்கப்புறம் விவாகரத்து பண்ணிப்போடுவானாம் .

என்னம்மா ஏதோ சினிமா , கதை புத்தகத்துல வர மாதிரி சொல்ற

வாழ்க்கையில நடக்குறத தான படமாவும் ,கதையாவும் எழுதுறாங்க , சரி அதை விடு இந்த கல்யாணம் முடிஞ்சா நமக்கு அஞ்சு லட்சம் சொளையா கிடைக்கும் தெரியுமா என அவர் மகிழ

எப்படிம்மா கிடைக்கும் என்றாள் சந்தியா ஆர்வமாக

கல்யாணம் முடியவும் தான் சோலி மாப்பிள்ளைகாரன் நமக்கு அஞ்சு லட்சம் தருவானாம் .

ம்மா இதெல்லாம் எப்ப எப்படிம்மா பேசி முடிச்ச அதுவும் எனக்கு கூட தெரியாம என்றாள் சந்தியா

அது நேத்து தாண்டி அந்த பெரிய வீட்டு பரமசிவம் இருக்காருல்ல அவர் வீட்டுக்கு வந்து கேட்டாரு . உங்க அப்பா பாங்க் போயிட்டாரு , நீ காலேஜ் போயிட்ட அப்புறம் அந்த வீணா போனவ வீட்டுல இருக்கா இல்லை தச்சு கிட்டு அதுக்கு ஏதோ வாங்கணும்னு சொன்னா சரி போய் தொலையட்டும்னு போன்னு சொல்லவும் அவளும் போயிட்டா அப்படியே கொஞ்ச நேரம் கண்ணயரலாம்னு பார்த்தா அந்த பரமசிவம் வந்து இப்படி கேட்டாரு .

ஏம்மா அவர் தான் அந்த வேண்டாதவளுக்கு சப்போர்ட் பண்ணி வருவாரே அவர் எப்படிம்மா அவளுக்கே உலை வைக்கிற விஷயத்தை தூக்கிகிட்டு அதுவும் உன் கிட்ட வருவாரு

அததேன் சொல்லி வர்றேன்ல கேளு . அவருக்கு யாரோ சொன்னாங்களாம் சென்னையில வேலை, அம்மா இருக்காங்க , அக்கா , தங்கச்சின்னு ரெண்டு பேரு இவன் தான் ஒத்த கறிவேப்பிலை கொத்து அதுனால நல்ல பொறுமையான குடும்பத்தை அனுசரிச்சு போற பொண்ணா கேட்டாங்களாம் . இவரு நேரா இங்க வந்து அந்த சனியன கொடுக்குறீங்களான்னு கேட்டாரு . நானும் மறுக்கலாம்னு தான் நினைச்சேன் ஆனா போட்டோவை பார்த்ததும் அவன உனக்குப் பார்க்கலாம்னு தான் இருந்தேன் . கல்யாணம் பண்ணி அப்படியே அவன அவன் குடும்பத்துகிட்ட இருந்து தனியா பிரிச்சிடலாம்னு ஒரு நினைப்பில அவர் கிட்ட நம்பர் வாங்கி போட்டோவையும் வாங்கி வச்சேன் . ஆனா போன் போட்டதும் எடுக்கவே இல்லை . அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு போட்டா இவன் நம்பர் போல பேச்சிலயே திமிர்த்தனம் இருந்துச்சு .சரி நானும் போட்டோ கொடுத்தாங்க தம்பி அப்படின்னு ஒரு வார்த்தை தான் சொல்லி இருக்கேன் . என்னை பேச விடாம ஒண்ணு ஒண்ணா அவனைப் பத்தி கடை பரப்பவும் எனக்கு அப்படியே புஸ்ஸுன்னு போச்சு . ஆனா லாஸ்ட்டா ஒண்ணு சொன்னான் அஞ்சு லட்சம் தர்றேன்னு அதுல தான் அப்படியே எல்லாத்துக்கும் சரின்னு
ஒத்துக்கிட்டேன் . அதுல ஒண்ணு பாரு இவன் அந்த அனாத நாய எம் பொண்ணுன்ணு நெனைச்சு கிட்டான் போல எப்படியோ அவ இந்த வீட்ட விட்டு ஒழிஞ்சா சரி அப்போதான் நமக்கு நிம்மதி . என்ன ஒண்ணு சம்பளம் இல்லா வேலைக்காரி அவ சரி விடு எப்படியும் ஒரு வருஷம் கழிச்சு இங்க தான வருவா அப்போ பார்த்துக்கலாம் . (அடப் போம்மா நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் . எப்புடி உன்னமாதிரி நானும் ஆம் நல்லா போட்டேனா யாரு கிட்ட )

எல்லாம் சரி தாம்மா ஆனா எங்கேயோ இடிக்கிதே

எங்கேயும் இடிக்கல நீதான் இப்போ தேவை இல்லாம கடிக்கிற நான் தான் தெளிவா எல்லாத்தையும் சொல்றேன்ல அப்புறம் என்ன உனக்கு எங்கேயோ இடிக்க மாட்டாப்ல இடிக்கிது எனக் கடுப்புடன் சொல்ல

அம்மா நான் சொல்றதை கேளுமா

சொல்லு என்ன

நீயே சொல்ற இவன் அக்கா ,தங்கச்சி கல்யாணத்துக்கே வாங்குன கடன இன்னும் இவனால அடைக்க முடியலைன்னு பின்ன எப்படிம்மா இவன் உனக்கு அஞ்சு லட்சத்தை தூக்கி கொடுப்பான் . (பணம் காய்க்கிற மரம் அவன் வீட்டுல நட்டு வச்சு இருக்கான் . அது பூவாகி காயாகி கனியாகவும் ச்சை தப்பு தப்பு அது தாளாகி , அதுவே அச்சாகி , நோட்டாகவும் அதுல இருந்து பறிச்சு கொடுப்பான் போவியா )

அவன் எப்படியோ குடுப்பான் . அவன் பேச்சுலயே தெரியிது . சொன்ன வார்த்தை மீறாதவன்னு . மரியாதை தெரியாத பயலா இருந்தாலும் நம்மள மோசம் பண்ண மாட்டான் . (நீ பார்த்த )

என்னம்மா அவனுக்கு பாராட்டுப் பத்திரம் எல்லாம் பலமா வாசிக்கிற

பின்ன அஞ்சு லட்சம் அஞ்சு லட்சம்னா சும்மாவா

அது சரி ம்மா நீ கனவு காண்கிற அது பகல் கனவா போயிடுமா என கேட்க

வாயக் கழுவு வாயக் கழுவு நான் அந்த அஞ்சு லட்சத்தை நம்பி என்ன என்ன கனவு கண்டு இருக்கேன் நீ இப்படி அபசகுணமா பேசுறியே ஏண்டி

இல்லம்மா நீ பிளான்லான் பக்காவா தான் போட்டு இருக்க ஆனா இதெல்லாம் அப்பாவுக்கு தெரிஞ்சா அவளை பிடிக்கலைனாலும் நீதி ,நேர்மை , நியாயம் அப்படின்னு நாட்டாமை ரேஞ்சுக்கு பேசுறவரு அவளைத் தள்ளி வச்ச மாதிரி நம்மளையும் தள்ளி வச்சுட்டா அதுதான்மா பயம்மா இருக்கு . (உங்களை எல்லாம் தள்ளி வைக்கக் கூடாது அப்படியே நெருப்புல போட்டு வேக வச்சுடனும் )

அந்த பயமெல்லாம் தேவை இல்லை அம்மு . உன் அப்பனென்ன அந்த சுப்பனே வந்து இடையில நின்னாலும் நான் விடுவேனா . அதெல்லாம் பேசுற விதத்தில பேசி முடிச்சாச்சு .

எப்படிம்மா

அதெல்லாம் அப்படித்தாண்டி . ஆனா உங்க அப்பாவுக்கு இந்த ஒரு வருஷம் ஒப்பந்தம் . அப்புறம் டைவர்ஸ் பத்தி எல்லாம் தெரியாது .

அப்ப லவ்வர் இருக்கிற விஷயம்

அது தெரியும் ஆனா ஒரே வீட்டுல இருக்கிறது தெரியாது . கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியாப் போகும்னு சொல்லி வச்சு இருக்கேன் . அப்புறம் அவன் பேச்சிலயே திமிருதனம் திமிறிக்கிட்டு இருந்ததுனால பையனுக்கும் பிடிக்காத கல்யாணம் தான் போல அதுனால அவன் எதுவும் மரியாதைக் குறைவா நடந்தா மனசில எதுவும் வச்சுக்காதீங்கன்னு முன்னக் கூட்டியே சொல்லி வச்சுட்டேன் . (விவரம் தான் )

ம்மா ஆனா நீ சொல்லாத விஷயம் எல்லாம் அப்பாவுக்கு தெரிய வந்துச்சுன்னா என்னம்மா பண்றது

அவருக்கு தெரியவந்துச்சுன்னா அப்படியே அந்த பரமசிவத்தைக் கை காட்டிட வேண்டியது தான்

ம்மா சூப்பர் மா பலே கில்லாடி தான் நீ உனக்கு சுத்திப் போடணும்ம்மா என அவள் சொல்ல

அது நைட் சுத்தி போட்டுக்கலாம் . அடுத்தவாரம் வெள்ளிக் கிழமை கல்யாணம் . நீ ப்யூட்டி பார்லர் போயி ஏற்கெனவே தங்கமா ஜொலிக்கிற உன் முகத்தை இன்னும் கொஞ்சம் மெருகேத்திட்டு வாடா செல்லம் என சொல்லி அறையை விட்டு வெளியேற

சந்தியா போட்டோவில் ஆண்மைக்கே உரிய வனப்புடன் கண்களில் திமிர் மின்ன இருந்தவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்தாள் . என்ன இருந்தாலும் நீ இவ்வளவு அழகா இருக்கக் கூடாதுடா உன் லவ்வர் கொடுத்து வச்சவ என சொல்லிவிட்டு போட்டோவை டேபிள் டிராயரில் வைத்து விட்டு வெளியே சென்றாள் . அந்த புகைப்படத்தில் இருந்த அந்த மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை அவன் நம் நாயகன் சிவவீரராகவனே தான் .

தன்னைச் சுற்றி மிகப் பெரிய வலை பின்னப்படுவது அறியாமல் வீட்டின் பின் பக்கத்தில் மொட்டை வெயிலில் துணிகளை துவைத்துக் கொண்டு இருந்தாள் நிவேதா .

தாய் அன்பும் கிடைத்ததில்லை ,தந்தை இருந்தும் அவர் அன்பு அவளுக்கு கிடைக்கவில்லை , எதிர்காலத்தில் எல்லாத்துக்கும் சேர்த்து தாயுமானவானாய் ஒருவன் வருவான் , தன்னை கையில் வைத்து தாங்குவான் என வெளியே சொல்லா விடினும் உள்ளுக்குள் பல கற்பனைகள் கொண்டு இருக்கும் தாரகைக்கு தண்டனைகள் பல தரவே தன்னை தா
ரமாக்கி அதையும் நிரந்தரமில்லாததாக்கி நிற்கதியாய் நிற்க வைக்கவே கணவன் என்ற பெயரில் ஒருவன் வருவான் என யார் அவளுக்கு சொல்லி இந்த சூழ்ச்சியிலிருந்து விடுதலை அளிப்பது ?
 
அத்தியாயம் 4

அன்று புதன் கிழமை இரவில் மொட்டை மாடியில் ஆண்கள் மூவர் மட்டுமே இருக்க பெண்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர் . அப்பொழுதான் சிவா தனக்கு திருமணம் என்றே கூறினான் .

கம்மிங் ஃப்ரைடே எனக்கு மேரேஜ் என்று மொட்டையாக கூறியவனை தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஷியாம் , கார்த்திக் இருவரும் பார்க்க

என்ன அப்படி பார்க்கிறீங்க இதுக்கு முன்னாடி நான் சிகரெட் பிடிச்சதை பார்த்ததே இல்லையா என்றான் சிகரெட்டை உள் இழுத்து வட்டமாக புகையை விட்டுக் கொண்டே

இல்லை அது இல்லை ஏதோ சொன்னியெ மேரேஜ்னு என கார்த்திக் கேட்க

ஆமா மேரேஜ் தான் என்றான் சிவா

இவன் கிட்ட பேசுறதுக்கு போய் அந்த செவுத்தில நங்கு நங்குன்னு முட்டிக்கலாம் என மனதில் நினைத்துக் கொண்டான் கார்த்திக் பின்ன வெளில சொன்னா செவுல்லையே விடுவானே தேவையா என்று அவன் ஷியாமைப் பார்க்க

மேரேஜ் தான் சிவா உனக்கா மேரேஜ் என்றான் ஷியாம்

ஏன் நான் மேரேஜ் பண்ணிக்ககூடாதா (வில்லங்கத்துக்கு பொறந்த பய )

அப்படியில்லை என கார்த்திக் சொல்ல

வேற எப்புடி என கட்டையைப் போட்டான் சிவா

அவன் பேசியதைப் பார்த்து இருவரும் அவனைப் பார்த்து அமைதியாக இருந்து கொண்டனர் .

என்னங்டா பேச்சையே காணும் ஊமையாகிட்டீங்களா என்றவனிடம்

சிவா சொல்றதை கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுடா என்றான் ஷியாம்

நான் என்ன புரியாத லாங்வேஜ்லயா சொன்னேன் தெரிஞ்ச அறிஞ்ச மொழியில தான பறஞ்சேன் என்றான் எடக்காக

அடேய் இதுக்கு நீ எங்களை ரெண்டு அறை அறைஞ்சிரலாம் என்ற கார்த்திக்கை அழுத்தமாகப் பார்த்தான் சிவா

ஆத்தாடி அந்த உத்தேசததுல தான் இருக்கான் போலயே வாயக் கொடுத்து கன்னத்தை கண்டமாக்கிகாதடா கார்த்திக் என்று மனதில் நினைத்தவன் அவன் சொன்னதை யோசிக்க சட்டென மூளையில் ஒரு ஒளி பரவ ஷியாமிடம் திரும்பி

ஷியாம் இவனுக்கு வெள்ளிக் கிழமை கல்யாணமாண்டா என்றான் கார்த்திக் ( ஆமா பெரிய அரிய கண்டுபிடிப்பு )

அவன் சொன்னதைக் கேட்ட ஷியாம் அவனை முறைத்து எங்களுக்கும் காது கேட்கும் என்றான்

பின்ன என்னடா என்றான் கார்த்திக்

அவனை பார்த்து தூ எனத் துப்புவது போல் செய்கை செய்து விட்டு சிவாவைப் பார்த்து

நீயும் ரிதன்யாவும் ரெஜிஸ்டர் மேரேஜ் பன்னிக்க போறீங்களா , ஏன் வீட்டுல ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா என வினவ

மேரேஜ் தான் ஆனா பொண்ணு ரிதி இல்லை

என்னடா சொல்ற அப்போ ரிதன்யா எனக் கேட்டான் கார்த்திக்

அவளுக்கென்ன என்றான் சிவா

என்னடா விளையாடுறியா எனக் கேட்டான் ஷியாம்

நான் பேசுறது உங்களுக்கு விளையாடுற மாதிரி தெரியுதா ?

ம்ப்ச் சிவா ரிதன்யாவ பத்தி யோசிச்சயா அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா என்றான் கார்த்திக்

அவ இதுக்கு ஓகே சொல்லிட்டா என்றான் சாதாரணமாக

என்ன என மற்ற இருவரும் அதிர

ஆமா என ஆரம்பித்து ரிதியிடம் சொன்ன அனைத்தையும் அவர்களிடம் சொல்ல

டேய் இதுல ஒரு பொண்ணோட வாழ்க்கை இருக்குடா என்றான் ஷியாம்

நான் என் ரிதிய எப்பவும் கைவிட மாட்டேன் என்றான் சிவா

அவன் உன் ரிதிய சொல்லலடா நீ தாலி கட்ட கழுத்த நீட்டுறா இல்லை அந்த பொண்ண சொல்றான்

அவளுக்கு என்னடா என்றான் சாலிப்புடன்

இதெல்லாம் அந்த பொண்ணுக்கு தெரியுமா

தெரியாம தான் நான் கட்டப் போற தாலிக்கு கழுத்த நீட்டுறாளா

மச்சான் நான் சொல்றதைக் கேளுடா என்றான் ஷியாம்

என்னடா

நீ அந்தப் பொண்ணு கிட்ட பேசுனயா

அவ அம்மாகிட்ட பேசுனேன்

அந்தப் பொண்ணு கிட்ட பேசி பாருடா ஒருவேளை அந்த பொண்ணுக்கு தெரியாம இருந்தா என்ன செய்வ என்றான் கார்த்திக்

எல்லாம் அவளுக்கும் தெரியும் என்றான் சிவா ஏனென்றே தெரியாமல் அவன் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது .

என்ன தெரியும் என கேட்டான் ஷியாம்

இந்த கல்யாணத்தைப் பத்தி எல்லாம் தெரியும் . நான் அவங்க அம்மா கிட்ட பேசுனாலும் இந்த விஷயத்தைப் பத்தி அவ கிட்டயும் பேசணும்னு நெனைச்சு அவ அம்மாகிட்ட அவ நம்பர் வாங்கி பேசுனேன் .

என்னடா சொல்லுச்சு அந்த பிள்ளை என்றான் கார்த்திக்

இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா . ஒரு வருஷம் ரொம்ப அதிகம் அதுக்கு வெறும் அஞ்சு லட்சம் தானான்னு கேட்டா கொஞ்சம் பணத்தைக் கூட்டிக் கொடுக்க சொன்னா என்றான் கோபத்தில்
ஆமாம் இருநாட்களுக்கு முன் நிவியின் சித்தியிடம் நம்பர் வாங்கினான் . பேசினான் தான் நிவியிடம் அல்ல சந்தியாவிடம் .

என்னடா சொல்ற என்றனர் இருவரும் அதிர்ச்சி விலகாமல் இப்படியும் ஒரு பெண்ணா என நினைத்துக் கொண்டு

ம் பணத்துக்காக என்ன வேணா செய்வா போலடா . ஒரு வருஷம் கழிச்சு வேற எவனாவது பணம் தந்தா அவன் கூடயும் போவா . இவளுக்கு எல்லாம் ஒரு வருஷம் என்ன ஒரு நாள் என்ன பணம் கைக்கு வந்தா போதும் . அது எந்த வழில வந்தா என்ன . அவங்க அம்மா அப்பாவே சம்மதிக்கிறாங்கன்னா இதே வேலையாதான் வச்சு இருப்பாங்க போல ச்சை என்றான் வெறுப்புடன் .
அவனுக்கு என்ன தெரியும் பேசியது அந்த அறியாப் பெண்ணிடம் அல்ல என்று .

மச்சான் என ஷியாம் ஏதோ சொல்ல ஆரம்பிக்க

ஒண்ணும் சொல்ல வேண்டான் . நான் சொல்வதைக் கேளுங்க . கல்யாணம் வெள்ளிக்கிழமை யாரும் வர வேண்டாம் .

ஏண்டா என்றனர் இருவரும்

பின்ன இது என்ன உண்மைக் கல்யாணாமா , பொம்மைக் கல்யாணம்டா . சும்மா என் குடும்பத்திற்கு நான் காட்டுற நாடகம் . எனக்கும் ரிதிக்கும் நடக்கும்ல அதுதான் உண்மையான கல்யாணம் . அதுக்கு எல்லாரையும் இன்வைட் பண்றேன் . (அய்யா ராசா உனக்கு ரெண்டு கல்யாணம் தான் ஆனா அந்த ரெண்டும் நம்ம நிவி கூட தான் இது எப்புடி இருக்கு )

சரிங்கடா நான் நாளைக்கு ஊருக்கு கிளம்பி அங்க அந்த டீல் முடிச்சுட்டு வெள்ளிக் கிழமை ஈவினிங் இங்க இருப்பேன் . ஆபீஸ்க்கு லீவு சொல்லிட்டேன் . நாளைக்கு மார்னிங் ரிதிய ஷாப்பிங் கூட்டி போயிட்டு அப்புறம் தான் ஊருக்கு போகணும் . சரி குட் நைட் நான் போய் தூங்குறேன் சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான் .

என்னடா இப்படி சொல்லிட்டு போறான் அதுக்கு இவன் ரிதன்யாவ லவ் பண்ற விஷயத்தை வீட்டுல சொல்லி இருக்கலாமே என்று ஷியாமிடம் கேட்டான் கார்த்திக்

தெரியாம எப்படி இருக்கும் . அதெல்லாம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு இருக்கும்

அப்புறம் எதுக்குடா இந்த கல்யாணம்

சிவா வீட்ல ஒத்துக்கமாட்டேன்னு சொல்லி இருப்பாங்க

அதுக்காக இப்படியா

எனக்கும் இவன் சொல்றதைப் பார்த்தா ஏதோ மாதிரி தான் இருக்கு . ஆனா அந்த பொண்ணு எப்படி எல்லாம் பேசி இருக்கு . இந்த மாதிரி கூட இருப்பாங்களா என்ன என்றான் ஷியாம்

அது தாண்டா எனக்கும் வருத்தமா இருக்கு

ஒருவேளை அந்த பொண்ண மிரட்டி இப்படி எல்லாம் பேச வச்சு இருந்தாங்க அப்படின்னா என்ன பண்றது என்றான் ஷியாம்

என்னடா சொல்ற

ஒருவேளை ஏதாவது பணக் கஷ்டம் இருந்து அதை அடைக்க இந்த கல்யாணத்துக்கு அந்தப் பொண்ணு ஓகே சொல்லி இருந்தா

அப்படியும் இருக்க வாய்ப்பு இருக்கு

ஆனா ஒரு வருஷம் ஜாஸ்தி , பணம் கம்மி அப்படியெல்லாம் அந்த பொண்ணு பேசி இருக்கு ஒரு வேளை சிவா நினைக்கிற மாதிரி அந்த பொண்ணு இருந்தா

டேய் ஏதாவது ஒன்ன சொல்லுடா மாத்தி மாத்தி பேசுற

இதுல நம்ம பேசுறதுக்கு என்ன இருக்கு . அவன் முடிவு பண்ணிட்டான் . இனி அதுல இருந்து மாறவே மாட்டான் . ஆனா அவன் வாழ்க்கை அவன் முடிவு அப்படின்னு நம்ம விடக் கூடாது . அவன் கெட்ட வழில போனா அதை திருத்தறது தான் ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப்க்கு அழகு என்றான் ஷியாம்

என்னடா பண்ண

அவனோட வீட்டுக்கு இவன் இப்படி மேரேஜ் பண்றது தெரியுமா

கண்டிப்பா தெரிய வாய்ப்பு இல்லை

நம்ம தெரியப்படுத்துனோம்னா

நீ சொல்றது எல்லாம் சரிதான் ஆனா வேணாம்டா இந்த விபரீத முடிவு அவனுக்கு மட்டும் தெரிஞ்சது நம்ம தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவாண்டா .

அப்போ என்ன தாண்டா பண்றது

இப்போதைக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம் . அவன் போக்குலயே போகட்டும் . அந்த பொண்ணு வீட்டுக்கு வரட்டும் . அவளைப் பார்த்துப் பேசுனா அவ நல்லவளா இல்லைக் கெட்டவளான்னு தெரியப் போகுது .

ஆமா அவ சொல்லிட்டு தான் மறுவேலைப் பார்ப்பா போடா

இல்லடா அவன் சொல்ற மாதிரி அந்த பொண்ணு இருந்தா கண்டிப்பா ஒரு திமிர்த்தனம் இருக்கும் . நான் காசு வாங்குறேன் . அதுக்காக நடிக்கிறேன் . உன் எல்லைக்குள்ள நான் வர மாட்டேன் என் எல்லைக்குள்ள நீ வர வேணாம் அப்படின்னு இருப்பா . ஒரு வேளை அந்தப் பொண்ணுக்கே இது தெரியாம இருந்தா கண்டிப்பா ஒரு அதிர்ச்சி . பயம் இது எல்லாமே இருக்கும் . அத வச்சு நம்ம கண்டுபிடிக்கலாம் .

என்ன கண்டுபிடிக்கப் போற

அவ பணத்துக்காக வந்தவ அப்படின்னா அவன் போக்குலயே அவன விட்டுடுவோம் ஆனா அந்த பொண்ணு நல்லவளா இருந்தா கண்டிப்பா அவளுக்கு சப்போர்ட் பண்ணுவோம் . (ஆமா உங்களை சப்போர்ட் பண்ண விட்டுட்டு தான் அவன் மறுவேலை பார்ப்பான் )

எப்படி டா சான்ஸே இல்லை ஆனா ரிதன்யா

என்னடா ரிதன்யா அவ இவனா உண்மையா லவ் பண்ணி இருந்தாஅழுது ஆர்ப்பாட்டம் பண்ணியாவது இவன மேரேஜ் பண்ணி இருக்கணும்ல . ஏன் செய்யல ? சரி அதை விடு சிவாவோட அம்மாவ ஒரு தடவைப் பார்த்து இருக்கோம் . போன்லயும் அடிக்கடி பேசி இருக்கோம் அவங்க ஒண்ணும் காதலுக்கு எதிரி இல்லை . அப்படி இருந்தா அவன் தங்கச்சி லவ் பண்ணப்போ சுமூகமா பேசி மகள் சந்தோஷம் தான் முக்கியம்னு அந்தப் பொண்ணு லவ் பண்ண பையனுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்ததா இவன் தான அன்னைக்கு சொன்னான் .(நல்ல அம்மா )

ஆமா

அப்படி சொன்னவங்க ஏன் ரிதிய ஏத்துக்க மறுக்கிறாங்க அப்படின்னா நிச்சயம் இதுல வேற ஏதோ இருக்கணும் . ரிதி அவங்க குடும்பத்தோட ஒத்துப் போறவ கிடையாதுன்னு அவங்க நினைச்சு இருக்கலாம் (இருக்கலாம் இல்லை அது தான் உண்மை )

சரி எதுவா இருந்தாலும் பரவாஇல்லை அவன் சரியான வழில போனா அவனுக்கு கை கொடுப்போம் . தப்பான பக்கம் போனா அவன இழுத்து சரியான பாதைக்குப் போக வைப்போம் சரியா (ஆமா நீங்க இழுக்குற இழுப்புக்கு அவன் வந்துட்டுதான் அடுத்த வேலை பார்ப்பான் )

சரிடா வா தூங்கலாம் லேட் ஆகிடுச்சு என சொல்லி இருவரும் கீழே சென்றனர் .

" குற்றங்களை கண்டித்து
சரியான பாதையில்
போகச் சொல்லி
மாற்றங்களை ஏற்படுத்தி
நல்வாழ்க்கைக்கு வழி செய்து
உடன் இருக்கும் நட்பே
சிறந்தது "

காலை அழகாக புலர்ந்தது . புளூ ஜீன்ஸ் , பிளாக் ஷர்ட் அணிந்து படிகளில் இருந்து இறங்கி வந்தான் சிவா . அவன் பின்னாடியே ரிதியும் வந்தாள் . ஷியாம் மற்றும் கார்த்திக் இருவரும் ஆபீஸ்க்கு கிளம்பி டைனிங் டேபிள்க்கு வந்து அமர்ந்து இருந்தனர் . ஷியாம் சிவாவைப் பார்த்ததும்

மார்னிங்டா எப்போ ஊருக்கு கிளம்புற

இதோ இப்ப தான் கிளம்பிட்டேன் என்றான் அவர்களுடன் அமர்ந்தபடி ராதி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் .

என்ன அண்ணா திடீர்னு ஊருக்கு சொல்லவேஇல்லை என்றாள் ராதிகா

அது ஒண்ணும் இல்லம்மா ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு இல்லை . அம்மாவும் போன் பண்ணி வர சொல்லிகிட்டே இருந்தாங்க அதுனால தான் .

சரிண்ணா வீட்ல எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க என்றாள் காவ்யா

சரிம்மா

எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்டு
அவரவர் வேலைக்கு செல்ல சிவா தன் பைக்கை எடுத்து மாலின் பார்க்கிங்ல நிறுத்திட்டு அவனின் ரிதிக்காக காத்து இருந்தான் . அங்கே

அங்கே என்ன நடந்ததுன்னு அடுத்த பாகத்தில் பார்க்கலாம் சரியா ஃபிரண்ட்ஸ்
 
சிவா தன் பைக்கை மாலின் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு ரிதிக்கு கால் பண்ணினான் .

ரிதி எங்கே இருக்க

இங்கே தான் சிவு மால் உள்ளே வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

சரி வரேன்

ரிதி சிவாவைப் பார்த்துக் கையாட்டினாள் . அவனும் பார்த்து விட்டு அவளை நோக்கிச் சென்றான் . சிவா தன் கார்டை அவளிடம் நீட்டி என்ன வேணாலும் பர்சேஸ் பண்ணிக்க என்றான் . (அட தாராள பிரபு )

அவனையும் அவன் கரத்தில் இருந்த கார்டையும் பார்த்து ஏன் சிவு இது உங்க கல்யாணத்துக்கு நீங்க எனக்கு கொடுக்கிற கிப்ட்டா எனக் கேட்க (அய்யோ டிராமா க்வின் )

என்னடா இப்படி சொல்ற (ரொம்ப உருகுறானே )

பின்ன நீங்க இப்படி செஞ்சா நான் எப்படி நினைக்கிறது சொல்லுங்க

நீ ரொம்ப பீல் பண்ணுவேன்னு தான் (இல்லாட்டியும் போடா டேய் )

அழுகுற குழந்தைக்கு சாக்லேட் குடுக்கிற மாதிரி அப்படித்தானே என்றாள் மெல்லிய கோபத்துடன்

இவனுக்கும் கொஞ்சம் கோபம் வந்து , அப்ப என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லை . நான் சொன்னதெல்லாம் காத்துல பறக்க விட்டுட்ட அப்படித்தானே என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீறினான் .

அவளோ கண்களில் கண்ணீர் மல்க இல்ல சிவு எனச் சொல்ல

எது என் மேல நம்பிக்கையா ( அடேய் வளந்து கெட்டவனே அவளுக்கு உன் மேல காதலே இல்லை )

இல்ல சிவு

அதுதான் இல்லைன்னு தெரிஞ்சு போச்சே

நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க பிளீஸ் சிவு அவன் அமைதியாக நிற்க

சிவு எனக்கு என்னை விட உங்க மேல தான் நிறைய நம்பிக்கை இருக்கு உங்களுக்கு எப்போ கல்யாணம்னு
அவன் முறைக்கவும் இல்லை அது காண்ட்ராக்ட் கல்யாணம் தான் இருந்தாலும் நீங்க கட்ட போற தாலி எனக்கு முன்னாடி வேறவ கழுத்துக்கு போகுதுன்னு நினைச்சாலே தூக்கம் கூட வர மாட்டேங்குது . எப்போவுமே நீங்க என் கிட்ட ஹார்ஷா பிகேவ் பண்ண மாட்டீங்க ஆனா இப்போ இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என் மேல எப்டி கோவப் பட்டீங்க (அய்யோ நடிக்கிறாளே நடிக்கிறாளே )

ஏய் ரிதிமா (அய்யோ உருகுறானே உருகுறானே )

வழியாத கண்ணீரை அவள் துடைத்து விட்டு பயம்மா இருக்கு சிவு ரொம்ப . என் மனசு எவ்ளோ பாடு படுதுன்னு உங்களுக்குப் புரியாது

சரிடா அழாத அவ்வளோ சொல்லியும் நீ புரிஞ்சுக்காம பேசுன அதான் கோபம் வந்துடுச்சு மறுபடியும் இப்படி பண்ணாத என்று அவன் அழுத்தமாகக் கூற அவனைப் பார்த்து சரி என்று தலை ஆட்டினாள் .

வா உனக்கு பிடிச்சதை வாங்கலாம் என சொல்லி அழைத்துச் சென்றான் . அவளுக்கென்று அவன் பார்த்து பார்த்து டிரஸ்களை எடுத்துக் கொடுத்தாலும் அவள் மனம் சுணங்கவே செய்தது . அது எதனால் என்றாள் அவனே தவறு செய்தாலும் இல்லை அவள் இறங்கி வந்து
பேசினாலும் சாரி என்ற வார்த்தையை மட்டும் அவனிடம் இருந்து வாங்க முடியாது . இது அவளுக்கு எப்போதும் இருக்கும் மன வருத்தம் . (உன்கிட்ட எதுக்கு அவன் சாரி கேட்கப் போறான் அதெல்லாம் கேட்க வேண்டியவங்க கிட்ட கரெக்ட்டா கேட்பான் )

ஷாப்பிங் எல்லாம் முடித்துக் கொண்டு வெளியே வரவும் தன் ஸ்கூட்டியை எடுக்கச் சென்றவளிடம் போகும் போது எடுத்துக்கலாம் வா என்றான் சிவா .

எங்க சிவு (தொங்க கூப்புடுறான் போ சீன் போடாம போவியா )

வா என அவளைக் கூட்டிக் கொண்டு எதிரே உள்ள நகைக் கடைக்குச் சென்றான் . அங்கு சென்று ஒரே மாதிரி இருக்கும் இரண்டு கோல்டு ரிங் வாங்கினான் .

அவன் எதற்காக வாங்குகிறான் எனப் புரிந்தும் புரியாதது போல் எதுக்கு சிவு ரிங் என்றாள்

வா சொல்றேன் என பில் கவுண்ட்டருக்குப் போய் பில் பே பண்ணி விட்டு அவளைக் கூட்டிச் சென்றான் .

ஸ்கூட்டி எடுத்துட்டு பார்க் வா என சொல்ல

ம் சரி சிவு என்றவள் முன்னால் செல்ல இவன் பின்னே சென்றான் .

இருவரும் பார்க்கை அடைந்ததும் தங்கள் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கல் பெஞ்ச்சில் அமர்ந்தனர் . அமர்ந்ததும் சிவா அவள் கையில் மோதிரத்தைப் போட்டு விட்டான்

சிவு என அவள் சந்தோஷத்தில் லவ் யு லவ் யு சோ மச் சிவு என அவனை கட்டிக் கொண்டாள் .

மீ டூ ரிதி சரி எனக்கு மோதிரம் போட உனக்கு விருப்பம் இல்லையா என அவள் நெற்றியில் முட்டிக் கேட்க ரிதி அவன் கையில் மோதிரத்தை அணிவித்து விட்டு அதில் முத்தம் பதித்து மீண்டும் அவனைக் கட்டிக் கொண்டாள் .

எனக்கும் இப்படியே இருக்க ஆசைதான் ஆனா ஊருக்கு போகணுமே என்று சொல்ல

ம் என்று சொல்லி விலகிக் கொண்டாள் . அவள் விலகவும் அவள் கை பிடித்து மோதிரம் பிடிச்சு இருக்கா எனக் கேட்க

ம்

வாயத் திறந்து சொல்லுடா

ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு சிவு

ம் இந்த ரிங்க நீ பார்க்கும் போது எல்லாம் நான் உன்னுடையவன் உனக்கானவன்னு இது சொல்லிக்கிட்டே இருக்கும் என்ன (எந்த ஊர்ல டா மோதிரம் பேசுது )

ம்

சரிடா நான் இப்போ கிளம்பினா தான் ஊருக்கு போக நேரம் சரியா இருக்கும் என்று அவன் எழுந்தான் .

சிவு நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்

என்னம்மா கேளு

அது வந்து நீங்க வரும் போது அவளையும் கூட்டிட்டு வருவீங்களா (இல்லை தூக்கிட்டு வருவான் )

இங்க பாரு ரிதிமா எனக்கும் பிடிக்கலை தான் . ஆனா என்ன பண்ண அவளையும் கூட்டிட்டு வந்து தான ஆகணும் வரட்டும் பாத்துக்கலாம் நீ மனச போட்டு குழப்பிக்காத . (பிடிக்காதுன்னு சொல்ற இந்த வாய் தான் நீ இல்லாம நான் இல்லைன்னு சுத்தப் போகுது )

சரிங்க சிவு என்றவள் அவனை கட்டி அனைத்து பத்திரமா போய்ட்டு வாங்க என்றாள் .

சரிடா நீ பத்திரமா வீட்டுக்குப் போ (பச்சைக் குழந்தை பாரு வழி தெரியாம நிக்கிறதுக்கு )

சரிங்க சிவு என இவள் ஸ்கூட்டியில் வீட்டிற்கும் அவன் வண்டியை எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் பாரக்கிங்கில் நிறுத்தி விட்டு பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றான் .

புக் செய்த பஸ்ஸில் ஏறியதும் ரிதிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு ஷியாமிற்கு கால் செய்தான் .

என்னடா ரீச் ஆகிட்டியா எனக் கேட்க

இல்லடா இப்போதான் பஸ் ஏறியிருக்கேன் .

அவன் மணியைப் பார்த்து விட்டு என்னடா மணி மூணாகப் போகுது இப்பதான் பஸ்ஸே ஏறியிருக்கேன் சொல்ற என அவன் கேட்க

நேத்தே நான் சொன்னேன்ல ரிதிய ஷாப்பிங் கூட்டிட்டு போகணும்னு அதான் கூட்டிட்டு போயிட்டு இப்பதான் பஸ் ஏறினேன் .

நாளைக்கு ஒரு பொண்ணோட கல்யாணம் இன்னிக்கு காதலியோட ஷாப்பிங்என நினைத்துக் கொண்டவன் வெளியே ம் மட்டும் போட்டு வைத்தான் .

சரி கார்த்திக் கிட்டயும் சொல்லிடு

சரிடா

சரி பை என சொல்லி விட்டு கட் பண்ணினான் .

ஷியாமினால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது .

இங்கு காலையில் இருந்து நிவிக்கு வேலை பிழிந்து எடுத்தது . காலையில் எழுந்தது முதல் எல்லோருக்கும் தேவையானதை செய்து விட்டு காலை உணவை சமைத்து , அதன் பிறகு எல்லோரும் சாப்பிட்ட உடன் தானும் பேருக்கு கொரித்து விட்டு , சித்தி திடீர் என்று வீட்டை சுத்தம் செய்ய சொல்லவும் ஏனென்று ஒரு வார்த்தை கேளாமல் , அவளால் கேட்கவும் முடியுமா என்ன ? படுக்கை அனைத்தையும் அலசிப் போட்டு விட்டு , வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்து அலசி விட்டு , எல்லா வேலையும் முடித்து விட்டாள் .அந்த நாள் முழுவதும் வேலை இழுத்துக் கொண்டது . அவளை வேலை வாங்கிக் கொண்டே இருந்தார் ராஜேஷ்வரி (நாளையில் இருந்து வேலை வாங்க முடியாதல்லவா )

கை கால் எல்லாம் விடுப்பிற்கு கெஞ்ச எப்போது ரெஸ்ட் கிடைக்கும் என நினைத்துக் கொண்டு தன் குடும்பத்தார் இரவு உணவு சாப்பிட்டு முடிக்கவும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிச்சனில் வைத்து விட்டு சித்தி தண்ணீர் கேட்கவும் அவருக்கு எடுத்து கொடுத்து விட்டு திரும்பியவளை

ஏய் நில்லு என்று அவரின் குரல் தடுத்து நிறுத்தியது .

அவளின் பாசமுள்ள அப்பா , சித்தி , தங்கை என அனைவரும் தன் முன்னே இருந்த சோபாவில் அமர்ந்து இருக்க இவள் நின்று தலையை குனிந்து கொண்டே சொல்லுங்க சித்தி என்றாள் .

நாளை காலையில உனக்கு கல்யாணம் வெள்ளன எந்திருச்சு ரெடியா இரு (என்னம்மா ஏதோ நாளை காலையில கடைக்கு போய் ரெண்டு பொங்கல் வாங்கிட்டு வான்னு சொல்ற கல்யாணம்மா கல்யாணம் )

என் என்ன சித்தி சொல்றீங்க என ஆயிரம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்து கேட்டாள் .

ஏன் சொன்னது காதுல விழலையா

இல்லை சித்தி அது அதுவும் திடீர்னு கல்யாணம் அதுவும் கா காலையில எனக் கேட்டவளை

ஏன் சொன்னா சரின்னு கேட்க மாட்டியா நாங்க கல்யாணம்னு தான சொல்றேன் சாகவா சொல்றேன் (முதல் சொன்னியெ அதுக்கு இதுவே பெட்டர் )

இல்லை சித்தி

என்ன புதுசா எதிர்த்து எல்லாம் பேசுற யார் குடுத்தது இந்த தைரியம் சொல்லுடி எனக் கேட்க

இல்லை சித்தி அது

என்ன என்றார் அதிகாரமாய் (அதில் காரம் கொஞ்சம் தூக்கலாய் )

எனக்கு இப்போ இப்போ கல்யாணம் வேணாம் சித்தி என சொல்ல

ஏன் வேற எவனையும் பார்த்து வச்சு இருக்கியா என நாராசமாய் கேட்க

அய்யோ அப்படி எல்லாம் இல்லை சித்தி ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என்றாள் கண்களில் கண்ணீர் மல்க பெற்ற தந்தை அருகில் இருந்தும் அவர் முன்னாலயே சித்தி அவளை இப்படி பேசியும் ஏன் என்று அவர் ஒருவார்த்தைக் கூட கேளாததை நினைத்து மனம் நொந்தாள் .

அப்புறம் எதுக்குடி கல்யாணம் வேணாம் சொல்ற , இங்க பாரு நாளைக்கு உனக்கு கல்யாணம் அப்படி இல்லை எனக்கு இந்த கல்யாணம் வேணாம் அப்படி இப்படி ஏதாவது சொன்ன அப்படின்னா இப்பவே இந்த வீட்ட விட்டு கிளம்பு என்றார் கறாராக

சித்தி என அதிர்ந்தவளை

என்ன வெளியப் போறியா என இரக்கமில்லாமல் கேட்க

தன் அப்பாவிடம் ஓடிச் சென்று அவர் காலடியில் மண்டியிட்டு அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு

அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்பா , நா நானும் உங்க பொண்ணு தானப்பா பிளீஸ் பா சித்திக்கிட்ட சொல்லுங்க அப்பா இப்போ இந்த கல்யாணம் வேணாம்னு பிளீஸ் பா என்று கெஞ்சினாள் அவருக்கு தன் மேல் கொஞ்சத்துக்கும் மிகக் குறைவாகவாவது தன் மேல் பெற்ற பாசம் ஒட்டி இருக்கும் என்று .

அவரும் பேசினார் . சுருங்கப் பேசினார் . சுருக்கென்று பேசினார் , மனம் ஒடிந்து நின்றாள் பாவை .

அவள் பிடித்து இருந்த கைகளை உதறி விட்டு எழுந்தவர் அவள் ஏக்கம் சுமந்த முகத்தைக் கான் கொண்டும் பாராமல் என் பொண்ணு ஒரே ஒரு பொண்ணு அது சந்தியா மட்டும் தான் என்றார் .

தரையில் இருந்து எழுந்து இப்படி சொன்னவரை வெறித்துப் பார்த்து அ அப்பா என்றாள் கம்மிய குரலில் . கண்ணில் வழிந்த கண்ணீர் கூட நின்று விட்டது .

அவர் இவள் புறம் திரும்பாமல் எங்களுக்கு குறிப்பா எனக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்ச அப்படின்னா நாங்க சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டி தாலிய வாங்கிகிட்டு இந்த வீட்ட விட்டு கிளம்புற வழியப் பாரு . உன்னப் பார்க்க பார்க்க நீ இந்த வீட்டுல இருக்கிறதைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு . வெளிய பத்தி விட்டாலும் ஊர் உலகம் தப்பா பேசும் . அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்ன வீட்டுல விட்டு வச்சு இருந்தது . நீ எப்போ இந்த வீட்ட விட்டு கிளம்புறயோ அன்னைக்கு தான் எனக்கு நிம்மதி என சொல்லி விட்டு அவர் படுக்க சென்று விட்டார் . (இதுக்கு நீங்க உங்க
திருவாயத் திறந்து பேசியே இருக்க வேணாம் )

தந்தை சென்ற திசையை வெறித்தவளை கூப்பிட்ட ராஜேஸ்வரி சொன்னது கேட்டுச்சு இல்லை போ அப்புறம் நாளைக்கு நல்லா மேக்அப் எல்லாம் போட்டு ரெடியா இரு . பிச்சக்காரி கோலத்தோடு வந்து பிடிக்காத மாதிரி வந்து நின்னஅப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் (இப்போ மட்டும் என்ன நீ மனுஷியாவா இருக்க ராட்சசி ராட்சசி )

ராஜேஸ்வரி கூறி விட்டு படுக்க சென்று விட சந்தியா இவளை நக்கல் சிரிப்புடன் பார்த்து விட்டு சென்றாள் .

தன் அறைக்கு வந்தவள் தன் நிலையை எண்ணி அழுது கரைந்தாள் . தன் அம்மாவின் படத்தை கையில் எடுத்து அதைப் பார்த்தவாறு

ஏம்மா என்னை விட்டுட்டுப் போன ?என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாம்ல . சொல்லும்மா . நீ இருந்து இருந்தா எனக்கும் எல்லாரை மாதிரியும் பாசம் கேடாய்ச்சு இருக்கும் , அப்பாவுக்கு நான் செல்லப் பொண்ணா இருந்து இருப்பேன்ல இப்போ இப்போ பார்த்தியா அவருக்கு நான் இங்க இருந்தா அவருக்கு நிம்மதியே இல்லையாம்மா நான் என்னம்மா பண்னேன் அவர் நிம்மதி கெடுற அளவுக்கு சொல்லும்மாஎன அழுதவள் தன் கண்ணீரைத் துடைத்து விட்டு ,


ம்மா நீ இருந்து இருந்தா என்னைக் கேட்டு இருப்ப தானே உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா அப்படின்னு என்னை யாருமே கேட்கலமா ஏதோ ஏதோ நாளைக்கு இந்த சாப்பாடு வைய்யி அப்படின்னு ஏதோ மெனு சொல்ற மாதிரி நாளைக்கு உனக்கு கல்யாணம்னு சொல்லிட்டுப் போறாங்கம்மா என்றவள் தேம்பிக்கொண்டே

அப்பா அப்பா கூ கூட எதுவும் சொல் சொல்லவே இல்லைம்மா . நா நான் என்னம்மா பண் பண்னேன் . எனக்கு தெரி தெரியலம்மா . அம்மா என எனக்குப் பயம்மா இரு இருக்கும்மா . ரொம்ப ரொம்பவே பயம்மா இருக்கும்மா ம்மா எது நடந்தாலும் நீ நீ என் கூடவே இரு
இரும்மா எனக்கு உன்னை விட்டா வேற யாருமா இருக்கா ம்மா நீ என் கூட இருப்பதானே ம்மா என அழுது புலம்பிக் கொண்டே தூங்கிப் போனாள் பாவையவள்
.

அன்புக்கும் , பாசத்துக்கும் ஏங்குபவளுக்கு அரணாகி அனைத்துமாக இருப்பானா ?இல்லை மனதில் ஒருத்தியை இருத்தி வைத்து இருப்பவன் அணங்கிவளின் அழுகையை ரசிக்கும் அரக்கனாகிப் போவானா ???
 
அன்று வெள்ளிக் கிழமை . சிவவீரராகவன் நிவேதாவை திருமணம் செய்யப் போகும் நாள் . அதிகாலை யாருக்காகவும் காத்திராமல் அழகாகப் புலர்ந்தது . காலை ஒன்பது மணிக்கு எல்லாம் ராஜேஷ்வரி குடும்பத்தினர் கோவிலை வந்தடைந்தனர் . தாயும் மகளும் மணப்பெண் போல நன்றாக அலங்காரம் செய்து கொண்டு ஐந்து லட்சம் கை சேர இருப்பதை எண்ணி மகிழ்வடன் அமர்ந்து இருக்க தந்தையோ யாருக்கு வந்த விருந்தோ என அவர்கள் அருகில் அமர்ந்து இருந்தார் . (நல்ல குடும்பம் )

மணப்பெண்ணான நம் நிவியோ அரக்கு வண்ணப் புடவையில் அதற்கேற்ற ஜாக்கெட் உடன் தலையை வாரிப் பின்னி மல்லிகை பூ வைத்து முகத்தில் எந்த விதமான மேல் பூச்சும் இல்லாமல் அரக்கு வண்ணப் பொட்டு இட்டு விபூதி குங்குமம் நெற்றியில் தீற்றி தன் அம்மாவின் டாலர் வைத்த செயினை கழுத்தினில் ஒற்றை ஆபரணமாகக் கொண்டு அழுது சிவந்த விழிகளுடன் அளவான ஒப்பனையுடன் இருந்தாள் . கைகள் சில்லிட மனதில் பயம் மட்டுமே துணையாக இருக்க ஆறுதலுக்கு கூட ஆளில்லாமல் தனித்து அமர்ந்து இருந்தாள் .

தன்னை விட்டுத் தள்ளி அமர்ந்து இருந்த குடும்பத்தினரில் தன் தந்தையை மட்டும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் . தன் தந்தை தன்னை நோக்கி திரும்பி ஒரு பார்வையேனும் பார்க்க மாட்டாரா , இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்மா வா மறுபடியும் வீட்டுக்கே போலாம் என அழைத்துச் செல்ல மாட்டாரா என தவிப்புடன் பார்த்து இருந்தாள் பேதை . அவரோ இவள் பக்கம் கூடத் திரும்பாமல் தன் குடும்பத்துடன் ஐக்கியமாகி இருந்தார் .

தன் சொந்த வீட்டிலேயே சொந்தம் என்று சொல்லிக்க ஆளில்லாமல் , அனைவருக்கும் வேண்டாதவளாக இருந்து இருக்கிறோம் என நினைத்து மனதில் சுருக்கென்று வலி எழ கண்களை விட்டு வெளிவரத் துடித்த கண்ணீரைக் கண்களைச் சிமிட்டி அடக்கிக் கொண்டாள் .

திடீர் என தன் குடும்பத்தினர் அனைவரும் எழுந்து நிற்க இவளும் எழுந்து நின்று கொண்டாள் . சிவப்பு நிற ஷர்ட் , பிளாக் ஜீன்ஸில் முறுக்கி விடப்பட்ட மீசை , டிரிம் செய்யப்பட்ட தாடி , கையில் சில்வர் பிரேஸ்லட் என ஆண்மைக்கே உரிய அழகுடன் , எதிரில் உள்ளவர்களை எட்ட நில் அதுதான் உனக்கு நல்லது என எச்சரிக்கும் விழிகளுடன் தன் குடும்பத்தினர் சகிதம் அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான் சிவவீரராகவன் @சிவா .

இவனைக் கண்டதும் ராஜேஸ்வரிக்கும் , சந்தியாவிற்கும் சொல்ல இயலாத பயம் எழுந்தாலும் அதனை மறைத்துக் கொண்டு வாய் கொள்ளா சிரிப்புடன் வாங்க வாங்க வாங்க என வரவேற்றனர் . (அஞ்சு லட்சம் கொடுக்கப் போற புண்ணியவான் இல்ல பணிவு முக்கியமில்லையா )

நிவேதாவும் தன் தலையை நிமிர்த்தி அவன் குடும்பத்தினரை வரவேற்று அவனை நிமிர்ந்தும் பாராமல் பயம் மனதைக் கவ்வ மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள் . அவர்களின் வரவேற்பை சிறிதும் பொருட்படுத்தாமல் ராஜேஷ்வரி மற்றும் ராஜசேகரனை நோக்கி

எல்லாம் ரெடியா இருக்கா என்றான் .

அதற்கு ராஜேஸ்வரி முந்திக் கொண்டு அதெல்லாம் ரெடியா இருக்கு தம்பி என்றாள் .

அப்புறம் ஏன் டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு ,சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சுட்டு ஊருக்கு கிளம்பனும் . சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்ல இல்லை மறுபடியும் திரும்ப சொல்லனுமா என்று சொன்னவனை புரியாமல் ராஜசேகர் பார்க்க

அதெல்லாம் நல்லாவே நியாபகத்தில இருக்கு தம்பி என்றாள் ராஜசேகரை ஒரு பார்வைப் பார்த்து . பின்னே முழுதும் அவருக்கு தெரிந்தால் வேண்டாத பெண்ணாகவே இருந்தாலும் , தன் ரத்தத்தில் உயிர் பெற்று இருந்தாலும் அவளை பிடிக்காமல் தள்ளி நிறுத்தி வைத்து இருப்பவர் இப்படி ஒரு செயலை எந்நாளும் ஒத்துக் கொள்ள மாட்டார் .

ராஜசேகரோ வந்ததில் இருந்து அவனையும் அவன் குடும்பத்தினரையுமே பார்த்துக் கொண்டு இருந்தார் . மாப்பிள்ளைக்கு பிடிக்காத கல்யாணம் எனச் சொல்லினர் ஆனால் மாப்பிள்ளையைத் தவிர யாருமே வாய் திறக்கவில்லையே ஏன் என சிந்தித்துக் கொண்டு இருந்தார் . (இப்போ யோசிச்சு என்ன புண்ணியம் )

சரி வாங்க என அவன் முன்னே செல்ல எல்லோரும் அவன் பின்னே சென்றனர் . அங்கு ஐயர் மாலையைக் கொண்டு வந்து மாப்பிள்ளையும் பொண்ணும் மாத்திக்கங்கோ என்றார் .

சிவா தன் கழுத்தில் தானே மாலையைப் போட்டுக் கொண்டு அவளை ஓர் பார்வைப் பார்க்க அவளும் அவன் பார்ப்பதை உணர்ந்து தன் கைகள் நடுங்க தானே மாலையை அணிந்து கொண்டாள் . அவனுக்குப் பிடிக்காத கல்யாணம, போகப் போக சரி ஆயிரும் என குடும்பத்தினர் நினைத்துக் கொள்ள உள்வீட்டுப் பூசல் அறியாத ஐய்யரோ அவனை வினோதமாகப் பார்த்து வைக்க பதிலுக்கு சிவா முறைத்த முறைப்பில் மந்திரத்தை உச்சரித்து அவன் கையில் கொடுத்தார் . (அய்யரே பார்த்து சூதானம்)

தாலியை வாங்கி ஒரு முறை கண்களை மூடித் திறந்தவன் வேண்டா வெறுப்பாய் அவள் கழுத்தில் கட்டப் போக அவள் கண்ணீர் அவன் கைகளில் பட்டுத் தெறிக்க நடிக்காதடி என சீறினான் .

அதற்கு அவள் அதிர்ந்து நிமிர அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே அவள் கழுத்தினில் மூன்று முடிச்சிட்டு தன் சகதர்மபத்தினி ஆக்கிக்கொண்டான் . (மூணு முடிச்ச ஈஸியா போட்டுட்ட இனிமேல் தாண்டா ராசா உன் வாழ்ககையில நீயே நினைச்சு பார்க்காத திருப்பம் எல்லாம் வரப் போகுது )

தனக்கு தாலி கட்டியவன் கண்களில் மருந்துக்கும் ஒரு சிநேகம் கூட இல்லாமல் கோபமும் ,ஏளனமும் நிறைந்து இருக்க ஏன் என்று தெரியாமல் கை கால் எல்லாம் வெடவெடக்க மாலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் .
தாலி கட்டி முடித்தவுடன் பெரியவா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கங்கோ என ஐயர் சொல்ல அவன் அவரை அழத்தமாகப் பார்க்கவும் நீங்க ஆசீர்வாதம் வாங்கினா என்ன வாங்காட்டி எனக்கென்ன என நினைத்து உள்ளே சென்று ஒளிந்து கொண்டார் . (க்ரேட் எஸ்கேப் )

சிவா பத்து லாரி கஞ்சியை ஒரே மடக்கில் குடித்தவன் போல விரைப்பாக நிற்க நிவி மட்டும் சென்று அவன் அம்மா காலில் முதலில் விழ நல்லா நல்லா இரும்மா என்றார் ஒரு வித அவஸ்தையுடன். அடுத்து அவன் அக்கா மாமா கால்களில் விழ செல்ல அவளைப் பிடித்த அவனின் அக்கா அய்யோ வேண்டாம்மா எதுக்கு இதெல்லாம் எனப் பதற அவனின் மாமாவோ இரு அடித் தள்ளி நின்றார் . எல்லோரும் ஒரு வித பயத்தில் இருப்பதாகவே அவளுக்குப் பட்டது . ஒரு வேளை அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு தெரியிர மாதிரி எனக்கும் அப்படித் தெரியுதா என நினைத்து தன் மீது துளியளவு கூட பாசமில்லாத அப்பாவிடமும் தன் சித்தியிடமும் ஆசீர்வாதம் வாங்கினாள் .

இங்க பாரு புருஷன் அப்படி இருக்காரு ,இப்படி இருக்காரு அடிக்கிறாரு , திட்டுராறு இப்படி சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் பொட்டிய தூக்கி கிட்டு வீட்டுப் பக்கம் வரவே கூடாது . அந்த " வீட்டுப் பக்கம் வரவே கூடாது" என்பதில் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து . இவள் கண்ணீர் வழிய அவரைப் பார்க்க . இப்படி பொசுக்கு பொசுக்குன்னு எடுத்ததுக்கு எல்லாம் கண்ணை கசக்க கூடாது புரியுதா என்றார் அதிகாரமாக (உன் மகளுக்கு இப்படித்தான் சொல்லி விடுவியா புகுந்த வீட்டுக்குப் போகும் போது ராட்சசி )

அவர் சொல்லியதிலேயே பிறந்த வீடு என்ற ஒன்று இனி தனக்கு இல்லை அதே சமயம் தான் வீட்டை விட்டு சென்றால் தான் தன்தந்தைக்கும் நிம்மதி எனப் புரிந்து கொண்டவள் சரி என தலையாட்டினாள் .

இதனை எல்லாம் பொறுமை சிறிதும் இன்றி பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளைப் பார்த்து

உன் டிராமா எல்லாம் முடிஞ்சதுனா கிளம்பலாமா என்று சொல்ல அவளோ அவனை என்னைத் தான் சொல்கிறாரா என புரியாமல் சிறு குழந்தை என விழிக்க

ஏய் என்ன இப்படி பார்த்து என்னை மயக்கலாம்னு பார்க்கிறாயா உன் பார்வைக்கெல்லாம் மயங்குற ஆள் நான் இல்லை இதை எல்லாம் வேற எங்கேயாச்சும் வச்சுக்க என்றான் அனைவரின் முன்பாகவே . (நீ இதுக்கெல்லாம் அனுபவிப்படா ராசா )

அதில் அவளின் மனம் காயம் கொள்ள ராஜசேகரோ கொஞ்சம் யோசித்து இருக்கலாமோ (அடப் போய்யா )
சிவாவின் குடும்பத்தினரும் நிவியை நினைத்து வருத்தம் கொண்டனர் . இருந்தாலும் சிவாவை எதிர்த்துப் பேச தைரியம் இல்லாமல் நின்றனர் . இதனை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த இருந்த இரு ஜீவங்களுக்கு மட்டும் சந்தோஷம் வானைத் தொட்டது . அவர்கள் யாரென்று உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சு இருக்கும் .

சிவா முன்னே செல்ல நிவி அவன் பின்னே செல்ல என அனைவரும் கோவிலை விட்டு வெளியே வர , சிவா புக் செய்து இருந்த டாக்ஸி வரவும் சரியாக இருந்தது . நிவியின் உடைகள் அடங்கியப் பெட்டியை ஏற்கெனவே அங்கு பக்கத்தில் இருந்த ஓர் கடையில் கொடுத்து வைத்து இருந்ததானால் அவள் சென்று தன் பெட்டியை எடுத்து வந்தாள் . அவள் பெட்டியை வாங்கி டிரைவர் கார் டிக்கியில் வைக்க ,சிவா அவளைப் பார்த்து

மகாராணியை கார் கதவை திறந்து விட்டு ஏறுங்கன்னு சொன்னாதான் ஏறுவீங்களோ என்றான் நக்கலுடன்

அவன் அப்படி சொல்லவும் நிமிர்ந்து பார்க்கவும் துணிவின்றி காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் .

சிவா காரின் முன் சீட்டில் டிரைவர்க்கு பக்கத்தில் அமரப் போக அவன் மொபைல் இசைத்தது . அவன் அட்டென்ட் செய்து காதில் வைத்துக் கொண்டு சற்றுத் தள்ளி நின்று பேசிக்கொண்டு இருந்தான் . நிவிக்கு மனம் வேதனையாக இருந்தது . சுற்றம் மறந்து தன் சிந்தனையிலேயே உழன்று கொண்டு இருந்தாள் . அவள் சற்று சுற்று புறத்தைக் கவனித்து இருந்தாள் தன் வாழ்வில் நடக்கப் போகும் தான் சந்திக்கப் போகும் இன்னல்களைத் தடுத்து இருக்கலாம் . என்ன செய்வது எல்லாம் விதியின் சதி .

அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே சந்தியா , ராஜேஷ்வரி இருவரும் அவன் அருகில் சென்று சற்றுத் தள்ளி நிற்க அவர்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் முழுதாய் பேசிவிட்டே வைத்தான் . போனைத் தன் பாக்கெட்டில் வைத்தவாரே அவன் அவர்களைப் பார்க்காமல் செல்ல ராஜேஷ்வரி பதறி

தம்பி ஒரு நிமிஷம் என்றாள் அதிகாரமாய்த் தான் பேச நினைத்தார் ஆனால் அது என்னவோ அவன் பார்வையில் பணிவாக விழுந்து தொலைத்தது .

சிவா அவர்களைப் பார்த்தானே தவிர ஒன்றும் பேசவில்லை . (பேசுனா முத்து உதுந்து போகும் தெரியாதா )

அவன் அமைதியையே அனுமதியாக எண்ணிக் கொண்டு இல்லை தம்பி பணம் என்று இழுத்தான் .

பாங்க் அக்கவுண்ட் ல பாருங்க என்றான் அழுத்தமாக

சந்தியா தன் மொபைலை எடுத்து இருக்கு என்று சொல்லவும் ராஜேஸ்வரி வாயெல்லாம் பல்லாக நல்லது தம்பி அப்புறம் என ஏதோ பேச வாய் எடுத்தவரை கை நீட்டி தடுத்து நிறுத்தியவன்

இன்னும் ஒன் இயர்க்கு உங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை புரியுதா (இல்லாட்டியும் )

போன்ல பேசுறது , நேர்ல வந்து பார்க்கிறேன் சொல்லிட்டு வர்றது அதெல்லாம் இருக்கக் கூடாது என்ன என்று உருமினான் . ( இல்லாட்டியும் நிமிஷத்துக்கு ஒரு போன் கால் , மாசத்துக்கு ஒரு வாட்டி வந்து எட்டி பார்த்துடுவாங்களாக்கும் அடப் போங்க பாஸ் )

இல்லை தம்பி அதெல்லாம் பண்ண மாட்டோம் என ராஜேஷ்வரி சொல்ல ,விலகும்படி சைகை செய்து விட்டு அவர்கள் விலகவும் காரின் முன் சீட்டில் எறிக் கொண்டு போகலாம் என்று சொல்லவும் டிரைவரும் காரை எடுத்தார் .

சிவா அவனின் சொந்தங்களிடம் கூட சொல்லாமல் காரில் ஏறி போகலாம் என சொல்லவும் தான் தன் நினைவில் இருந்து மீண்டவள் ஜன்னலின் ஊடே தன் தந்தையை அவர் உருவம் மறையும் வரைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் .

" தாய் அன்பையும் கண்டதில்லை
தந்தை பாசமும் சொந்தமில்லை
சிந்தை யாவும் புதிதாய் வந்த உன்னை சுற்றி
விந்தை அனைத்தும் என் வாழ்க்கையில் தானோ
நேற்று வரை உன்னை நானறியேன்
இன்று முதல் எனக்கு எல்லாம் நீயே
இல்லாமல் போன தாயின் பாசத்தையும்
இருந்தும் கிடைக்காமல் போன
தந்தையின் நேசத்தையும் ஒருங்கே கொண்டு
தாயுமானவனாய் இருப்பாயா ? இல்லை
பாசம் என்றே என்னவென்று அறியாத எனக்கு உன்
பாராமுகத்தைக் காட்டிச் செல்வாயா ?
உன்னிடம் இருந்து சிறு துளி பாசம் கிடைத்தாலும்
என் வாழ்வின் மோட்சம் பெறுவேனே நான் "
 
" சிவாவை நம்பி ஊர் விட்டு ஊர் வரும்
சிட்டுக் குருவியின் மனதில்
அன்பின் தடம் பதிப்பானா இல்லை
அரக்கனின் நிழல் பதிப்பானா "

இருவரும் டாக்ஸியில் பயணம் செய்ய பாவை அவளோ கண்களில் வழியும் கண்ணீரைக் கூடத் துடைக்க தோன்றாமல் தலை குனிந்து தன் கைகளையே பார்த்துக் கொண்டு இருந்தாள் .

அப்போது அழாதடா என்று அவன் குரல் கேட்கவும் நிவி நிமிர்ந்து அவனைப் பார்க்க அவனோ போனில் தன் ரிதியிடம் அல்லவா பேசிக் கொண்டு இருந்தான் .

ரிதிமா அழாத என்றவனை நொருங்கிப் போன நெஞ்சுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் .

---------

இதோ கிளம்பிட்டேன் பஸ் ஸ்டாண்ட் போயிட்டு இருக்கேன் .

--------

இல்ல என்ன பண்றது பிடிக்கல அப்படின்னாலும் சில சமயம் வேண்டாததெல்லாம் கூட்டிட்டு வரத் தான வேண்டி இருக்கு (ராசா நீ ஓவராப் போறடா )

அவன் தன்னைத் தான் சொல்கிறானா என அவனையே அதிர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் நிவி . சிவா அவளை சிறிதும் பொருட்படுத்தாமல் போனில் பேசிக் கொண்டு இருந்தான் .

ஈவினிங் 5 .30 க்கு எல்லாம் உன் முன்னாடி இருப்பேன் ரெடியா இரு அவுட்டிங் போகலாம்

--------------

நீ எப்பவும் என்னை மிஸ் பண்ண மாட்ட . அட் தி சேம் டைம் உன்னை நான் மிஸ் பண்ணவும் விடமாட்டேன் . (யாரு நீ நீ சொன்னா சரியாத் தான் இருக்கும் )

-------

அப்புறம் எதுக்கு தேவையில்லாம பீல் பண்ற

----------

குட்

--------

சரிடா பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு நான் அப்புறம் கால் பண்றேன் சரியா

-------

மீ டூ ரிதி என்று போனைக் கட் பண்ணினான் .

இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நிவிக்கு தான் உலகமே தட்டா மாலை சுற்றியது போல இருந்தது . சிவா இறங்க இவளும் இறங்கி தன் பெட்டியை எடுத்துக் கொண்டாள் . அவன் தன் பர்சில் இருந்து பணத்தை எடுத்து டிரைவர்க்கு கொடுத்து விட்டு இவளைத் திரும்பியும் பாராமல் நடந்து சென்றான் . நிவி தான் அவன் வேக நடைக்கு ஏற்றவாறு நடக்க முடியாமல் பெட்டியை தன் இருகைகளிலும் பிடித்துக் கொண்டு கிட்ட தட்ட ஓடினாள் என்றே சொல்ல வேண்டும் .

பஸ் நிற்கும் இடம் பார்த்து டிக்கெட் செக்கரிடம் காண்பித்து விட்டு அவன் பஸ்ஸில் ஏறிக் கொள்ள இவளோ பரிதவித்து வேகமாக ஏறப் போக டிக்கெட் எங்கம்மா என்றார் பரிசோதகர் .

அது அது வந்து என உளரியவளை

என்னம்மா என்றார் அதிகாரமாய் அதில் அவள் பயந்து

இல்லை இல்லை அது இப்போ முன்னாடி போனாருல்ல

யாரு

ரெட் ரெட் ஷர்ட்

ஓ அது நீ தானா சரி போம்மா என்று அவர் சொல்ல அவள் பஸ்ஸில் ஏறி அவனைத் தேடி அவன் உட்கார்ந்து இருக்கும் சீட்டின் அருகில் சென்று நின்றாள் .

இவள் வருகையை உணர்ந்து என்ன என்றான் கடுமையாகவே

நம்மிடம் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் ?போனில் யாரிடமோ அவ்வளவு அன்பாக பேசினாரே என்னைக் கண்டால் அனைவரிடம் இருக்கும் அன்பும் அந்தரத்தில் பறந்து விடுகின்றதோ ?என நினைத்துக் கொண்டு இருக்க மறுபடியும் அவன் குரலில் கலைந்தாள் .

என்ன வேணும் (கொஞ்சூன்டு பாசம் வேணுமாம் அவளுக்கு தருவியா )

இல்லைங்க அது சீட்

நான் வேணா எழுந்துக்கிறேன் என் சீட்டில உட்கார்ந்துக்கிறாயா என்று சீறினான் . (ஏண்டா )

என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றவளைப் பார்த்து சினம் போங்க ஹேய் உன் நடிப்பத் தூக்கி இங்கேயே தூரப் போட்டுட்டு வந்துடு என்ன என்னன்னு நினைச்சுக்கிட்டு இருக்க என்று அடிக்குரலில் சீறினான் . (ம்ம்ம் மனுஷன்னு நினைச்சுக்கிட்டு இருக்கா மாத்திக்குவா )

கத்தாமல் யார் கண்களையும் உறுத்தாமல் முகப்பாவங்களை கூட சாதாரணமாக வைத்துக் கொண்டு சண்டை இடுபவனை அவள் வியந்து பின் நடுங்கிப்பார்க்க அவள் பார்வையில் எரிச்சலுற்றவன்

என் பக்கத்துல உட்கார்ந்து வர்றதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும் . அது உனக்கு இல்லவே இல்லை . இல்லை தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாயா ?உனக்கெல்லாம் நடிக்க சொல்லியா தரணும் என சீற அவன் வாய்மொழியில் மனம் வலியில் துடிக்க அடிபட்ட குழந்தையாய் கண்ணில் நீர் வழிய அவனைப் பார்க்க அதில் பல்லைக் கடித்தவன் சுற்றுப் புறம் உணர்ந்து தன் கோபத்தைக் கட்டுப் படுத்தி

ஏய் சீன் கிரியேட் பண்ணாத அங்கே அங்கே இருக்கு பாரு அது தான் உன் சீட் என்று அவனுக்கு ரைட் ஸைட் மூணு சீட்டுக்கு முன்னாடி இருந்த இடத்தைக் காண்பித்து காதில் புளூடூத் மாட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான் .

அவள் அவன் காண்பித்த சீட்டைப் பார்க்க அவள் சீட்டுக்குப் பக்கத்தில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்து இருந்தாள் . திரும்பி அவனைப் பார்க்க அவன் பாடலில் கண்களை மூடி லயித்திருக்க அவன் சொற்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் கண்ணீரை துடைத்து விட்டு இவள் சென்று அங்கு அமர்ந்து கொண்டாள் . (வேறு வழி )

அவள் பக்கத்தில் இருந்த வயதானப் பெண்மணி இவளைப் பார்த்து புன்னகைக்க வர வில்லை என்றாலும் சிரமப் பட்டு புன்னகையை வர வைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டாள் .

உன் பேர் என்னம்மா

நிவேதாங்க

நீயும் சென்னையாமா

இந்த பஸ் சென்னைக்கு தான் போகுதாமா என இவள் கேட்டு வைக்க அவர் இவளை சந்தேகமாய் பார்த்து விட்டு ஆமா என்றார் .

அப்போ நானும் அங்கே தான் போறேன் என்றாள் .

சென்னையில எங்க என்று வினவினார்

அவள் அமைதியாக இருக்க

எங்கேம்மா என்றார் மீண்டும் (ஏம்மா அவளுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டாளா சும்மா எங்க எங்கன்னுட்டு )

அம்மா எனக்கு கொஞ்சம் தலை வலியா இருக்கு நான் கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமா என்றாள் .

அவர் அவளை பார்க்க கண்கள் சிவந்து முகம் வீங்கி இருக்க அவள் கழுத்தில் கை வைத்து என்னமா காய்ச்சலா என்றார் .

அவர் அப்படிக் கேட்டதும் நிவியின் கண்கள் கரை உடைக்கப் பார்க்க சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவள் இல்ல அம்மா ஜலதோஷம் பிடிச்சு இருக்கு அது தான் தலை வலிக்குது என்றவளை சரிம்மா படுத்துக்க என்று விட்டு அமைதியாக இருந்தார் .

அவரிடம் தலை வலிக்கிறது என்று சொன்னவள் பொய் எல்லாம் சொல்லவில்லை . நேற்று ராத்திரி இருந்து சாப்பிடாமல் , தூங்காமல் அழுதவளுக்கு உண்மையிலேயே தலை வலித்துக்கொண்டு இருந்தது . தலை ஒரு பக்கம் வலித்தாலும் இதெல்லாம் பெரிய வலியா நான் இருக்கிறேனே மறந்துவிட்டாயா இல்லை மறக்கத்தான் முடியுமா என்று மனம் பச்சை ரணமாய் வலித்தது .

யார் என்றே தெரியாதவர் தன் மேல் அக்கறை கொண்டு இருக்கும் போது தன்னைப் பெற்ற தந்தைக்கு ஏன் அது இல்லாமல் போனது ?ஒரு வேளை அப்பாவுக்கு இவர் ஒரு பொண்ணை லவ் பண்ற விஷயம் தெரியுமா என நினைத்தவள் பின் அப்படி நினைத்ததற்கு தன்னையே கடிந்து கொண்டாள் . தன் தந்தைக்கு தன்னைப் பிடிக்காமல் போனாலும் , அவர் தன்னிடம் அவராக ஒரு முறையேனும் பேசியதே இல்லை எனினும் இப்படி ஒரு காரியத்தை செய்யத் துணிய மாட்டார் . சத்தியமாக இந்த விஷயம் என் குடும்பத்தார்க்கு தெரிய வாய்ப்பு இல்லை .

ஏன் எனக்கு மட்டும் இந்த நிலமை . இந்த உலகத்துல இருக்கிற யாருக்குமே பிடிக்காதவளா தான் நான் இருக்கணும்னா ஏன் பொறக்கணும் . இவருக்கு பிடிக்காம தான் இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டாரு போல . இவர் ஒருத்தரை விரும்புறாங்க அப்படின்னா அவங்களையே கல்யாணம் பண்ணி இருக்கலாமே . பிறகு என்னை எதுக்கு ஏன் ஒண்ணுமே புரியலையே என்று தனக்குள்ளயே புலம்பி ஜன்னல் கம்பியில் சாய்ந்தவாரே தூங்கிப் போனாள் .

தூங்கிக் கொண்டு இருந்தவள் அருகில் இருந்தவர் எழுப்பிய பின்னர் தான் எழுந்தாள் . அலங்க மலங்க விழித்தவளை பரிவுடன் பார்த்தவர்

ஹோட்டல் பக்கத்தில வண்டியை நிறுத்தி இருக்காங்க வாம்மா தலை வலிக்குதுன்னு சொன்ன இல்ல வா காப்பி குடிச்சா கொஞ்சம் சரியா போகும் . சாப்பிடுறதுன்னா கூட சாப்பிட்டுக்கலாம் வா .

இல்ல அம்மா அது என விழித்தவளை

ரெஸ்ட் ரூம் போனுமா வாமா நான் கூட்டிட்டுப் போறேன் என்றவரிடம் அவளுக்கும் இயற்கை அழைக்க நீங்க போங்கம்மா இதோ வரேன் என்றவள் அவர் கீழே இறங்கி நிற்கவும் அவனைப் பார்க்க போனை பார்த்துக் கொண்டு இருந்தவன் ஏதோ ஒரு உந்துதலில் நிமிர்ந்து பார்க்க அவள் பார்ப்பதை உணர்ந்து புருவத்தை ஏற்றி இறக்க அவள் பயந்து மறுபடியும் சீட்டிலேயே அமர்ந்து கொண்டாள் .

என்ன நினைத்தானோ எழுந்து அவள் சீட்டின் அருகே நின்று அவளைப் பார்க்க அவள் பயத்தில் இவனை நிமிர்ந்து பார்க்க வா என்றான் ஒற்றைச் சொல்லாய் . அவன் முன்னே செல்ல நம்மைத் தான் அழைத்தானா இல்லை பிரம்மையா என நினைத்து இவள் திரும்பி அவன் அமர்ந்து இருந்த சீட்டைப் பார்க்க அது காலியாக இருக்கவும் சட்டென்று முன்னால் திரும்பி பார்க்க அவன் தான் படிகளில் நின்று அவளை முறைத்துக் கொண்டு இருந்தான் . (உண்மைதான் நம்ப முடியலையே )

அவன் பார்வையில் பயந்து எழுந்து அவன் அருகே செல்ல அவன் கீழே இறங்க தானும் இறங்கினாள் . கீழே அந்த வயதான பெண்மணி நின்று இருக்க வாம்மா என்று அழைக்க அவள் திரும்பி அவனைப் பார்க்க போ என்று சைகை செய்து விட்டு ஹோட்டல் சென்று அமர்ந்தான் .

முதலில் ரெஸ்ட் ரூம் சென்று விட்டு தண்ணீரில் முகத்தை நன்கு கழுவியவளுக்கு அப்பொழுதுதான் கொஞ்சம் நன்றாக இருந்தது .

இருவரும் ஹோட்டல் செல்ல அங்கு சிவா அமர்ந்து இருந்த இடத்தில் இரண்டு இருக்கை இருக்க அங்கு அந்த அம்மா அவளை இழுத்து சென்று அமரவைத்து

உனக்கு என்னம்மா வேணும் (ஏன் காசு நீங்க குடுக்கப் போறீங்களா )

அது என அவள் இழுத்து சிவாவைப் பார்க்க அவன் போனையே பார்த்துக் கொண்டு இருந்தானே நிமிர்ந்தும் பார்க்கவில்லை .

தலை வலிக்குதுன்னு சொன்ன இல்லை டீயும் பண்ணும் சொல்லட்டுமா இல்லை சாப்பாடு சாப்பிடுறியா (ஓவர் பாசமா இருக்கே )

இல்ல அம்மா டீ மட்டும் போதும் என்றாள்

இங்கே பாருமா இங்க நிப்பாட்டுறது தான் அப்புறம் எங்கேயுமே நிப்பாட்ட மாட்டாங்க இப்பவே என்ன வேணும் அப்படின்னு சொல்லு (பக்கத்தில இருக்கிறவன் கேட்க வேண்டியது எல்லாம் நீங்க கேட்கிறீங்க )

டீ மட்டும் போதும்மா என அவள் சொல்ல

டீயும் பண்ணும் சொல்றேன் என்ன நீ இங்க உட்கார்ந்து இரு நான் போய் உனக்கு மாத்திரை வாங்கிட்டு வரேன்

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா என அவள் மறுக்க

நீ சும்மா இரும்மா நான் போய் வாங்கிட்டு வரேன் . இவரைப் பார்த்து பயப்படுறயா என சிவாவைப் பார்த்துக் கேட்டு வைக்க அவன் நிதானமாய் அவரைப் பார்க்க அதில் பயந்தவர்

இங்க பாரும்மா தம்பிய பார்த்தா ரொம்ப நல்லவராட்டம் தெரியிது . நீ ஒண்ணும் பயப்படாத . தம்பி நான் வர்ற வரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கறீங்களா என சொல்லி அவன் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் விட்டு அவர் சென்றார் . (உடந்தப் பட்டவனே அவன் தான்மா )

அவர் செல்லவும் டீயும் பண்ணும் அவளுக்கு வர அவள் அவனைப் பார்க்க இவளை நிமிர்ந்தும் பாராமல் என் முகத்துலயா டீயும் பண்ணும் இருக்கு என அவன் கேட்க

இ இ இல்லை இல்லை என அவள் திக்க

சாப்பிடு என்றான் அவன் சொல்லவும் சரி என்று தலையாட்டி விட்டு சாப்பிட்டாள் . மனதில் ரொம்ப கெட்டவர் இல்லை என நினைத்துக் கொண்டாள் (அட போம்மா இனி மேல் தான் அவன் அவதாரத்தை ஒன் பை ஒன்னா பார்க்கப் போற )

அவள் இருவாய் தான் எடுத்து வைத்து இருப்பாள்

தெரியுமா என்றான் மொட்டையாய் (நீ பேசுறது உனக்குப் புரியும் எதிர்ல இருக்குறவங்களுக்கு புரியுமா என நினைக்க வேண்டாம் )

ஹான் என அவள் புரியாமல் விழிக்க அவளை ஆழ்ந்து பார்த்தவன்

உனக்கு அவங்களைத் தெரியுமா என்றான் அழுத்தமாய்

எவங்களை என்றாள் ஒண்ணும் புரியாமல்

உனக்கு டேப்லேட் வாங்கி வரேன் போனாங்களே அவங்களை என்றான்

தெ தெரியாது என்றாள் பாவமாய்

தெரியாதவங்க எங்க கூப்பிட்டாலும் போகக் கூடாது , எதைக் கொடுத்தாலும் வாங்கக் கூடாதுன்னு தெரியாத சின்னப் பிள்ளையாடி நீ என சீற என்னது டி யா என அவள் அதிர்ந்து விழித்தாள் . (ஏண்டாப்பா உன்னையே நேத்து வரைக்கும் யாருன்னே தெரியாது நீ கட்டுன தாலிய அவ வாங்கிக்கல, இப்போ உன் பின்னாடியே அவ வரல )

வாயில் வைத்த பண் உள்ளே போகவா இல்லை வெளியே போகவா எனக் கேட்க இவளோ கண்களில் கண்ணீருடன் அவனைப் பார்க்க

முழுங்குடி என்றான் அதட்டலாய் . அவன் அவளை டி போட்டது அவனுக்கு இயல்பாகவே வந்தது . அவள் சாப்பிட்டு முடிக்க வேற எதுவும் சாப்பிடுறியா எனக் கேட்க
இவள் கண்களில் கண்ணீர் வழிந்தது . அதை அவனுக்கு காட்டாமல் தலையைக் குனிந்து கொண்டாள் .

இங்க பாரு அவங்க என்ன குடுத்தாலும் வாங்கக் கூடாது புரியுதா என சொல்ல

சரி எனத் தலையாட்டினாள் .

அப்புறம் நான் உன் கிட்ட சாதாரணமா பேசுறேன்னு இதையே சாக்கா வச்சுக்கிட்டு என்னை நெருங்கலாம்னு நினைச்சே தொலைச்சிடுவேன் புரியுதா

ம் என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவன் பில் பே பண்ணி விட்டு எழுந்து செல்ல அந்த பெண்மணி மாத்திரை வாங்கி வந்தார் .

சாப்பிட்டியாமா

ம் இப்போ தான்

இந்தா மாத்திரை என அவர் கொடுக்க அவர் கொடுத்தது விக்ஸ் ஆக்ஷன் தான் . இருந்தாலும் சிவா சொல்லியது கண் முன் வலம் வர இருந்தாலும் தனக்காக சென்று வாங்கி வந்தாரே என நினைத்துக் கொண்டு அதை வாங்கியவள்

இருக்கட்டும்மா இப்போ தலைவலி கொஞ்சம் குறைஞ்சு இருக்கு வலிச்சா போட்டுக்கிறேன் என்று சொல்லி விட்டு நீங்க சாப்பிடுங்க அம்மா என்று சொல்ல அவரும் சாப்பிட , சாப்பிட்டு முடித்ததும் அவர் பில் பே பண்ணிவிட்டு உனக்கு தண்ணி பாட்டில் வேணுமாம்மா எனக் கேட்க

இல்லை அம்மா எனக்கு வேண்டாம் என சொல்ல அவருக்கு மட்டும் வாங்கினார் . நிவி முன்னே சென்று சீட்டில் அமரப் போக அவளிடத்தில் வாட்டர் பாட்டிலும் , தலை வலி மாத்திரையும் இருக்க அதனை கையில் எடுத்து அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ அவளைத் தான் முறைத்துக் கொண்டு இருந்தான் .

அவள் தன் சீட்டில் அமர அந்த பெண்மணியும் வந்து அமர்ந்தார் .

அவள் கையில் இருப்பதைப் பார்த்து விட்டு ஏம்மா ஏற்கெனவே வாங்கிட்டியா எனக் கேட்க

ஆமாம் ம்மா என்றாள் .

பஸ் எடுக்கப் பட அந்த அம்மாவும் ஏனோ அமைதியாக வர வெளியே தெரியும் மரங்களையும் , வீடுகளையும் வேடிக்கைப் பார்த்தவாறே வந்தாள் .

" மனதில் ஒருத்தியை வைத்துக் கொண்டு
மங்களநாண் கட்டிய மன்னவன்
வில்லில் இருந்து பாயும் அம்பு போ
ல இவன்
சொல்லினால் ஏற்படும்
மங்கையவளின் மனக் காயங்களை
அறிவானா அறிந்தாலும்
வலியைப் போக்குவானா இல்லை
வலியை அதிகப்படுத்த வழியைத் தேடுவானா "
 
"மனதில் பதித்து வைத்து இருப்பதாக
மணாளன் நினைக்கும் மங்கை அவளுக்காக
மனைவியின் கண்களில் வற்றாத கங்கை
வர வைத்து ரசிப்பானா மன்னவன்"

ஒரு வழியாக சென்னையை வந்தடைய இவள் இறங்கும் முன் சிவா இறங்கிக் கொண்டான் . முதியப் பெண்மணியும் கீழே இறங்க அவர் பின்னே தன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்கியவள் அவனைக் காணாமல் தவித்தாள் .

அவள் தவிப்பை அறியாத அவரோ என்னம்மா உன்னைக் கூப்பிட யாராவது வருவாங்களா எனக் கேட்க (அடப் போம்மா கூப்பிட்டு வந்தவனக் காணாம தேடிகிட்டு இருக்கா )

அவள் அதைக் கவனியாமல் சுற்றும் முற்றும் தேட என்னம்மா யாரைத் தேடுற கூப்பிட வரேன் சொல்லி இருக்காங்களா என சொல்ல வேறு வழி இல்லாது ஆமாம் போட்டு வைத்தாள் . பேசிக் கொண்டு இருக்கும் போதே முதியப் பெண்மணியின் மகள் வர அவள் வந்ததும்

இவ தான்மா என் மக சத்யா . இங்கே தான் கட்டிக் கொடுத்து இருக்கோம் என சொல்ல சத்யா நிவேதாவைப் பார்த்து புன்னகைக்க இவளும் புன்னகைத்தாள் .

இவ பேரு நிவேதா சத்தி சென்னைக்கு புதுசு போல என சொல்ல ஓ அப்படியா என்றாள் சத்யா . சரிம்மா நாங்க வர்றோம் சரியா வந்திடுவாங்களா இல்லை நாங்க வெயிட் பண்ணட்டுமா என்றார் சத்யாவின் அம்மா .

இல்லை அம்மா வந்திடுவாங்க நீங்க போங்க என சொல்ல இல்லை நாங்க வேணா வைட் பண்றோம் என சத்யா சொல்ல இல்லை இருக்கட்டும் பரவாயில்லை என்றாள் .

சரிம்மா நாங்க அப்ப போயிட்டு வறோம் . நீ பார்த்து பத்திரமா போ சரியா என சொல்லி விட்டு தாயும் மகளும் சென்றனர் .

அவர்கள் செல்லவும் நிவிக்கு பயம் பிடித்துக் கொண்டது . தன் ஊரைக் கடந்து எங்குமே செல்லாதவள் , இப்படி தெரியாத ஊரில் வந்து மாட்டிக்கொண்டோமே அவரை எங்கே என்று தேட என்று எண்ணி அங்கும் இங்கும் பெட்டியை இழுத்துக் கொண்டு கண்ணில் நீர் வழியத் தேட, சிவாவோ அப்படி ஒருத்தி தன்னுடன் வந்தாளா ?இல்லவே இல்லை எனக் கொஞ்சம் கூட அவளைக் கருத்தில் கொள்ளாமல் சாலை ஓரத்தில் மரத்தின் நிழலில் தன் வண்டியில் சாய்ந்து கொண்டு தான் ஊருக்கு வந்து விட்டதை அவனின் ரிதியிடமும் ,நண்பர்களிடமும் பரிமாறிக் கொண்டு இருந்தான் . (அட கல்நெஞ்சக்காரப் பயலே )

நிவி ஒரு வழியாக அவனைக் கண்டுபிடித்து கூட்டத்தில் தொலைந்த பிள்ளை தன் அம்மாவைக் கண்டது போல மனம் நிம்மதி அடைந்து அவனை நோக்கி விரையஅவள் அருகில் வரவும் போனைப் பாக்கெட்டில் வைத்து நிமிர்ந்தவன் அவளைப் பார்த்து ,

ஏய் கொஞ்சம் கூட உனக்கு அறிவில்லை , பஸ் நின்னுருச்சுனா இறங்கி உடனே வரத் தெரியாதா ஹான் அங்கே என்னடி மீட்டிங் போட்டுக்கிட்டு நின்னுருந்த என சீற

இல்லங்க அது வந்து என அவள் அழுக அதில் கடுப்பானவன்

உன் டிராமாவை நிப்பாட்டுறியா இல்லை உன்னை இங்கவே விட்டுட்டு போகவா என்னடி நினைச்ச நேரம் எல்லாம் கண்ணில டேமை திறந்து விடுற அப்படி எவ்வளோ தான் ஸ்டாக் வச்சு இருக்க என வார்த்தைகளை கடித்து துப்ப அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு சிறு தேம்பலுடன் நிற்கவும்

அழாதனனு சொன்னேன் காதுல விழலையா எனக் கேட்க தேம்பளையும் வாய்க்குள்ளையே அடக்கிக் கொண்டாள் . அவளை உறுத்து விழித்தவன் அருகில் சென்ற ஆட்டோவை நிறுத்தி அட்ரெஸ் சொல்லி அவளை ஏற்றி விட்டான் . சிவா தன் பைக்கில் வீட்டிற்கு சென்றான் .

சிவா தன் வண்டியை நிறுத்தி வீட்டிற்குள் செல்லவும் ,ஆட்டோவில் இருந்து இறங்கிய நிவி ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்து விட்டு தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் முன் நின்றாள் .

வீட்டில் வேலை செய்த நேரம் போக சும்மா இருக்கப் பிடிக்காமல் சித்தியிடம் கெஞ்சி சில பல திட்டுக்களை வாங்கி அனுமதி பெற்று தையல் கற்றுக் கொண்டு வீட்டில் ரிப்பேர் ஆக இருந்த தையல் மெஷினை சித்தியிடம் கெஞ்சி அதற்கும் பல அர்ச்சனைகளைப் பெற்று கொண்டு அதை சரியாக்கி வாங்கிக் கொண்டாள் .

தையல் மெஷினை சரியாக்கியதற்கு வேண்டிய காசையும் , அவள் பயிற்சிக்காக கொடுத்த பணத்தையும் அவள் அப்பாவிற்குத் தெரியாமல் சித்தி வாங்கிக் கொண்டார் என்பது வேறுகதை .

இப்படியாக அருகில் உள்ளவர்களுக்கு சுடிதார் , ஜாக்கெட் , சிறு குழந்தைகளுக்கான பெட்டி கோட் . கவுன் , மற்றும் சேலைகளுக்கு ஓரம் அடித்தல் என தைத்துக் கொடுத்தாள் . ஆரம்பத்தில் தைப்பதற்கான துணிகள் குறைவாக வந்தாலும் போகப் போக இவள் தைக்கும் விதம் கச்சிதமாகவும் , நேர்த்தியாகவும் , இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகமாயினர் .

ராஜேஷ்வரிக்கு அவள் காசைப் பிடுங்கிக் கொள்ள எண்ணம் இருந்தாலும் ராஜசேகர் நிவியின் காசில் கை வைக்க கூடாது எனக் கட்டளை இட்டதால் அது ராஜேஸ்வரியின் கைகளுக்கு அகப்படாமல் தப்பித்தது. அது அவளின் சித்திக்குப் பிடிக்காமல் நிவிக்கு அடுக்கடுக்காக வேலை கொடுப்பார் . வேலையில் சின்ன பிசகு நேர்ந்தாலும் அன்றைக்கு முழுதும் நிவி ராஜேஸ்வரியின் பற்களுக்கு இடையில் அவலாய் அரைபடுவாள் . எத்தனை வேலைகள் அவர் கொடுத்தாலும் அதனை எல்லாம் பொறுமையோடு செய்து விட்டு துணி கொடுத்தவர்கள் சொன்ன தேதிக்குள் தைத்துக் கொடுத்து விடுவாள் .

இரு வருடங்களாக தைத்துக் கொண்டு இருந்தவள் அதனால் வரும் பணத்தை பேங்க்கில் போட்டு வைத்து இருந்தாள் . அதுவே ஒரு கணிசமான தொகையை எட்டி இருந்தது . எதற்கும் தேவைப்படும் என கையில் எப்போதும் ஆயிரம் ரூபாய் சில்லறையாக மாற்றி வைத்து இருப்பாள் . அதுவே இப்பொழுது ஆட்டோவிற்கு உதவியது .

ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்க இந்த அனாதைக்கு யார் இருக்கிறார்கள் . எல்லா பெண்களுக்கும் திருமணம் இப்படியா நடக்கிறது ?எனக்கு மட்டும் ஏன் ?கொண்டவரும் துணை இல்லை கொடுத்தவரும் துணை இல்லை என நினைத்துக் கொண்டவள் வீட்டின் வாயிலில் இருந்து உள்ளே பார்த்தவள் அதிர்ந்து நின்றாள் . (அங்கே என்னத் தெரிகிறது நாமும் உள்ளே பார்ப்போம் அடி ஆத்தி )

இவள் மட்டும் அல்ல அந்த வீட்டில் இருந்த இரு ஜீவன்களும் அதிர்ந்து தான் நின்று இருந்தனர் . அது வேற யாரும் இல்லைங்க நம்ம ராதுவும் , காவ்யாவும் தான் .

அப்படி என்ன உள்ளே பார்த்தாங்க அப்படின்னா சிவா வீட்டினில் நுழையவும் ரிதி ஓடி வந்து அவனைக் கட்டிக் கொள்ள அவள் இப்படி செய்வாள் என எதிர்பாராமல் கீழே விழ போக பின் சுதாரித்துக் கொண்டு நிற்க முயல அதுவும் முடியாமல் இருவரும் சோபாவில் விழுந்தனர் .

இதைப் பார்த்த ராதிகாவும் , காவ்யாவும் வாயில் கை வைக்க நிவியை அதிர்ச்சியில் பெட்டியைக் கீழே விட்டாள் .

சிவா காவ்யாவும் ,ராதிகாவும் நிற்பதைப் பார்த்து ரிதியை தன்னிடம் இருந்து பிரித்து எழுந்து நின்று அவளுக்கு கை கொடுத்தான் . (இல்லேன்னா எழுந்துக்க தெரியாது பாரு )

அவள் எழுந்து நின்று ஐம் ரியல்லி மிஸ் யு சோ மச் சிவு என மறுபடியும் கட்டிக் கொள்ள வர அவளை கட்டிக் கொள்ள விடாமல் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு ஐம் ஆல்சோ மிஸ் யு ரிதிமா என்றான் . அவனாக நினைத்தால் தான் ஹக்கெல்லாம் இல்லை என்றாள் இப்படித் தான் நடக்கும் . அது அவளுக்கும் தெரியும் .

இதனை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த காவ்யா ராதியிடம்

என்னடி நடக்குது இங்கே (ஏதேதோ நடக்குது நீ எதைக் கேட்கிற )

எனக்கும் தெரியல காவ்யா (ஐ ஸ்பெஷலிஸ்ட்ட போய் பாரும்மா )

சரி வா அவங்களையேப் போய் கேட்கலாம் என்றவர்கள் இருவரும் அவர்களைப் பார்த்து

என்ன நடக்குது இங்க என்றனர் கோரசாக (என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா )

சிவாவும் இவர்கள் சத்தம் கேட்டு விலகி நின்றனர் .

நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா என ராதி கேட்க ரிதி வெட்கம் கொள்ள (அய்யோ முடியல )

சொல்லுங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா என காவ்யா மறுபடியும் கேட்க

அதற்கு சிவா ஆமா மை டியர் சிஸ்டர்ஸ் மத்த க்வஸ்டீன்ஸ் எல்லாம் ரிதிகிட்ட கேட்டுக்கோங்க நான் போய் ஃபிரெஷ் ஆயிட்டு என் ரிதிய வெளில கூட்டிட்டு போகணும் பை என சொல்லி இவன் மாடி ஏற (அடேய் உன் கூட ஒரு புள்ள , அதான் நீ தாலி கட்டி . கூட்டிட்டு வந்தேல அந்தப் பிள்ளை நெனப்பு கொஞ்சனாச்சும் இருக்காடா )

இவன் கூட்டிட்டு வந்த பெண்ணவளோ மனதின் வலி அதிகமாக கண்ணீருக்கு பஞ்சம் வந்து விட்டதோ என்று உள்ளே நடப்பவற்றை உடைந்த மனதுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் . (கவலையே படாத இன்னும் கொஞ்ச நேரத்தில் இப்ப ரிதிய கொஞ்சிட்டு போனான்ல உன் வீட்டுக்காரன் அவனால பஞ்சம் வந்த கண்ணீரு பெரு வெள்ளமா மாறப்போகுது )

இவர்கள் இருவரும் ரிதன்யாவை சுற்றி வளைத்துக் கொண்டனர் .

எப்போ இருந்துடி ரெண்டு பேருக்கும் லவ்வு என ராதிகா கேட்க

டூ இயர்ஸ்ஸா தான் என்றாள் ரிதன்யா

என்னது டூ இயர்ஸ்ஸா என காவ்யா ஷாக் ஆக (ஷாக்க குறை ஷாக்க குறை இதுக்கே இப்படின்னா உன் பின்னாடி பொட்டியோட நிக்கிதே ஒரு அப்பாவி அதைப் பார்த்தா நீ என்ன செய்வ )

எங்களுக்கும் சந்தேகம் இருந்துச்சு இருந்தாலும் கத்திரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வந்துதான ஆகணும்ணு அமைதியா இருந்தோம் என ராதிகா சொல்ல

எப்டிடி நாம எல்லோரும் ஒரே வீட்ல தானே இருக்கோம் எங்களுக்கு தெரியாம எப்பிடி லவ் பண்ணீங்க என காவ்யா கேட்க

அங்கு ஒருத்தி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருந்தாள் .ஒரே வீட்ல இருக்காங்களா என அதிர்ந்தவளைக் கண்டு விதி சிரித்தது . (டிரைலர் தானப் பார்த்திருக்க முழு படத்தையும் இன்னும் பாரக்கலையே இன்னும் கொஞ்ச நேரத்தில் காட்டுவான் உன் கணவன் )

அது தான் தெரிஞ்சு போச்சு இல்லை விடுங்கடி என ரிதன்யா சொல்ல (அப்படியே உருட்டுக் கட்டை எடுத்து அவளை அடிங்கடி )

விடவா அது எப்படி நீங்களாவா சொன்னீங்க நாங்க தானே கண்டு பிடிச்சோம் என காவ்யா சொல்ல (ஆமா பெரிய கண்டுபிடிப்பு உன்னைத் தான் காணோம்னு சைன்ட்டிஸ்ட் எல்லோரும் வலை வீசி தேடிகிட்டு இருக்காங்கலாம் )

இப்போ என்னதாண்டி வேணும் உங்களுக்கு என ரிதன்யா கேட்க

ட்ரீட் கண்ணு ட்ரீட் வேணும் என்றாள் ராதிகா

எஸ் வீ வான்ட் ட்ரீட் என்றாள் காவ்யா (வான்ட்டெடா வாயக் கொடுக்கிற நீயே வேணாம்னு சொல்லுவா பாரு )

சரி சரி சரி சிவுகிட்ட சொல்றேன் உங்களுக்கு ட்ரீட் கண்டிப்பா உண்டு என்றாள் சந்தோஷமாக (உனக்கு ட்ரீட்மெண்ட் கண்டிப்பா உண்டு )

"தாலி கட்டிய மணாளன்
தன் காதலியுடன் நிற்க
சந்தோஷ சாரல்கள் அவர்கள் மேல்
பன்னீர் பூவாய் தூவ
தன் வாழ்வின் ஒரே ஒரு
எதிர்பார்ப்பும் தன் கண்முன்னே
சிதற பற்றுதலுக்கு கூட
ஆள் இல்லாமல் பரிதவித்து
நிற்கும் நங்கைக்கு
ஆறுதல் அளிப்பானா இல்லை
அகத்தில்
குடி வைத்து இருப்பவளுக்காக
காரிகை இவளின் கண்களில்
கண்ணீரை வர வைப்பானா "
 
"காரிகையின் கனவுகள் யாவும்
கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆக
கணவனின் இதயத்தில் தனக்கு
கடுகளவு கூட இடமில்லை என
அறிந்து அழுகையில் கரையும்
பெண்ணவளின் மனதில்
மென்மையாக தடம் பதிப்பானா இல்லை
வன்மையாக ரணம் கொடுப்பானா "

ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் குத்தகைக்கு எடுத்தவள் போல பூரிப்பில் இருந்தவளின் முகம் வாசலில் நின்று இருந்தவளைப் பார்த்தவுடன் இருண்டு போனது .

நல்லாத் தானே இருந்தா திடீர்னு என்ன என்று அவள் பார்த்த இடத்தை திரும்பி பார்க்க அங்கு நிவி நிற்பதைக் கண்டு காவ்யாவும் ராதிகாவும் அவளிடம் சென்றனர் .

யாருங்க நீங்க என ராதிகா கேட்க (கொஞ்ச நேரத்தில தெரியத் தானே போகுது எதுக்கு அவசரம் )

அவள் என்ன சொல்வது எனத் தெரியாமல் தலை குனிந்து நிற்க

காவ்யா அவளின் பெட்டியைப் பார்த்து எங்களுக்கு எதுவும் வேண்டாங்க என்றாள் (அவ கொடுக்கப் போறா தான் அதிர்ச்சிய வேணாம் சொன்னாலும் வாங்கத் தான் வேணும் )

என்னத்தை வேணாம் சொல்ற என ராதி அவளைக் கேட்க

பெட்டியைப் பாரு சேல்ஸ் கேர்ள்ளா இருப்பாங்களோன்னு நினைச்சு சொன்னேன் (புல்லரிக்கிதுமா உன் அறிவைப் பார்த்து )

ராதிகா அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு சரிதான் என சொல்லி நிவியிடம் திரும்பி

ஏம்மா நாங்க பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கோம் நீ ஒண்ணுமே சொல்லாம நின்னா என்ன அர்த்தம் எனக் கேட்க

என்ன சொல்வாள் கொண்டவன் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் எனக்கென்ன என்று சென்று விட கோதையவள் என்ன சொல்வாள் .

உனக்கு என்ன தான் வேணும் என காவ்யா கேட்க

சிவு தான் வேணும் சொல்லு என்ற குரல் கேட்க இருவரும் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்க்க முகம் முழுதும் கோபம் பொங்க இவர்களை நோக்கி வந்த ரிதி நிவியை ஓங்கி அறைந்து இருந்தாள் .

ஏய் என்ன பண்ற ரிதன்யா என இருவரும் அதிர்ந்து சுதாரிப்பதற்குள் மறுபடியும் ஓங்கி அறைய பொத்தென்று கீழே விழுந்தாள் நிவி . ராதி ரிதன்யாவைப் பிடித்துக் கொள்ள காவ்யா நிவியைப் தூக்கி விட்டாள் . பாவம் எழ முடியாமல் அவள் எழ ரிதி ஆத்திரம் தீராமல் நிவியை சாடிக்கொண்டு இருந்தாள் .

என்ன தைரியம் இருந்தா என் சிவு கட்டுன தாலிய என் சிவு கட்டுன தாலிய வாங்கி கிட்டு என் முன்னாடியே வந்து நிற்ப என ரிதன்யா கேட்க

என்னது சிவா அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என காவ்யாவும் ராதியும் அதிர்ந்து நிவியைப் பார்க்க அவள் கழுத்தில் இருந்த புது மஞ்சள் கயிறு மிணுமிணுக்க சோர்ந்து அழுது முகமெல்லாம் சிவந்து ஏதோ மிகப் பெரிய தவறு செய்து விட்டது போல தலையை குனிந்து நின்று இருந்தாள் வஞ்சியவள் .( நீ எப்போ தலை நிமிருரையோ அப்போ தான் உனக்கு நல்ல நேரம் சொல்லிப் பூட்டேன் ஆமா )

அப்பொழுதுதான் சிவா கையில் ஒரு சில பத்திரங்களுடன் மாடியில் இருந்து கீழே இறங்க அவனைப் பார்த்ததும் ரிதி ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டு ,

சாரி சிவு அவ கழுத்துல நீங்க கட்டுன தாலிய பார்க்கவும் என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல அதான் அவளை அடிச்சுட்டேன் சாரி சிவு என சொல்ல

விடு ரிதி நீ சாரி கேட்கிற அளவுக்கு எல்லாம் அவ வொர்த் ஆனாவ இல்லை என்றவன் அவளை தன்னிடம் இருந்து விளக்கி தள்ளி நிறுத்த அதற்குள் காவ்யாவும் ராதியும் வந்து அவனை பார்த்து

அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என ராதி கேட்க

அண்ணா அப்போ ரிதன்யா இப்போ தான அவள லவ் பண்றதா சொன்னீங்க என காவ்யா கேட்க

அய்யோ என்ன அண்ணா நடக்குது ஒண்ணுமே புரியல என ராதி கேட்க

சொல்லுங்க அண்ணா என காவ்யா கேட்க

அவன் முறைத்த ஒரு பார்வையில் இருவரின் வாய்களும் அப்படியே பசை போட்டு ஒட்டிக் கொண்டது .

ரிதியை சோபாவில் அமர வைத்து தானும் அமர்ந்தவன் வெளியே பார்த்து

மகாராணிய வாங்க அப்படின்னு ஆரத்தி எடுத்து அழைச்சாதான் வருவீங்களோ என அவன் எகத்தாளமாய் கேட்க ஏந்திழை அவளோ கலக்கம் சுமந்த கண்களுடன் அச்சம் நிறைந்த மனதுடன் வீட்டினுள் தன்னை அறியாமலே வலது கால் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் .

ராதி சிவா இருவரும் சோபாவில் அமர்ந்து இருக்க நடப்பவற்றை நம்ப முடியாமல் காவ்யா , ராதிகா இருவரும் நின்று கொண்டு இருந்தனர் . அவள் உள்ளே வரவும் அவளை மேலும் கீழும் பார்த்த சிவா தன் கையில் வைத்து இருந்த பத்திரங்களை அருகில் இருந்த மோடாவில் தூக்கி போட்டு சைன் பண்ணு என்றான் . பாவையவளுக்கோ ஒன்றும் புரிந்த பாடில்லை .

சைன் பண்ணு சொன்னேன் என்றான் அழுத்தத்துடன் .

இது இது என்ன என்றாள் பயந்த குரலில் .

நடிக்காதடி மரியாதையா சைன் பண்ணு என்றான் நிதானமாய் .

அவள் அவனைப் புரியாமல் பார்க்க நிதானத்தை இழுத்துப்பிடித்துக் கொண்டு எழுந்து அவள் அருகே வர அவள் பயந்து இரண்டடி பின்னால் வைக்க அவன் முறைக்கவும் ஆணி அடித்தார் போல அங்கேயே நின்று கொண்டாள் . (பார்வைக்கே பயந்தா எப்பிடி )

அவள் முன்னே நின்றவன் அவளைப் பார்த்து சரி உனக்கு தெரியல அப்படித் தானே ஓகே நோ பிராப்ளம் நானே சொல்றேன் . இது என்ன அப்படின்னா டிவோர்ஸ் பேப்பர் அப்பறம் ஒன் இயர் அக்ரீமெண்ட்கான பத்திரம் தெரிஞ்சு போச்சு இல்லை இப்போ சைன் பண்ணு என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் தலையில் மின்னாமல் முழங்காமல் பெரிய இடியை அவள் தலையில் தூக்கிப் போட்டான் .

அதைக் கேட்டு அதிர்ச்சியில் கண்கள் விரிய இடது கண்ணில் மனதின் வலி தாங்காமல் கண்ணீர் வழிய நின்றவளைப் பார்த்தான் கோபம் பொங்கிப் பெருக

ஏய் என்னடி இவ்வளவு நடிக்கிற , என்னமோ இப்போதான் புதுசா கேட்கிற மாதிரி . உன் ஆக்டிங் எல்லாத்தையும் எங்கேயாச்சும் காதுல பூ சுத்திட்டு உட்கார்ந்து இருப்பான்ல அவன் கிட்ட போடு . என் கிட்ட எல்லாம் உன் சீன் எதுவும் ஓடாது புரியுதா சைன் போடு என்றான் கண்கள் தீ ஜுவாலையாய் ஜொலிக்க

இல்லைங்க இல்லை அது என அவள் ஏதோ கூற வர இடையிட்ட ரிதன்யா

அவ போட மாட்டா சிவு சைன் பண்ண மாட்டா எனக்கு தெரியும் . என்னை உங்ககிட்ட இருந்து பிரிக்க பிளான் பண்றா என ரிதி நீலிக் கண்ணீர் வடிக்க அவள் அழுகையை தாள மாட்டாதவன் ஓங்கி அறைந்து இருந்தான் நிவியை . (நடிக்கிறவள நம்புறான் நடிப்புன்னா என்னன்னு தெரியாதவள போட்டு அடிக்கிறான் லூசுப் பய )

அவன் அடியின் வேகம் தாளாமல் பத்தடி தள்ளிப் போய் விழுந்தாள் நிவி . அய்யோ அண்ணா என்ன பண்றீங்க எனப் பதறி காவ்யா ராதிகா இருவரும் அவளிடம் செல்லப் போக அவளிடம் விரைந்தவன் அவளின் முடியை இழுத்துப் பிடிக்க அம்மா என அலறினாள் பெண்ணவள் .

என்னடி சொல்லிக் கிட்டே இருக்கேன் யாரு கிட்டயோ சொல்றமாதிரி எனக்கென்னன்னு நிக்கிற என மறுபடியும் அவளை அறைய சோர்ந்து அவள் கீழே விழ (ஒரு பண்ணையும் டீயையும் வாங்கி கொடுத்து கன்னத்தைப் புண்ணாக்குறானே )

அண்ணா வேண்டாம் அண்ணா என அங்கே இருந்த இரு ஜீவன்கள் நிவிக்காக பரிதாபப்பட்டு அவள் அருகே வர முயல கை நீட்டி அவர்களைத் தடுத்தவன் பார்வையில் நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது இருவருக்கும் . இங்கே பிரச்சனை எனக்கும் இவளுக்கும் மட்டும் தான் சோ என அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு கீழே விழுந்து கிடந்தவளை மறுபடியும் முடியைப் பற்றி தூக்கி மோடோவின் முன் தள்ளி விட்டவன்

சைன் பண்ணுடி என்னை மிருகமா மாத்திப் பார்க்காத அது உனக்கு நல்லது இல்லை என்றான் இறுகிய குரலில் (இப்போ மட்டும் மனுஷனா இருக்கியாக்கும் )

அவள் கண்கள் கண்ணீர் உகுக்க கன்னம் அவன் உபாயத்தால் ஐ விரல்கள் பதிந்து உதட்டின் ஓரம் ரத்தம் துளிர்க்க கை கால் எல்லாம் நடுக்கம் காண அவனை இறைஞ்சலுடன் பார்க்க

ஏய் என்னடி அப்படியே ஒண்ணும் தெரியாதவ மாதிரி பார்க்கிற , உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா இல்லை இவன் என்ன சொல்றது நாம என்ன கேட்கிறதுன்னு இருக்கியா

இல்லைங்க அது என்றவளை

ஹேய் நீ எல்லாம் யாருடி பணத்துக்காக எந்த எல்லைக்கும் போறவடி நீ , எவன் பணம் கொடுத்தாலும் அவன் கூடப் போற --------என அவன் வார்த்தைகளை விட அவளுக்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை என்றாலும் அவன் வார்த்தையில் மனதோடு மடிந்தாள் மங்கை .

அண்ணா என காவ்யாவும் ராதிகாவும் அதிர கண்களை இறுக மூடித் திறந்தவன்

சைன் பண்ணப் போறியா இல்லையா என்றான் கண்கள் சிவக்க

நான் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க பிளீஸ் என்று அவள் கெஞ்ச

ஷட் அப் இன்னும் ஒரு வார்த்தை பேசின என்று என்று விரல் நீட்டி எச்சரித்தவன் சைன் பண்ண மாட்ட அப்படித்தானே , அதுதான வாட்டசாட்டமா இருக்கான் வளைச்சு போடலாம்னு நினைக்கிறயோ , உங்க ஊர்ல வேற ஆம்பளையே இல்லையா என்ன இல்ல அடுத்தவளுக்கு சொந்தமானவன அபகரிச்சா தான் என மேலும் என்ன சொல்லி இருப்பானோ அருகில் இருந்த பேனாவை எடுத்து பேப்பரில் சைன் பண்ணிவிட்டு உடலில் இருந்த சக்தி எல்லாம் வாடிய எழுந்து நின்றாள் . அந்த பேப்பர்களை எடுத்தவன் ரிதன்யாவிடம் திரும்பி ஹாப்பி என கேட்க

ம் ஹாப்பி சிவு வெரி வெரி ஹாப்பி பட் என அவள் இழுக்க

வாட்

அது சிவு அவ கழுத்துல உள்ள தாலி என ரிதன்யா சொல்ல

நிவி தாலியை இறுக்கி பிடித்து கொண்டு அவனைப் பயத்துடன் பார்க்க

போதும் ரிதன்யா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை உனக்கு என ராதி கேட்க

தட்ஸ் எனஃப் என கத்தினான் சிவா . போதும் இவளை பத்தி என்ன தெரியும்னு இவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க , பணத்துக்காக படுக்கை விரிக்கிற இவளுக்கு சப்போர்ட் பண்ணி என் ரிதிய காயப்படுத்துறீங்க என கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரம் இல்லாமல் நிவியை வதைத்துக் கொண்டு இருந்தான் அரக்கன் .

அண்ணா என காவ்யா ஆரம்பிக்க

இந்த விஷயத்தில தேவை இல்லாம ஆஜர் ஆகாதீங்க புரிஞ்சுதா என்றவன் நிவியிடம் திரும்பி தாலிய கழட்டுடி என்றான் இரக்கமே இல்லாமல் .

" மஞ்சள் கயிறு கட்டிய மன்னவன் அந்த
மஞ்சளின் ஈரம் காயும் முன்னே
மங்கையிடம் இருந்து பறிக்க நினைக்க
கங்கையின் பிறப்பிடமாய் ஆனதே
நங்கையின் கண்கள் அவள்
நம்பி வந்த நாயகனோ
நானில்லை உன் சொந்தம்
என் காதலே என் பந்தம் என்று
இரக்கமில்லாமல் உரைத்து உயிரைப் பருக

இல்லாளன் சொல் கேட்டு
மாங்கல்யத்தை அவிழ்த்து கொடுப்பாளா
இல்லை இறுக்கிப் பிடித்து
மதித்து நடப்பாளா "
 
Top