இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

உடல் உறவை நாடாத உயிரினம் எது தெரியுமா?

Janani Naveen

Administrator

தன் இணையை இழந்து விட்டால் வாழ்நாள் முழுவதும் உடல் உறவை நாடாத உயிரினம் எது தெரியுமா?​

கதையோ கற்பனையோ அல்ல…! தன் வாழ்நாளில் தனது இணையை இழந்துவிட்டால் அத்துடன் தனது உணர்வுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் ஒரே உயிரினம் கொக்கு. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதுமட்டும் அல்ல தன் இணையை தேர்ந்தெடுப்பதற்கு முன், ஆண் கொக்கு எதிர்கால கூடுக்கான இடத்தைத் தயாரிக்கிறது. நீரால் சூழப்பட்ட ஒரு மரம் கொக்குகளின் சந்ததியினருக்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. சிறப்பான ஒலிக்களை வெளிப்படுத்துவதன் மூலம் தன் இணையை கவர்கிறது ஆண் கொக்கு.​

அத்துடன் தனது நடனத்தாலும் பெண் கொக்கை கவர்கிறது. இது இனபெருக்க காலத்திற்கு மட்டுமல்லாது ஒவ்வொரு பருவத்தின் போதும் நடனத்தின் மூலம் தன் இணையை மகிழ்விக்கிறது. இவ்வகையான நடனங்கள். ஆரம்பிப்பதே அழகு!​

முதலில் ஒரு பறவை ஒரு புல்லை வாயால் கவ்வி அதைக் காற்றில் பறக்கவிட்டு பிறகு எக்கிப் பிடிக்கும். ஒரு மீட்டர் உயரம் வரையிலும் இறக்கைகளை விரிக்காமல் அப்படியே எழும்பித் தரையிறங்கும். பிறகு மெல்ல மெல்ல இறக்கைகளை விரித்தும் மடக்கியும், குனிந்தும் வளைந்தும் நடந்தும் தலையை இடவலம் அசைத்தும் என பலவிதமாய் அபிநயிக்கும். தரையிலிருந்து ஒரு மீட்டரோ அதற்கும் மேலோ உந்தியெழும்பி பாராசூட் போல இறக்கைகளைக் காற்றில் அளைந்தபடி மெதுவாகத் தரையிறங்கும்.​

கொஞ்ச நேரத்தில் இணைப்பறவையும் ஆட்டத்தில் இணைந்துகொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக குழுவின் மற்றப் பறவைகளும் ஆட ஆரம்பிக்க, ஒரு பெரிய நாட்டியக்கச்சேரியே ஆரம்பமாகிவிடும். இணைப்பறவைகள் ஒன்றுக்கொன்று அலகால் முத்தமிட்டுக் கொஞ்சுவதும் துரத்தி விளையாடுவதும் தலையைப் பின்னுக்கு சாய்த்து மெலிதாய் கொம்பூதுவது போல் ஒலியெழுப்புவதும் ஆட்டத்தினூடே அமைந்த அழகு அம்சங்கள்.​

எல்லா உயிரினங்களுக்கும் போல கொக்கிற்கும் ஒரு கனவுகால கதை ஒன்று உள்ளது காதலால் நிரம்பபட்டது.​

மனிதர்கள் கூட்டமாய் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் வேட்டையாடவும், பெண்கள் கிழங்கு வகைகளை சேமிப்பதும் வாடிக்கை. அந்த கூட்டத்தில் செம்மயிர் கொண்ட இரு குழந்தைகள் மிகுந்த நட்புடனும் பாசத்துடனும் ஒன்றாக விளையாடி ஒன்றாக வளர்ந்தனர். இளைஞனும் இளம்பெண்ணுமாய் அவர்கள் இளமைப்பருவத்தை அடைந்தபோது இருவரும் பிரியவேண்டிய சூழல் ஏற்பட்டது. இளைஞன் ஆண்களுடன் வேட்டைக்கும் இளம்பெண் பெண்களுடன் காய்கனிகள் சேகரிக்கவுமாய்ப் பிரிந்தனர். பிரிவு அவர்களை வாட்டியது. ஒருவரை ஒருவர் காதலிப்பதை அப்போதுதான் அவர்கள் உணர்ந்தனர்.​

திருவிழாவிற்கு கூடிய போது செம்மயிர் கொண்ட இளைஞன் நடனமாட அவன் மயிர்கள் மின்னியதாம். அவன் ஆடி முடித்த சமயம் அவ் இளம் பெண்ணின் ஆட்டம் தொடங்கியது என்ன ஒரு ஆச்சர்யம் அவளின் மயிர்களும் அதே மினுமினுப்பை கொண்டிருந்தது. பார்த்தவர்கள் இவர்கள் இருவரும் மிகப் பொருத்தமான சோடியென்று எண்ணும்படியாக அவர்களுடைய நடனம் இருந்தது. திருவிழாவுக்குப் பின் அவர்கள் மறுபடியும் தங்கள் பணிகளில் ஈடுபட்டனர்​

ஒருநாள் வேட்டைக்குப் போன இளைஞன் திரும்பவில்லை. அவன் திரும்பி வராததற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள். பாம்பு கடித்து மரணம் நிகழ்ந்திருக்கலாம், வழி தவறி இருக்கலாம், மிருங்களால் அவன் வேட்டையாடிருக்கலாம் ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியவில்லை. அந்தப் பெண் பெரிதும் மனமுடைந்துபோனாள். நித்தமும் அவன் வருகையை எதிர்பார்த்து ஏமாறினாள். வேட்டைக்குச் செல்பவர்களிடம் அவனைத் தேடிக் கண்டுபிடித்துத்தருமாறு வேண்டினாள். எதற்கும் பலனில்லாமல் போகவே ஒருநாள் தானே அவனைக் கண்டுபிடிக்கக் கிளம்பிச்சென்றுவிட்டாள். அதன்பின் அவளும் என்னவானாள் என்று எவருக்கும் தெரியவில்லை.​

நாட்கல் உருண்டோட அவர்கள் வாழ்ந்த ஏரிக்கரையில் இரு செந்நிறப்பறவைகள் நடனமாடுவதை கண்டனர். அந்தப் பறவைகள் காதல் மேலிட தங்கள் செந்தலைகளை மேலும் கீழும் அசைத்தும் சுற்றிச்சுழன்றும் ஆடிய நடனம் அவர்களை வியப்புறச் செய்தது. காணாமல் போன இளைஞனும் இளம்பெண்ணும்தான் அது என்று அவர்கள் நம்பினர். காதல் தான் அவர்களை சேர்த்து வைத்ததாம்…..! உயிரோட்டமான காதல் கதை அல்லவா?​

 
சூப்பர்....
கொக்கைப் பற்றிய அறிவியல் உண்மை ஒருபுறம்.. அந்த செந்நிற ஜோடியின் காதல்கதை அது கற்பனையோ, புனைக்கதையோ எதுவாயினும் அருமை...

புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டார்லி❤️❤️❤️❤️❤️
 
செம.. உண்மையிலேயே நல்லா இருந்தது. தெரியாத தகவல் இது... ஊர் பக்கம் போனால் இனி கவனிச்சு பார்க்கறேன்..கொக்கு கூட்டத்தை...
 

Ananthalakshmi

New member
தகவல் சூப்பர் ஜானுமாகொக்குபத்திய புதுசெய்தி எனக்கு இதுவரை கேள்விபட்டதில்ல நன்றி
 
இனிமே ஸ்டோரில வர ஹீரோ கொக்கு போல உன்ன நேசிப்பேன்னு டையலாக் வைப்பீங்களா ரைட்டரி ஜி....
 
Top