இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

இரணசூரன் சபதம் !! Story Thread

Status
Not open for further replies.
ரணசூரன் சபதம்!!

சபதம் 1:

நனி பேதையே, நயன் இல் கூற்றம்!
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை;
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்;
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்,
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின்
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
இனையோற் கொண்டனைஆயின்,
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே?

-புறநானூறு 227

பொருள்:

மிகவும் அறிவற்ற, நடுவு நிலைமையற்ற கூற்றமே! அறிவில்லாததால், நீ விளைச்சளைத் தரும் விதையைச் சமைத்து உண்டாய். இச்சொற்களின் உண்மையை நீ நன்கு அறிவாய். ஒளியுடைய வாளையுடைய வீரர்களும், யானைகளும், குதிரைகளும் போர்க்களத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்தன. அவ்வாறு இறந்தும், அமையாதவனாய், நாள்தோறும் பகைவர்களின் படைகளை வென்று அழித்து, உன்னை வாட்டும் பசியைத் தீர்க்கும் பழியற்ற ஆற்றல் உடையவனாகிய, உன்னைப்போல் பொன்னாலான பெரிய அணிகளை அணிந்த வளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த கிள்ளிவளவனின் உயிரைப் பறித்தாய். இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?

“சூரா.. தவறிழைத்துவிட்டேன், தப்பிக்க மார்க்கம் இல்லை, நம் நாளைய சந்ததியாவது பிழைக்க வேண்டி இந்த முடிவு.. நீ கொடுத்த உயிரை உன்னிடமே சேர்த்து விடுகிறேன் சூரா.. அக்னி தேவன் என் பாவபட்ட உடலை ஆட்கொள்ளட்டும்.. துரோகம் எனும் வார்த்தைக்குச் சரித்திரம் என் பெயரைச் சொல்லட்டும்.. ஈன்ற குலத்தை தாரை வார்த்துவிட்டேன், வளர்ந்த மண்ணை மாற்றானிடம் அடிமைப் படுத்திவிட்டேன்.. தாய் மண்ணைக் காக்கும் இந்த தீ என் உயிரை பருகி எதிரியை பழிதீர்க்கட்டும்.. வாழ்க போர்வீரர் குலம்! ஓங்குட்டும் அக்னி தேவனின் புகழ்!” என்ற உருவம் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பால் சூழப்பட்டு, அந்த காடு எங்கும் ஜொலிக்க பற்றிக் கொண்ட தீ காட்டையும் சேர்த்து எரிக்கத் தொடங்கியது.

வான் நோக்கி தூக்கி நின்ற போர் வாளுடன் கருகி எரிந்த அந்த உருவத்தைக் கண்டு பதறி எழுந்தாள் அவள்.

“பாப்பா எழுந்துட்டாளா?” என்று அவளின் தந்தை, தாயிடம் கேட்பது காதில் விழ, கனவில் வந்தது நினைவில் நில்லாமல் குழம்பி படுத்திருந்தாள் பன்னிரெண்டே வயதுடைய தடாதகை பிராட்டி எனும் மீனாள்.

மதுரையம்பதியை ஆண்ட மலையத்வஜ பாண்டியன் மகள் மீனாட்சி அம்மனை குல தெய்வமாக கொண்ட குடும்பத்தின் இளைய வாரிசு அவள். அந்த அங்கயற்கண்ணி இவளுக்கு மறு பிறவி கொடுத்து தன் கைக்குள் கொண்டு வந்ததற்கு, என்ன காரணமோ, அதை அந்த தாயே அறிவாள்!

காலை கோவிலுக்குச் சென்று அன்னையின் பிரசாதத்தோடு வீடு வந்த தந்தையின் முன் அன்று பூத்த புது மலராய் நின்றாள் பெண். பச்சை நிறத்தில் குங்கும கரையிட்டிருக்க பட்டு பாவாடை சட்டையில், நெற்றியில் இட்ட திலகமும், அதற்கு மேல் நீண்டு பூசியிருந்த மீனாட்சி அன்னையின் திருநீறுமாய், நின்ற மகளைக் கண்கலங்க பார்த்திருந்தார் சுந்தரபாண்டியர்.

“என்ன பாப்பா, காலைலயே எங்க கிளம்பிட்டீங்க?” என்ற தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கினாள் மீனாள்.

அன்னையின் பதட்டத்தை ஓரக் கண்ணால் பார்த்த மீனாள் தந்தையை நேராய் பார்த்து, “மீனாட்சி நகர்வலம் போறா ப்பா” என்றவளின் பேச்சை எப்பவும் போல் ரசித்து சிரித்தார் சுந்தரபாண்டியர்.

மனைவியைக் கண்களால் சமாதானப் படுத்தியவர் மகளின் கேசத்தைப் பாசத்தோடு கோதி விட்டபடி எதையோ சொல்ல வந்தவருக்கு , தொண்டையில் முள் சிக்கிக் கொண்ட உணர்வு.

“இன்னைக்கு விளையாட போக வேணாம் பாப்பா, நாம வெளிய போறோம்” என்றவர் மகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், அவளைக் கடந்து சென்று கைகளைக் கழுவினார்.

“வெளியவா? எங்க? என்கிட்ட நீங்க சொல்லவே இல்ல?”

“ம்ம்…சென்னைக்கு போறோம் பாப்பா” என்றவர், மனைவிக்கு உணவை எடுத்து வைக்கும் படி கண்களால் சைகை செய்தவர், மகளையும் அழைத்துக் கொண்டு உணவு மேஜையில் அமர்ந்தார்.

“சென்னைக்கா?” என்று கண்களை விரித்த மீனாள், இதுவரை மதுரையைத் தாண்டி எங்கும் சென்றதில்லை.

“என்னப்பா திடீர்னு? அண்ணன பார்க்க போறோமா?” என்றவளின் ஆர்வம் பெற்றவர்களின் மனதை அறுத்தது.

“ம்ம்..” என்றவருக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. உணவோடு சமையல்கட்டில் இருந்து வெளிபட்ட மனைவி ராதாவை கெஞ்சுதலாய் பார்க்க, கணவனின் தவிப்பைப் புரிந்துக் கொண்டவர் மகளை சமாளிக்க கோவத்தை ஆயுதமாக்கத் தொடங்கினார்.

“ஆமா பொல்லாத அண்ணன், நீயும் நானும் தான் அவன நினைச்சு உருகுறோம், அவனுக்கு நம்ம நினைப்பு கூட இல்ல..” என்றவருக்கு சொல்லும் போதே கண்கள் கலங்கி போனது.

மகளின் நிலையை எண்ணி துடித்து, மகனுக்கு அழைப்பு விடுத்தவர்களை, “ம்ம்.. அவள இங்க கூப்பிட்டு வந்து, என் தங்கச்சி பைத்தியம்னு காட்டணுமா? ஒன்னும் வேணாம்.. அங்கயே ஏதாவது ஹாஸ்பிடல்ல காட்டுங்க..” என்றதோடு தொடர்பைத் துண்டித்த பாசமிகு அண்ணனை பற்றி மகளிடம் என்ன சொல்லிவிட முடியும்? சொன்னாலும் புரிந்து கொள்ளும் வயதில்லையே தடாதகைக்கு!

“போ ம்மா, அண்ணனும் இங்க வர மாட்டேங்குது.. என்னையும் அத கூப்பிட்டு போய் காட்ட மாட்டேங்குற..“ என்றவளின் சோகம் பெற்றவர்களை ஊசியாய் தைத்தது, அதனை மாற்றும் பொருட்டு “பாப்பா நீ ரொம்ப நாளா பீச்சுக்கு போனும்னு சொன்னியே டா” என்ற தந்தையை ஏற இறங்கப் பார்த்து வைத்தாள் மகள்.

“அதுக்கு நீங்க எனக்கு ஸ்கூல்க்கு லீவு போட்டு கூப்பிட்டு போறீங்க?” என்றவளை ஆர்வமாய் பார்த்த தந்தையிடம், “இதை நான் நம்பணும்?” என்றதும் அன்னையும் மகளும் சுந்தரத்தின் முகம் போன போக்கைக் கண்டு சிரித்து விட்டனர்.

“இல்ல பாப்பா..” என்று இழுத்த தந்தையை பார்த்த தடாதகை, “பீச்சுக்கு போய்ட்டு அப்புடியே மகாபலிபுரம் போவமா? ஸ்கூல் எக்ஸ்கசன் அப்போ கூட என்னய நீங்க விடவே இல்ல..“ என்றவளின் உடனடி மாற்றத்தை எண்ணி சுந்தரமும் ராதாவும் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டனர்.

சுந்தரம் மதுரை அருகில் திருச்சுனை கிராமத்தில் மல்லிகை கடை வைத்து நடத்துபவர். ராதா காட்டு வேலைக்கும் அரசாங்கம் தரும் நூறு நாள் வேலை வாய்ப்புக்கும் சென்று, கணவனுக்கு உறுதுணையாய் நிற்பவர்.

பாசமான குடும்பம், அதில் தப்பி பிறந்தவன் அவர்களின் மூத்த மகன் அழகர்சாமி. ஊருக்குள் இருந்தவரையில் நன்றாக தான் இருந்தான். படித்த படிப்புக்கு சென்னையில் நல்ல வேலை கிடைக்க, தங்கள் கஷ்டம் எல்லாம் மகன் தீர்த்து விடுவான் என்று உவகைக் கொண்டனர் பெற்றோர்.

அதில் கூடை மண்ணை அள்ளி போட்டவன், “காலம் பூரா உங்களுக்கே சம்பாதிச்சு கொட்டுனா, நாளைக்கு எனக்கும், என் குடும்பத்துக்கும் என்ன மிஞ்சும்?” என்றவன் பெற்றவர்கள் என்றும் பாராமல், ”காலம் போன காலத்துல உங்கள யாரு இன்னொரு புள்ளைய, அதுவும் பொம்பள புள்ளையா பெத்துக்க சொன்னது?” என்று கேட்டவனின் பேச்சு, பெற்றவர்களால் எதிர்த்து பேசக் கூட முடியாமல் கூசிப் போக வைத்தது.

அழகர்சாமி பிறந்து பன்னிரெண்டு வருடம் கடந்து பிறந்தவள் தடாதகை. வயிற்று வலிக்காக மருத்துவரிடம் சென்றவர்களுக்கு அதிசயமாய் உருவானவள்.

அப்போதும் மருத்துவர் சொன்னது, கரு குழாயில் (fallopian tube) குழந்தை வளர்வதால் அதை உடனே அழித்து விடுவது நல்லது, இல்லை என்றால் குழந்தை வளர வளர, குழாய் பெருத்து வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றதும் சுந்தரம் பதறிவிட்டார்.

இந்த வயதில் குழந்தைப் பெற்றுக் கொள்வதே சிரமம் என்ற நிலையில் மனைவியையாவது பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் தான் அவருக்கு.

ராதாவோ பல தலைமுறையாய் பெண்பிள்ளை பிறக்காத இந்த வம்சத்தினருக்கு, தாய் மீனாட்சி இந்த சிசு மூலம் தங்கள் முன்னோர் செய்த பிழைப் பொறுத்து மன்னிப்பு வழங்குவதாகவே தோன்ற, பிள்ளையை அழிக்க சம்மதிக்கவே இல்லை.

ராதாவா? குழந்தையா? என்ற நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் மனைவியைக் கொண்டு சேர்த்தார் சுந்தரம்.

அன்று இரவு மனைவிக்கு வலி வருவதற்கு சில மணி நேரம் முன்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு மதுரை மாநகரமே கொந்தளித்து6 கொண்டிருந்தது.

பல வருடம் தன் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட சாபம் விஷ்வரூபம் எடுத்து தன் மனைவியை காவு கேட்கிறதோ? அன்னை மீனாட்சி கோபம் குறையவில்லையோ? தீ விபத்துக்கும்? தன் வாரிசுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமோ? என்று புத்தி பேதலித்து தன் மனைவியை வைத்திருக்கும் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் பதைபதைப்புடன் நின்றிருந்தார் சுந்தரம்.

பல வருடங்களுக்கு முன் சுந்தரத்தின் வம்சாவழியினர் தன் குடும்பத்து வித்தை, வீட்டில் பிறந்த மகாலக்ஷ்மியை, தங்களை விட கீழ் பிறப்பில் பிறந்த ஒருவனை காதலித்தற்காக அடித்து துன்புறுத்த, அந்த ஊரின் முச்சந்தியில் தன் உடலுக்கு தீ வைத்த அந்த பெண், “பாண்டி வம்சம் காலம் காலமாக பெண்களுக்கு அநீதி இழைத்து, அன்னை மீனாட்சியின் பெரும் கோபத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் இந்த வீட்டின் பிறந்த மகளாகிய நான்.. என்னை ஆட்கொள்ள போகும் இந்த அக்கினியின் சாட்சியாய் சொல்கிறேன்.. இனி ஒரு பெண் மகள் இந்த குடும்பத்தில் பிறக்க மாட்டாள்; வீட்டிற்கு வரும் பெண் மகளும் நெடுநாள் நிலைத்து இருக்க மாட்டாள்; அதைமீறி ஒரு பெண் சிசு இவ்வீட்டின் குலமகளுக்கு பிறந்தால் அன்று என் அன்னை மீனாட்சி, நான் பிறந்த வம்சத்தை மன்னித்து வாழ வைக்க அவதரிப்பாள்..”

இதுவரை சுந்தரபாண்டியர் குடும்பத்தில் பெண் பிள்ளைகள் பிறக்கவே இல்லை. வீட்டுக்கு வாழவந்த பெண்களும் நாற்பது வயதைக் கடந்து உயிர் வாழ்ந்ததும் இல்லை.

அந்த சாபத்தை எண்ணி எண்ணி, மனைவிக்காக வெளியே தவம் இருந்தவர் காதுகளுக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் தீ பற்றிக் கொண்டு எறிவதாக செய்தி வந்தது. பயம் நெஞ்சைக் கவ்வ, அன்னை மீனாட்சியை நோக்கி கால்நடையாக சென்றார்.

மனமெல்லாம், “ஆத்தா பல வருஷம் என் குடும்பத்த தண்டிச்சது பத்தாதா? பண்ணின தப்ப மன்னிக்க மனசில்லையா? என் பொண்டாட்டியையும் புள்ளையையும் பத்திரமா என்கிட்ட குடுத்துரு தாயி.. தங்க தட்டுல வச்சு தாங்கிறேன், உன் வம்சத்த நீயே அழிக்கலாமா? உன் கோவத்தை குறைச்சு என் உசுர காப்பாத்த கூடாதா? என் பெண்டாட்டியோட சேர்த்து என்னையும் என் புள்ளையையும் உன்கிட்டையே கூப்பிட்டுக்க ஆத்தா..” என்று எரியும் கூரையின் அடியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துக் கிடந்தவரை, அங்கு கூடி இருந்தோர் காப்பாற்ற முயல, “அம்மா.. எனக்கு வழி சொல்லு இல்ல.. என்னையும் உன்கூட கூட்டுக்க “ என்று கூட்டத்தை மீறி நெருப்பை நெருங்கியவருக்கு பதிலாய், அன்னை மீனாட்சி மக்களோடு சேர்ந்து மழையைத் தருவித்து, தன் உடைமையையும் தன் மக்களையும் எப்போதும் போல் காத்துக் கொண்டாள்.

அத்தோடு ராதாவும், சுந்தரபாண்டியரும் குடும்பத்தின் சாபம் தீர்க்க அவதரித்த ஒற்றை பெண்மகவுக்கு தன் அன்னை மீனாட்சியின் பெயரை தடாதகை பிராட்டி என்று சூட்டி, உயிராய் வளர்க்கத் தொடங்கினார்.

அந்த குடும்பத்தின் குலவிலக்கை, தான் வணங்கும் தெய்வத்தின் மறுபிறப்பாய் வந்த மகளின் நிலை அறியாது தவித்து நிற்கும் இந்த தம்பதியருக்கு, அருளும் வழியும் அவளாகி போவாளா?

ரணசூரன் வருவான்..
 
சபதம்-2

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

-குறள் 861

பொருள்:

தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.



மதுரையில் இருந்து சென்னை செல்லும் இரவு ரயிலில் தன்னை கடந்து போகும் மரங்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தார் சுந்தரம். அவரின் மடியில் தலை வைத்து அயர்ந்து உறங்கி போயிருந்தாள் மீனாள்.

சுந்தரத்தின் மனைவி ராதா இரண்டு நாட்களாக அழுது அழுது கலைத்து போய் ரயிலின் தாளத்தில் தன் கவலை மறந்து தூங்கி போயிருந்தார்.

சுந்தரத்தின் நினைவு முழுதும் மகளின் உடல்நிலையிலே சிக்கி தவித்தது,அதுவும் இரண்டு மாதங்கள் முன்பிருந்து தான் அவளின் நடவடிக்கையில் மாற்றம் உண்டானது.

அன்று கடையில் வேலை முடித்து, காட்டு வேலைக்கும் சென்று உடல் கழித்து போய் வீடு வந்த சுந்தரத்தை எப்போதும் சிரிப்புடன் ஓடி வரும் மகளின் குறல் வரவேர்க்கவில்லை.

மாறாக தண்ணி குவளையுடன் மனைவி வர, அவருக்கு பின் மகளை தன் கண்கள் தேடி அலைந்தது.

மகனின் செயலால் நொந்து போன உள்ளத்திற்கு மகளின் அன்பும், சிரிப்பும் அருமருந்தாகி போனது. வேலை பழுவில் உடல் தோய்ந்து போகும் போது ஒவ்வொரு நொடியும் மகளின் அணைப்பு சொல்லும், ‘எனக்காக ஓடு’ என்று.

தள்ளாடி இனி ஓட முடியாது என்று கால்கள் துவலும் போது எல்லாம் அந்த சொல் மீண்டும் ஓடும் உத்வேகத்தை தூண்டிவிடும் மீனாளின் தந்தைக்கு.

அன்றும் அதை எதிர் பார்திருந்தவருக்கு ஏமாற்றாமாய், கணவனின் தேடலை உணர்ந்த ராதா “மீனு சீக்கிரமே தூங்கிட்டா” என்றவர் கணவனுக்கு இரவு உணவை எடுத்து வைக்க சமையல்கட்டிற்கு சென்று விட, சுந்தரம் மகளை காண தங்கள் அறைக்குள் நுழைந்தார்.

ஆழந்த உறக்கத்தில் இருக்கும் மீனாளின் தலைமுடியை கோதிவிட்டவர், அறையை விட்டு வெளியேற முயலும் நேரம், மகளிடம் இருந்து முனங்களாய் சில வார்த்தைகள் வர, திரும்பி மகளை பார்த்தவர், மகளின் நிலை கண்டு பதறி போய் மகள் அருகில் விரைந்தார்.

மீனாவை நெருங்கி அவள் தோலில் கைவைத்தவரின் கைகளை ஒரு முறை உறுத்து பார்த்தவள், அந்த கைகளை மின்னல் வேகத்தில் தட்டி விட்டவளின் செய்கையில் அதிர்ந்த நின்றார் சுந்தரம். அடுத்த நொடியே கட்டிலில் இருந்து பாய முயன்றவளை தன் அதிர்ச்சியையும் மீறி பதட்டத்துடன் கைகளில் இருக்கி கொண்டார் சுந்தரம்.

தன்னை இருக்கிய கைகளில் இருந்து விடு பட போராடியள் “ஆக்..ஆக் ..இஸ்கி தக்லீஃப்.. பராயி கரம் மேரே மதத் கரேஂ” என்று ஏதோ புரியாத பாஷையில் கத்தியவளின் கருவிழிகள் அசையாமல் ஒரே இடத்தை வெறித்து பார்க்க, உடல் மொத்தமும் தூக்கி போட வாயில் இருந்து வினோதமான சத்ததுடன் தன் கைகளில் துடித்து கொண்டிருந்த மகளை பார்த்து துடி துடித்து போனார் சுந்தரம்.

மகளை அப்படி பார்க்க முடியாத சுந்தரத்தின் கைகள் நடுங்க, இந்த சத்ததில் சமையல் அறையில் இருந்து ஓடி வந்த ராதா மகளின் நிலையையும், கணவனின் பதட்டத்தையும் கண்டு நிலமையை தன் கையில் எடுத்து கொண்டார்.

நிலைகுத்தி போய் இருந்த மகளின் கண்களை பார்த்த ராதாவிற்கு நெஞ்சுக்குள் குளிர் எடுத்தாலும், தன்னை திடப்படுத்தியவாறு மீனாவின் கன்னதில் சுளிர் என்று ஒரு அரை விட, அதில் கண்கள் சொருகி மயங்கி சுந்தரத்தின் கைகளில் தோய்ந்து விழுந்தாள் சின்னவள்.

மகளின் வினோத செயலே தந்தையின் மூளைக்குள் மீண்டும் மீண்டும் ஓட, மனைவி மகளை அடித்ததோ, மகள் தன் கைகளில் சுருண்டு விழுந்ததோ, எதுவுமே அவருக்கு கருத்தில் படவில்லை.

மகளை கைகளில் ஏந்தியவாறு எதிரே இருக்கும் சுவரை அதிர்ந்து பார்த்திருந்த கணவரை நிகலவுக்கு கொண்டு வரும் வழி அறியாது முழித்த ராதா, மகளை தெளிய வைக்கும் முயர்ச்சியில் இறங்கினார்.

படுக்கைக்கு அருகே உள்ள மேஜையில் இருந்த தண்ணி குவலையை எடுத்து, மகளின் முகத்தில் சுள் என்று அடித்தவர், தன் கைகளால் மீனாவின் கன்னத்தை தட்டி எழுப்ப, அதில் சற்று சுயம் தெளிந்தவள் தூக்க கலக்கத்தில், “ம்மா.. பாத்ரூம் போனும்” என்றவாறு தந்தையின் கைகளில் இருந்து எழுந்து குளியலறை புகுந்து கொண்டாள்.

மகள் அசைந்ததும் நடப்புக்கு வந்த சுந்தரம், மகள் சென்ற வழியை பார்த்தவாறு, மனைவியிடம், “என்.. பாப்பா.. என்ன ராதா நடக்குது?” என்று வார்த்தை வராமல் தேடி, இறுதி வார்த்தையை தன்னையும் அறியாமல் சத்தமாக வெளிவந்துவிட்டது.

அதேநேரம் குளியாரை கதவு திறந்து மீனா வெளியே வந்து, ”ப்பா எப்போ வந்தீங்க?” என்றவள் கட்டிலில் மீது ஏறி தந்தையின் மடியில் தலை சாய்த்து கொண்டாள்.

மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த கணவரிடம் இருந்து மகளை திசை திருப்ப முயன்ற ராதா, “இப்ப தான் வந்தாறு, வந்ததும் உன்னைய பார்க்க வந்துட்டாரு” என்றவர் கணவரைன் தொலை தொட்டு கண்களால் சைகை செய்து,அதை மகளிடம் இருந்து மறைக்க, “அதான் மகள பார்த்தாச்சுல வாங்க சாப்பிடலாம்” என்று வெளியே அழைத்து சென்று விட்டார்.

அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் மீனாவின் செய்கை அவருக்கு பயத்தை கொடுத்தது, அதிலும் இரவு தூங்கிய பின் கனவில் எதையோ கண்டு பயந்து விழிப்பவள், “தீ..எரியுது ப்பா, எரியுது” என்று கை கால்களை உதறி கொண்டு அலறுபவள், அடுத்த சில நொடியில் மயங்கி சரிந்து விடுவாள்.

இதில் சுந்தரமும் ராதாவும் புரிந்து கொண்டது, இரவில் நடக்கும் எதுவும், மீனாவுக்கு காலையில் ஞாபகம் இருப்பதில்லை.

அடுத்த இடியாக, மூன்று நாட்கள் முன்பு பள்ளிக்கூடம் சென்ற மகள், பள்ளிக்கு அருகில் இருக்கும் மசூதிக்குள் நுழைந்து, அங்கு பெண்கள் தொழுகை செய்யும் இடத்தில் மண்டியிட்டு அல்லாஹு அக்பர் என்று கூறி இருகைகளையும் புஜங்களுக்கு நேராக உயர்த்தி, வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொண்டு தன் துஆ வாய் ஓத தொடங்கினாள்.

“ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க”

மீனா தன் தொழுகையை மிகவும் பழக்க பட்டது போல் செய்ததை அங்கிருந்த யாராலும் நம்பமுடியவில்லை.

திருச்சுனாய் கிராமமும் அல்லாது நகரமும் அல்லாது இடைபட்ட ஊர். இங்கு இருக்கும் பிரபல மாளிகை கடைகள் இரண்டில் ஒன்று சுந்தரத்தின் கடை.

சுந்தரத்தின் குடும்பத்தை அறியாதவர் அங்கு யாரும் இல்லை, முக்கியமாக துரு துரு என்று அவர்கள் கடையில் சுற்றி வரும் மீனாவை தெரியாதவர் அங்கு யாரும் இல்லை.

அப்படி இருக்க மீனாவின் மசூதி வருகையும், அங்கு அவள் தொழுகை செய்துவிட்டு சென்றதும் ஊர் முழுதும் பேச்சு பொருளாகி விட, விஷயம் அறிந்து மசூதிக்கு விரைந்த சுந்தரத்தின் கண்முன் மகள் மசூதி வாசலில் நின்றிருந்தாள்.

மீனாவை நெருங்கிய சுந்தரம், “பாப்பா..” என்று அழைக்க அவரை திரும்பி பார்த்தவளின் பார்வையில் இருந்த அந்நிய தன்மையில் மனிதர் இரண்டடி பின் நகர்ந்து நின்றுவிட்டார்.

அங்கு இருந்த அனைவரையும் சுற்றிமுற்றி பார்த்த மீனா, சுந்தரத்தை நெருங்கி “யே கவுன்சி ஜகா ஹேய்?” என்றவளின் பேச்சு புரியாமல் தந்தையவரோ “ஹான் என்ன பாப்பா?” என்றவரின் கண்கள் மகளின் நடத்தையில் கலங்கிவிட்டது.

அவரின் கலங்கிய கண்களை பார்த்தவள், “ரோனா மத்” என்றவளின் கவனம் தனக்கு பின்னே கேட்ட பெயரில் திரும்பி பார்க்க, அங்கு நின்ற பெரியவரிடம், “ஆப்னே கியா காஹா ? ஹனா .. ஹனா ஸஹரா..” என்றவள் வார்த்தை முடியும் முன் மயங்கி சரிய , அவளை எப்போதும் போல் தன் கைகளில் தாங்கி கொண்டார் சுந்தரம்.

அதான் பின் திருச்சுனை முழுயதும் ஒரே பேச்சு தான். அது மீனாவின் நடவடிக்கை பற்றியதாக மாறி போனது. குறிப்பாக “சுந்தரம் மக மசூதி போனாலாம்ல?” “சுந்தரம் மகளுக்கு பேய் புடிச்சுறுக்கம்” “அந்த புள்ளைக்கு பைத்தியம்னு சொல்றாங்க?” என்பது போல் பல வதந்திகள் ஊர் முழுவதும் பரவ தொடங்கியது, இது மீனாவின் காதுக்குள் எட்டுவதற்கு முன் அவளை சென்னையில் பெரிய ஆஸ்பத்திரியில் காட்ட சொல்லி மதுரை மருத்துவர் கூற, அதற்காகவே இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர் சுந்தரம் குடும்பத்தினர்.

இது தான் பிரச்சனை என்று சொல்லிவிட்டாள் அதற்கு சிக்கிச்சை மேற்கொள்ளலாம், என்னவென்றே தெரியாமல் எதற்கு சிகிச்சை எடுப்பது.

அதைவிட முக்கியம் மகளின் குழந்தை தனம் பாதிக்க படாமல் பார்த்து கொள்வது. இன்று வரை தனக்கு நடப்பது மீனாலுக்கு தெரியாது, அதுவரை தன் குலதெய்வ அருள் தன் குடும்பதுக்கு இருப்பதாகவே பட்டது.

இவர்கள் மீனாவை பற்றிய அறிந்து கொள்ள சென்னை நோக்கிசெல்லும் அதே நேரத்தில், கடல் கடந்து சில நிகழ்வுகள் நடக்க தொடங்கின.

லண்டன் மாநகரம்

மாலை நேரம் மிதமான வெயிலில் இங்கலாந்தின் முக்கியஸ்தர்கள் பொழுது போக்க விளையாடும் கோல்ஃப் கிளப் புல்வெளியில் வெள்ளை நிற சட்டையும் சராயும் அணிந்து பலர் தங்கள் கைகளில், நுனியில் வளைந்த கோல்ஃப் மட்டை மற்றும் அதன் சம்மந்தம் உள்ள அனைத்தையும் சிறிய வகை வண்டியில் (கோல்ஃப் கார்ட்) விளையாடுபவர்கள் பின் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

அந்த சமவெளி பகுதியில் வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க அணியும் தொப்பியால் தன் கண்களை மற்றவரிடம் இருந்து மறைத்து, கவனத்தை அந்த சின்ன வெள்ளை பந்தில் பதிதிருந்தவன் உயரம் ஆறடிக்கும் மேல் இருக்க, அவனிடம் இருந்த நிமிர்வு பார்ப்பவரை சற்று தள்ளியே நிற்க வைத்தது.

அது மட்டுமே அவனை தனித்து காட்டிவிடவில்லை, அவனை சுற்றி இருக்கும் கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு வலையம், வெள்ளை உடை அணிந்த மனிதர்களின் நடுவில் கருப்பு உடை அணிந்த மாமிச மலைகள் நான்கு புறமும் அவனை சுற்றி அரண் அமைதிருந்தது.

அவன் கரண் பிரதாப் சிங், ராஜஸ்தானிய அரச குடும்பத்தின் அடுத்த பட்டத்து இளவரசன். ராஜா வீர் பிரதாப் சிங் மற்றும் ராணி மீரா பாய் பரிகர்க்கும் பிறந்த மூத்த மகன். இவனுக்கு ஒரு தங்கை ரஷ்மி சிங் டோடியா , டோடியா குடும்பத்தின் மருமகள்.

ராஜஸ்தானிய அரச குடும்பத்தின் கடைக்குட்டி உதய் பிரதாப் சிங், பள்ளிபடிப்பை முடிக்க போகும் இளம்கன்று.

கரணின் கண்கள் அந்த சின்ன பந்தில் குறி வைத்திருக்கும் நேரத்தில், எங்கிருந்தோ சீறி வந்த துப்பாக்கி குண்டு அவன் தோள்பட்டையை ஒரசி விட்டு செல்ல, அந்த திடீர் தாக்குதலில் வலியில் முகம் சுருக்கியவன் கண்களுக்குள் வந்து நின்றான் அவன் கலில் ஹாசிம், கரண் பகை கொள்ளும் தனக்கு சமமான பகைவன்.

ரணசூரன் வருவான்..
 
Status
Not open for further replies.
Top